தேதி: May 16, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சந்தவை - 3 கையளவு
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - அரை மூடி
எண்ணெய் - 2 கரண்டி
உப்புத்தூள் - சிறிது
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை - சிறிது (விரும்பினால்)
சந்தவையை பிழிந்து உதிர்த்தாற் போல் எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் நன்கு வதங்கியதும் உதிர்த்து வைத்துள்ள சந்தவையைப் போட்டு, உப்புத்தூள் தூவிக் கிளறவும்.(சந்தவையில் ஏற்கனவே உப்பு இருப்பதால் சிறிதளவு சேர்த்தால் போதும்).

நன்கு உதிர்ந்து வந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு, கொத்தமல்லித் தழை மற்றும் தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.

இலேசான புளிப்புச் சுவையுடன், மென்மையான லெமன் சந்தவை தயார்.

<a href="/tamil/node/28279"> இனிப்பு சந்தவை </a> குறிப்பிலுள்ளவாறு சந்தவையை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
Comments
செந்தமிழ்செல்வி அக்கா
எளிதான குறிப்பு.. அருமையான புகைபடம்..
செல்வி
இடியாப்பம் போல இதிலும் எல்லா வகையும் செய்யலாம் போல... நல்லா இருக்குங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
செல்வி அக்கா
சூப்பர்... குழந்தைகளுக்குனா வேர்கடலை இல்ல முந்திரி சேர்ப்போம்
செந்தமிழ்செல்வி
சுலபமாக செய்யகூடிய குறிப்பு அருமையாக உள்ளது.
அபிராமி
அன்பு அபிராமி,
பதிவிற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி
அன்புடன்,
செல்வி.
வனி
அன்பு வனி,
ஆமாம் வனி இடியாப்பம் போல இதிலும் நிறைய வகைகள் செய்யலாம் நன்றி வனி!
அன்புடன்,
செல்வி.
பிரியா
அன்பு பிரியா,
குழந்தைகளுக்கு அப்படித்தான் சேர்ப்பாங்க. நாங்க சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போது அப்படி சாப்பிட்டு இருக்கோம்:))
நன்றி பிரியா!
அன்புடன்,
செல்வி.
பாலபாரதி
அன்பு பாலபாரதி,
சந்தவை செய்துட்டா இது சுலபம் தான். மிக்க நன்றி!
அன்புடன்,
செல்வி.
செல்விமா
நல்லாருகுது சூப்பர் செல்விமா
லெமன் சந்தவை
அன்பு செல்வி மேடம்,
லேசான மஞ்சள் நிறத்தில், பாக்கறதுக்கே ரொம்ப அழகாக இருக்கு. நல்ல குறிப்பு.
அன்புடன்
சீதாலஷ்மி
செல்விம்மா
சந்தவை இடியாப்பம் தானே செல்விம்மா இல்ல இதுவேறவா. இடியாப்பத்தில் இப்படி செய்வோம் அது வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். உங்க குறிப்பும் நல்லா இருக்கு செல்விம்மா
இனியா
அன்பு இனியா,
பதிவிற்கு நன்றி இனியா!
அன்புடன்,
செல்வி.
சீதாலஷ்மி
அன்பு சீதாலஷ்மி,
வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!
அன்புடன்,
செல்வி.
தேவி
அன்பு தேவி,
சந்தவை வேறு, இடியாப்பம் வேறு. இடியாப்பம் பச்சரிசி மாவில் பிழிந்து வேக வைப்பது. சந்தவை புழுங்கலரிசி அரைத்து, இட்லி ஊற்றி பிழிவது.
மிக்க நன்றி தேவி.
அன்புடன்,
செல்வி.
செல்விக்கா
லெமன் சந்தவை பார்க்க அழகா இருக்கு அக்கா. ஏற்கனவே சந்தவை பிழிய செஞ்ச முயற்சி தோல்வில முடிஞ்சிடுச்சி. பார்த்து ஆசைப்படுறதோட நிறுத்திக்குறேன்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா