கரும்புள்ளி

முகத்தில் கரும்புள்ளி போவதற்க்கு என்ன செய்ய வேண்டும்?

டியர் பானு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை வீட்டிலிருந்தே நீராவியினுதவியால் அகற்றி விடலாம். இந்த சிகிச்சையை ஒழுங்காக செய்வதர்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்கவேன்டும்.முதலில் முகத்தை நன்கு கழுவி ஈரத்தை ஒற்றி எடுக்கவும்.பிறகு இரண்டு கைகளிலும் ஏதாவது ஒரு கிரீமை அல்லது ஆலிவ் ஆயிலை பூசிக்கொண்டு கிழிலிருந்து மேலாக வட்ட வட்டமாக விரல்களால் ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு முகத்தை நீராவியில் காட்ட வேண்டும்.சளி பிடித்திருக்கும் பொழுது எப்படி செய்வோமோ அதைப் போலவே ஒரு கெட்டியான துண்டால் தலையை முழுவதும் மூடி நீராவி வெளியேராமல் முகத்தை காட்ட வேண்டும்.முகம் முழுவதும் நன்கு வியர்க்கும் வரை வைத்திருந்து அதை ஒரு காகித நேப்கினால் ஒற்றி எடுக்கவும்.இப்பொழுது கரும்புள்ளிகள் நன்கு இளகி இருக்கும். அதை இந்த சிகிச்சைக்ககவே ஒரு சிறிய சாதனம் இருக்கின்றது. அல்லது ஏதாவது ஒரு நாணயத்தை எடுத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சற்று சாய்வாக பிடித்து அழுதினால் கரும்புள்ளிகள் வெளியேருவதை காணலாம்.இப்படியாகரும்புள்ளிகளை முடிந்தவறை அகற்றிவிடவும்.பிறகு கடலை மாவை தண்ணீரில் கெட்டியாக கரைத்து முகம்முழுவதிலும் பூசி பத்து நிமிடம் காயவைத்து மிதமான நீரினால் அதை இலேசாக அகற்றிவிட்டு மீண்டும் ஒரு முறை முகத்தை நன்கு கழுவி ஒற்றிஎடுத்துவிடவும் அவ்வளதான். மாற்றத்தை கைகளாலே நன்கு உணரலாம்.இந்த சிகிச்சையை வாரா வாரம் கரும்புள்ளிகள் முற்றிலும் நீங்கும் வரை செய்ய வேண்டும. பிறகு மாததிர்கொரு முறை செய்தால் முகத்தை எந்த மாசு மரு இல்லாமல் பாதுகாக்கலாம். இந்த சிகிச்சையை பாதுகாப்பான முறையில் செய்வதர்க்கு நீராவி பிடிக்கும் சாதனத்தை சூப்பர் மார்க்கட்டில் பியூட்டி அண்ட் காஸ்மட்டிக் பொருட்கள் இருக்கும் பகுதியில் வைத்திருப்பார்கள். விலையும் மலிவாகத்தான் இருக்கும்.அதனை வாங்கி வைத்துக் கொண்டால் மிகவும் பயன்படும்.ஒவ்வொரு பெண்மணியும் வைத்திருக்க வேண்டிய அழகு சாதனம் இது.ஒகே பானு இந்த சிகிச்சையினால் நல்ல பலனை அடைவீர்கள் என்று கூறி எனது கருத்தை முடித்துக் கொள்கிரேன்.நன்றி.

Manohari அவர்கள் கொடுத்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி.தாங்கள் கூறிய முறையை செய்து பார்க்கிறேன். தாங்கள் கூறிய நீராவி சாதனத்திற்க்கு ஆங்கிலத்தில் பெயர் என்ன என்று சொல்லுங்கள்.இந்த முறையை தவிர வேற முறை இருக்கிறதா?
ஆலிவ் ஆயில் எதற்கு எல்லாம் பயன்படுத்தலம்.நன்றி.

நல்லது பானு. நீராவி பிடிக்கும் சாதனத்தின் பெயர் ஃபேஷியல் ஸ்டீமர் (Facial steamer). எப்படியும் இரண்டு மூன்று வித கம்பனியின் பெயரில் விற்பனை செய்வார்கள். ஆகவே குழப்பம் அடையாமல் இருப்பதிலே விலை மலிவானதாக தேர்வு செய்தால் போதுமானதாக இருக்கும்.
ஆமாம் இந்த ஒரு சிகிச்சை முறை தான் கரும்புள்ளியை நீக்கவும், வராமல் தடுக்கவும் நல்ல நிரந்தரமான நல்ல பலனைத் தரும்.மற்றபடி வேறு முறையான பிய்த்தெடுக்கும் முறை உள்ளன. ஆனால் அவற்றால் தற்காலியமான பலன் தான் கிடைக்கும். கடையில் சென்று பார்த்தீர்களானால் Blackheads remover என்ற ஸ்ரைப்ஸ் கிடைக்கும். அதையும் முயற்ச்சி செய்து பார்க்கவும்.
ஆலிவ் ஆயிலை தேங்காஎண்ணெய், நல்லெண்ணெயை எதர்கெல்லாம் பயன் படுத்துவோமோ அவற்றிர்கெல்லாம் பயன் படுத்தலாம். தலை முதல் கால் வரையான வெளிப்புச்சுதலுக்கும், சமையலுக்கு பொரிக்க, வறுக்க, தாளிக்க போன்ற எல்லாவிதத்திற்க்கும் பயன் படுத்தலாம். ஒகே நன்றி.

Manohari அவர்களுக்கு மிக்க நன்றி.

மேலும் சில பதிவுகள்