ஓட்ஸ் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

தேதி: May 20, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

ஓட்ஸ் - 2 தேக்கரண்டி
ஸ்ட்ராபெர்ரி - 10
குளிர்ந்த பால் - ஒரு கப்
சீனி - தேவைப்பட்டால்


 

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் ஓட்ஸைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். (சூடாகும் வரை வறுத்தால் போதும்).
மிக்ஸி அல்லது ப்ளண்டரில் வறுத்த ஓட்ஸுடன் ஸ்ட்ராபெர்ரி பழம், பால் மற்றும் சீனி ஆகியவற்றைப் போடவும்.
பிறகு அவற்றை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
டேஸ்டி & ஹெல்தி ஓட்ஸ் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் ரெடி.

ஸ்ட்ராபெர்ரிக்குப் பதிலாக பேரீட்சை மற்றும் வாழைப்பழம் சேர்த்தும் செய்யலாம். விரும்பினால் இத்துடன் பாதாம் அல்லது பாதாம் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுப்பின் சர்க்கரைக்குப் பதிலாக தேன் கலந்து கொடுக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சத்தான‌ எளிமையான‌ மில்க் ஷேக்

ஹெல்தி ரெசிபி வாணி :) ஸ்ட்ராபெரியெல்லாம் நினைவுபடுத்தாதீங்க... :( சிரியாவில் கிலோ கிலோவா முழுங்கினேன்... இங்க கிடைக்கிறதுலாம் சுவையே இல்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலர்ஃபுல் மில்க் ஷேக். அருமை... அருமை.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஆரோக்கியமான குறிப்பு, ஓட்ஸ் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் சூப்பர்.

அன்பு வாணி,
நல்ல‌ கலர்ஃபுல்லான‌ மில்க் ஷேக். ஸ்ட்ராபெர்ரி சீசன் வரட்டும்:(

அன்புடன்,
செல்வி.

ஹெல்தி மில்க் ஷேக்,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஹெல்தியான மில்க் ஷேக். வித்தியாசமானதா கூட இருக்கு ஓட்ஸ் கூட ஸ்ட்ராபெர்ரியா? இங்க செம வெயிலா இருக்கு பிள்ளைகளுக்கு ஸ்டாராபெர்ரி ரொம்ப பிடிக்கும் செய்து கொடுக்கறேன்

அபிராமி, வனி, உமா, பாலபாரதி , செல்வி மேடம், முசி, உமாகுணா அனைவரின் வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி

very very nice

all is well