குழந்தைகளுக்கு பாட்டில் பயன்படுத்தாதீர் - என் அனுபவம்.

குழந்தைகளுக்கு பாட்டில் பயன்படுத்தாதீர் - என் அனுபவம்.

நான் என் 7 மாத குழந்தைக்கு பாட்டில் பயன்படுத்தி தண்ணீர் குடுத்தேன். சில நாட்களில் loose motion வர தொடங்கியது. டாக்டர் - இடம் சென்ற போது, அவர் infection ஆகி இருப்பதக கூறினார். இது பாட்டில் பயன்படுதியதால் வந்தது. ஒரு வாரம் ஆகிட்ரு அது சரி ஆவதற்கு. அதனால் spoon-ல் allathu medicine filler தண்ணீர் குடுங்கள். பாட்டில் பயன்படுத்தாதீர்கள்.

பாட்டில் பழக்கம் தவறுதான்.. பாட்டில் தரம் உயர்ந்ததை பயன்படுத்த‌ வேண்டும்.. அப்போதுதான் அதை சுடு நீரில் கொதிக்க‌ வைக்க‌ முடியும்.. பாட்டில் கழுவ‌ அதற்கு என்ற‌ தனி லிக்விட் இருக்கு அதில் கழுவி சுடு நீரில் போட்டால் போதும் எந்த‌ பிரச்சனையும் வராது...இந்த‌ வெயில் காலத்தில் ஸ்பூனில் கொடுத்தால் தாகம் அடங்குமா குழந்தைக்கு.. நீங்கள் டம்ளரில் கொடுத்து பழகுங்கள்.. என் மகனுக்கு.. தாய்பால் சரியாக‌ இல்லாத‌ தால் நான் பாட்டில் தான் லேக்டோஜன் கொடுத்தேன்.. 6 மாதத்தில் இருந்து டம்ளரில் கொடுத்து பழக்கினேன்.. இன்று அவனுக்கு 10 மாதம் முடிந்தது.. டம்ளர் பாட்டில் என்று மாத்தி மாத்தி கொடுப்பேன்... காரில் செல்லும் போது.. ஷாப்பிங் செல்லும் போது நாம் பாட்டில் பயன்படுத்தி கொண்டால் தண்ணீர் மூக்கில் ஏறாமல் இருக்கும்..

அபிராமி சொல்வது உண்மை... பாட்டில் பழக்கத்தை சில வயது வரை விடுவது இயலாது. தரமான ப்ரெண்டட் பாட்டில்கள், ஸ்டெரிலைஸ் செய்து பயன்படுத்துவது நன்று. அதன் ரப்பரை அடிக்கடி மாற்றுவது அவசியம். பாட்டிலோ சிப்பரோ 6 மாதத்துக்கு ஒரு முறை புதிதாக மற்றுவதும் நல்லது. வெளியே செல்லும் போது பிள்ளைகள் இதன் உதவி இருந்தால் அதிக அளவில் நீர் எடுத்துக்கொள்வார்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//குழந்தைகளுக்கு பாட்டில் பயன்படுத்தாதீர் - என் அனுபவம்.// நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை கௌரி. தொற்று வந்தது பாட்டிலில் தண்ணீர் கொடுத்த காரணத்தால் அல்ல. பயன்படுத்திய பாட்டிலோ அல்லது கொடுத்த நீரோ ஏதோ ஒன்று சுத்தம் போதாதிருந்ததால்தான் அப்படி ஆகி இருக்கிறது. நிச்சயம் நீங்கள் நன்றாகத்தான் சுத்தம் செய்திருப்பீர்கள். நீர் கொதிக்க வைக்கும் பாத்திரம், பாட்டில் இவற்றில் உள்ள சின்னச்சின்ன வளைவுகள் (த்ரெட்) எங்களை மீறி அழுக்குகளைச் சேர்த்து வைக்கும் சாத்தியம் இருக்கிறது.

//அதனால் spoon-ல் allathu medicine filler தண்ணீர் குடுங்கள்.// உண்மையில் ஸ்பூனும் ஃபில்லரும்தான் பாதுகாப்புக் குறைவு.

கரண்டியைச் சுத்தம் செய்வது சுலபம் என்று நினைப்போம். ஆனால் கை படும். அல்லது தேய்க்க என்ன பயன்படுத்துகிறோமோ அந்தப் பொருளும் படப் போகிறது. ஸ்பஞ்ச் பயன்படுத்தும் போது தொற்றுகள் ஏற்படும் சாத்தியம் இருக்கிறது. கொதிக்க வைக்க முடியும்தான். பிறகு!! கையால் தொடப் போகிறோம். நீர் காற்றோடு தொடர்பாக இருக்கப் போகிறது. கரண்டியை வேறு யாராவது தொட்டு வைக்கலாம். எங்களுக்குத் தெரியாமல் பூச்சி உட்கார்ந்துவிட்டுப் போகலாம்.

பெரியவர்களுக்கு எதிர்ப்புச்சக்தி அதிகம். பிரச்சினையாக இருப்பதில்லை எதுவும். குழந்தைகளை சின்ன விடயமும் பெரிதாகப் பாதிக்கும். இது தவிர, கரண்டியால் கொடுக்கும் போது குழந்தைக்குப் போதாவிட்டாலும் பெரியவர்களுக்குப் புரியாது. குழந்தை கரண்டியைத் தட்டிவிட்டால் துணி ஈரமாகும். நீர் மூக்கினுள் போகக் கூடும். புரைக்கேறலாம். பயணத்தின் போது கரண்டியால் ஊட்டுவது சாத்தியமில்லை. அப்போது பாட்டிலில் கொடுக்கலாம் என்று நினைத்தால்... பழக்கமில்லாத குழந்தை பாட்டிலை வாயில் வைக்காது.

ஃபில்லர்... எந்த அளவுக்கு சுத்தம் செய்யமுடியும்? பாட்டிலை விட ஃபில்லரைச் சுத்தம் செய்வது சிரமம் என்று தோன்றுகிறது எனக்கு. கொதிக்க வைக்க முடியுமா?

அளவு... மருந்துக்குத்தான் கரண்டியும் ஃபில்லரும் சரியாக இருக்கும்.
ஏழு மாதக் குழந்தைக்குப் போதாது.

நீங்கள் தரமான பாட்டிலை வாங்கிப் பயன்படுத்துங்கள். சரியானபடி ஸ்டெரிலைஸ் பண்ணிக் கொள்ளுங்கள். கொடுப்பது தண்ணீரோ பாலோ அல்லது வேறு எதுவானாலும் சுத்தமாக இருக்கிறது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். ஒன்றுமே ஆகாது. இது என் அனுபவம். அதை மீறி ஆனால் அதற்கு வேறு காரணம் இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். தொற்றுகளுக்கு நாம் நினைக்காத வேறு பல வெளிக்காரணிகளும் காரணமாக இருந்துவிடுவதுண்டு.

‍- இமா க்றிஸ்

என் பையனுக்கு இரண்டு வயது ஆகுது, அவன் பாட்டிலில் தான் பால், தண்ணீர் குடிக்கிறான் டம்ளர் அல்லது கிளாஸில் கொடுத்தால் குடிக்க மாட்டான் என்ன செய்வது

yen pennirku 6yrs agarathu. aval ennum thoongum pothu viral sappi konduthan thoongara. athai eppadi stop panrathu. enaku entha vazhium theriala. pls help me friends tell me your openion

ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அப்படிதான் படுத்துவார்கள். பிறகு பழகிவிடும். இது என் டாக்டர் சொன்னது. அப்படியும் சரி வர வில்லை என்றால் அவனிடம் நயமாக பேசி சாதிக்கவும்.. நான் அதைதான் செய்தேன்.

regards,
Kalai..

உன் வாழ்க்கை உன் கையில்....

என் மகளுக்கு 2 1/2 வயதாகிறது. அவளும் 2 மாதம் முன் வரை கை சூப்பினாள். நாங்கள் ஊஸ் வந்த புதிதில் அவளிடம் போலிஸ்காரர்களை காண்பித்து நீ இவ்வாறு செய்தால் உன்னை அவர்களுடன் அழைத்து சென்று விடுவார்கள் என்று சொன்னொம். அவள் ஒரு வாரம் அழுது ஆர்பாட்டம் செய்தாள். பின் மடியில் வைத்து தட்டி, கதை சொல்லி தூங்க வைக்கிறேன். என் அனுபவம் உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.

regards,
kalai..

உன் வாழ்க்கை உன் கையில்....

மேலும் சில பதிவுகள்