வாழைக்காய் புட்டு

தேதி: May 22, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

வாழைக்காய் - 3
தேங்காய் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய வெங்காயம் - ஒன்று
நசுக்கிய பூண்டு - 3 பல்
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
வர மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

வாழைக்காயை வேகவைத்து தோலுரித்து துருவி (அல்லது) உதிர்த்து வைக்கவும். தேங்காயுடன் பச்சை மிளகாயைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். (விரும்பினால் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கலாம்).
நன்கு வதங்கியதும் துருவிய வாழைக்காய், அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டி பச்சை வாசனை போக சிறிது நேரம் வேகவிட்டு இறக்கவும்.
சுவையான, எளிமையான வாழைக்காய் புட்டு தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

சூப்பர் :) செய்துட்டு சொல்றேன் கண்டிப்பா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழக்காய் புட்டு புதிதாக இருக்கு சூப்பர்... படமும் தெளிவாக‌ இருக்கு.. புட்டு என்ற‌ தலைபை பார்தவுடன் வாணி அக்கா என்று நினைத்தேன்.. நீங்களும் புட்டை வைத்து டெஸ்டிங் போட‌ ஆரம்பிசிடீங்க‌.. கலக்குங்க‌..

உமா புட்டு பார்க்கவே சூப்பர். நிச்சயம் செய்துட்டு சொல்றேன்.

வாழைக்காய் புட்டு சூப்பர், படங்களும் தெளிவாக உள்ளன, குறிப்பும் எளிமையாக உள்ளது.

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முதல் பதிவுக்கு நன்றி வனி. செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஹாய்...எளிமயான‌ ருசியான‌ வாழைக்காய் புட்டு அருமை.....எடுத்து சாப்பிட‌ வேண்டும் போல‌ உள்ளது....

Anbudan,
Viji

வருகைக்கு நன்றி அபிராமி. //நீங்களும் புட்டை வைத்து டெஸ்டிங் போட‌ ஆரம்பிசிடீங்க‌// டெஸ்டிங் எல்லாம் ஒன்னு இல்ல இது நான் எப்பவும் செய்றதுதான். சாதத்தோட சாப்பிட ரொம்ப நல்லாருக்கும். நீங்களும் செய்து பாருங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி உமா. செய்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி பாரதி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நிச்சயம் செய்து பார்கிறேன் அக்கா..

வருகைக்கு நன்றி விஜி. எடுத்து சாப்டுருங்க. யோசிக்காதீங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு உமா,
நாங்க அரைக்காமல் ஒரு மாதிரி செய்வோம். இது வித்தியாசமாக‌ இருக்கு.

அன்புடன்,
செல்வி.

வருகைக்கு நன்றிக்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா