தேதி: May 26, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயத் தூள்
கறிவேப்பிலை
வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் வதங்கியவுடன் தேங்காய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விட்டு வதக்கியவற்றை சிறிது நேரம் ஆற வைக்கவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி உப்புச் சேர்த்து அரைக்கவும். மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து தாளித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

அரைத்ததும் தாளித்து வைத்துள்ள பாத்திரத்தில் ஊற்றி கலக்கவும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான தக்காளி தேங்காய் சட்னி தயார்.

Comments
நித்யா
இந்த சட்னி புதுமையாக உள்ளது, தக்காளி தேங்காய் சட்னி, ஒன்று தக்காளி சட்னி செய்வோம், இல்லை தேங்காய் சட்னி செய்வோம் இது இரண்டும் சேர்த்து தக்காளி தேங்காய் சட்னி வித்தியாசமான குறிப்பு, இன்றைக்கே செய்து பார்த்துட்டு சொல்கிறேன். நித்யா அக்கா ஒரு சின்ன சந்தேகம் தேங்காயை தக்காளி வதக்கும் போதே தேங்காயைச் சேர்த்து வதக்கலாமா. சட்னி சூப்பர்.
நித்யா
ரொம்ப ஈஸியான சட்னி நைட் டின்னருக்கு செய்துட்டு சொல்றேன்
நித்யா
ஈசி & டேஸ்டி சட்னி. சூப்பர் நித்யா.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
நித்யா
இந்த ஈஸியான தக்காளி தேங்காய் சட்னி இன்னக்கி செய்தாச்சு நல்லா இருந்துச்சு நித்யா.
நித்யா
நானும் இதே போல் தான் சின்ன மாற்றங்களுடன் செய்வேன். ரொம்ப நல்லா இருக்கு.
அன்புடன்,
செல்வி.
தாமதமான பதிவிற்க்கு
தாமதமான பதிவிற்க்கு மன்னிக்கவும்.
குறிப்பு வெளியிட்ட அட்மினுக்கு நன்றி,.
பாரதி தேங்காய் ரொம்ப நேரம் வதக்க வேன்டாம். பதிவிற்க்கு நன்றி.
தேவி பதிவிற்க்கு நன்றி. செய்து பாருங்கள்.
பதிவிற்க்கு நன்றி உமா.
காயத்திரி செய்து பார்த்து பதிவு போட்டது மிக்க நன்றி.
செல்வி அக்கா மாற்றங்கள் என்ன
செல்வி அக்கா
மாற்றங்கள் என்ன வென்று சொன்னால் அதையும் முயற்சிப்பேன்
இந்த சட்னி புதுமையாக உள்ளது,
இந்த சட்னி புதுமையாக உள்ளது, தக்காளி தேங்காய் சட்னி, ஒன்று தக்காளி சட்னி செய்வோம், இல்லை தேங்காய் சட்னி செய்வோம் இது இரண்டும் சேர்த்து தக்காளி தேங்காய் சட்னி வித்தியாசமான குறிப்பு, இன்றைக்கே செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.