உதவுங்கள்..

வணக்கம் . என் பெயர் அஜிதா. அறுசுவை இணைய தளத்திருக்கு புதிய உறுபினர்.

முதல் கேள்வி :

எனக்கு ஏழு மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக 4 முதல் 5 தடவை மலம் போகிறான் . உணவு தாய் பால், பிஸ்கட், செரலாக் கொடுக்கிரேன். மேலும் அவன் இந்த மாதத்தில் இருந்து தவழ ஆரம்பித்து விட்டான். மலம் இப்படி போவது நார்மல் தானா. யாரவது இதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன். நன்றி.

ரெண்டாவுது கேள்வி :

கடந்த ஒரு வாரமாக சில சமயங்களில் சரிக்கும் பொழுதோ அல்லது குஷியாக இருக்கும் பொழுதோ சத்தம் இழுத்து விடுகிறான் , மூச்சை இழுத்து விடுவது போல .. இதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன். நன்றி.

குழந்தைகள் தவழும் போது வயிற்றுப் போக்கு வருவது இயல்பு. கைகளால் தரையிலிருந்து எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள். தரையில் உள்ள கிருமிகள் கைகளில் ஒட்டிக் கொள்ளும் , பின் அவை வாயில் சென்று வயிற்றுப் போக்கை உண்டு பண்ணும். பிள்ளை தவழும் தரை சுத்தமாக இருப்பது நல்லது. வயிற்றுப் போக்கு அதிகமாகி தண்ணீராக மலம் கழித்தால் அவசியம் மருத்துவரைப் பாருங்கள், குழந்தைக்கு நீர்ச்சத்து குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்க கேட்டிருக்கிற இரண்டாவது கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை,தெரிந்த தோழிகள் உதவுவார்கள்.

மிக்க நன்றி vani selwyn. தெரிந்த தோழிகள் என் இரண்டாவது கேள்விக்கு பதில் அளியுங்கள் ..

மேலும் சில பதிவுகள்