கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு

தேதி: December 19, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பிஞ்சு கத்தரிக்காய் - 5
பெரிய வெங்காயம் - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடலைப் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
அரிசி - ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 7
வெந்தயம் - கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
புளித்தண்ணீர் - அரை கப்
பூண்டு - 10 பல்
வெல்லம் - அரை தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் - 3 + 1/2 தேக்கரண்டி


 

கத்தரிக்காயை நான்கு பாகங்களாக வகுந்து கொள்ளவும். துண்டங்களாக நறுக்கி விடக்கூடாது. பெரிய வெங்காயத்தை தோல் உரித்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய் இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். புளி தண்ணீருடன் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பூண்டினை தோலுரித்து வைக்கவும்.
வாணலியில் அரைத் தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு, வெந்தயம், மஞ்சள் தூள், மிளகாய் வற்றல், அரிசி, பெருங்காயத் தூள் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர் வதக்கியவற்றை ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, புளித் தண்ணீரை ஊற்றவும்.
அதில் நறுக்கின கத்தரிக்காய், கறிவேப்பிலை, வெல்லம், வெங்காயம், பூண்டு போட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும்.
மூன்று நிமிடம் கழித்து, அரைத்த பொடியுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து குழம்பில் ஊற்றவும்.
மேலும் 5 நிமிடங்கள் வேகவைத்து, நன்கு கொதித்து எண்ணெய் தெளிந்து வந்தவுடன் இறக்கவும். மிக எளிதாகவும், விரைவாகவும் இந்த குழம்பினை தயாரித்துவிடலாம்.
மிகவும் சுவையான குழம்பு இது. தேவைக்கேற்ப உப்பு, காரம், புளிப்பின் அளவினை மாற்றிக் கொள்ளலாம்.
இந்த குறிப்பினை வழங்கி, செய்து காட்டியவர் திருமதி. நிர்மலா சத்தியமூர்த்தி அவர்கள். சமையல் கலையில் பெரிதும் ஆர்வம் கொண்டவர். சமையலில் பல வருட அனுபவம் கொண்ட இவர், தான் கற்றுக் கொண்டவற்றை அறுசுவை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hai,
ur recipe s nice.
vellam kandippaha poda venduma?
karupu vellam podalama?

Dear Nirmala madam
I prepared your above recipe. It was very easy to prepare and was tasty too. Thank you very much

Aparna

really its very tasty madam

தங்களின் இந்த குறிப்பை இன்று செய்து பார்த்தேன்.நன்றாக வந்தது.தங்களின் குறிப்புக்கு நன்றி.