அப்புறப்படுத்தும் பொருட்களை மீண்டும் பாவிக்க /செலவை மிச்சப்படுத்த

சகோதரிகளே இந்த தலைப்பு ஏற்கனவே உள்ளதோ தெரியல ஆனால் என் கண்னில் இதுமாதிரி ஏதும் படல அதான் புதிய பலாக் ஆரம்பித்தன் நீங்கள் எல்லோரும் வீட்டில் பாவித்து அப்புரப் படுத்தும் பொருற்களை மீல்பாவணைக்கு எவ்வாரு பயன் படுத்துவீர்கள் உ+ம்: பழைய டூத் பிரஷ் சீப்புகளை,இடுக்கான பொருளிலுள்ள கரைகளை அகற்ற பாவிப்பது இது போன்ற ஏதும் தாங்களுக்கு தெரிந்தால் பிரருக்கு தெரிவிக்க விரும்பினால் இங்கு உங்கள் பொன்னான கருத்துகளை எழுதுக நன்றி

இவங்க தான் ஜனதுல் இந்த ஏரியாவில் நிறைய ஐடியா கொடுப்பாங்க.. வந்து சொன்னா எங்களுக்கும் உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;) முன்பே பார்த்தேன் வனி. அப்போ நேரம் போதவில்லை. //இது போன்ற ஏதும் தாங்களுக்கு தெரிந்தால்// நிறையவே தெரியும். //பிரருக்கு தெரிவிக்க விரும்பினால்// சும்மா சொன்னால் அதற்கு மதிப்பு இராது ஜனதுல். ஒருவருக்குத் தேவை என்று வரும் போது சொன்னால்தான் பெறுமதி. இருக்கும் த்ரெட் எங்கோ பயனில்லாமல் இருக்க, இன்னொரு புது த்ரெட் வரும். நமக்கு பதில் சொல்ல சுவாரசியம் இருக்காது. அது தவிர... சும்மா போடுவதை விட ஃபோட்டோ எடுத்தால் "தொட்டுக்கொள்ள..."வுக்கு ஒரு போஸ்ட் ஆச்சும் தேத்திருவேன் வனி. ;D

ஜனதுல்... உங்களுக்கு வேறு என்ன பொருள் ரீசைக்கிள் செய்ய வேண்டும்? என்ன தேவையில்லாத பொருள் வைச்சிருக்கீங்க? இங்கே ஒரு லிஸ்ட் போட்டு வைங்க. நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கிறேன்.

ப்ரஷ் - பற்றி முன்பே எங்கோ சொன்னதாக ஞாபகம். திரும்பவும் போட வேண்டுமா என்று விட்டுவிட்டேன். சுத்தம் செய்வது பற்றி ஜனதுல் சொல்லி இருக்காங்க. க்ராஃப்ட் ஐடியாஸ் இருக்கு. ஒற்றை வரில சொன்னால் புரியாது. நிறைய டைப் செய்ய இப்போ நேரம் இல்லை. பிறகு எப்போதாவது நேரம் கிடைக்கும் போது திரும்ப வந்து சொல்கிறேன்.

சீப்பு -
1. க்வில்லிங் செய்யும் போது 'கோம் டூலுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.
2. சின்ன வயசுல பக்கத்து வீட்டு அங்கிள் சீப்புக்கு வெளியே சிகரெட் ஃபாயில் மடிச்சு வைச்சு மௌத் ஆர்கன் போல இசையெழுப்புவார். (எனக்கு அது வராது. ட்ரை பண்ணிருக்கேன்.)
3. மைதா பசை, சீப்பு, வாட்டர் கலர் / ஆயில் பெய்ண்ட் வைத்து அழகா ஆர்ட் பண்ணலாம்.
4. கார்பட் தரை, தும்புமிதியடி சுத்தம் செய்யலாம். வீட்ல முடி கொட்டுறவங்க, தைக்கிறவங்க, செல்லப் பிராணிகள் இருந்தால் தலைமுடி, நூல் எல்லாம் கார்பட்லயும் மிதியடிகள்லயும் சிக்கி இருக்கும். சீப்பை வைத்துச் சுற்றினாற்போல் தேய்த்தால் எல்லாம் சீப்புக்கு மாறும்.
5. சட்டைல இருந்து பட்டன்களை நீக்க வேண்டிய தேவை வந்தால் சீப்பை பட்டனுக்கும் துணிக்கும் இடையே கொடுத்து உயர்த்திப் பிடித்தால் இடையில் கத்தரிக்கோலை விட்டு சுலபமாக துணிக்குப் பாதிப்பில்லாமல் வெட்டி நீக்கலாம்.
6. பாவிக்கவே பாவிக்காத புது சீப்பு - கலர் பிடிக்கவில்லை, வடிவம் பிடிக்கவில்லை என்று வைத்திருந்தால்... ;)) சோகி சுடலாம். சீடை மாவில் சின்னதா உருண்டை பிடித்து வட்டமாக அழுத்தி சீப்பில வைச்சு உருட்டி பொரிக்கலாம். ;D
7. பட்டீஸ், கொழுக்கட்டைக்கு அழகா ஓரம் வைக்கலாம். ;)
8. நேரம் போதாத சமயம் ஈஸி கேக் ஐஸிங் பண்ணலாம். கேக் மேல ஐஸிங் பூசிட்டு இஷ்டத்துக்கு இழுத்தா போதும்.
9. பூனை நாய் கேக் பண்றப்ப ஐஸிங்ல ரோமம் வரையலாம்.
சுருக்கமா... ஃபோர்க்கை சாப்பிடுறதைத் தவிர ஏறு எது எதுக்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அதுக்கெல்லாம் சீப்பு பயன்படுத்தலாம்.

சீப்பு, ப்ரஷ் ரெண்டும் சேர்த்து -
1. ப்ரஷ்ஷால அழுக்கான சீப்பை சுத்தம் செய்யலாம்.
2. சீப்பால அழுக்கான ப்ரஷ்ஷை சுத்தம் செய்யலாம். ;) இங்க நான் சொல்றது வேற ப்ரஷ் பற்றி. டஸ்ட் பானோட வருமே குட்டி ப்ரஷ்... அது, தும்புத்தடி (இலங்கைல நோ துடைப்பம். அதுக்குப் பதிலா தும்புத்தடிதான் பயன்படுத்துவோம்.), ப்ளாஸ்டிக் துடைப்பம் இது போன்ற பொருட்களை சுத்தம் பண்ணலாம். பார்க்க சீப்பு - டிப் நம்பர் 4.
3. பெய்ண்ட் ஸ்ப்ரே செய்யலாம். ப்ரஷ்ல தொட்டு சீப்புல இழுத்தா பெய்ண்ட் தூவும். ஒரு தடவை முயற்சி செய்து பார்த்தால் புரியும்.

தூங்க நேரம் ஆச்சு. ப்ரூப் பார்க்கல. ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருந்தால்... அட்ஜஸ்ட் ப்ளீஸ். இந்த கமண்ட்ல க்ளிக் பண்ணாம விட்டீங்கன்னா நாளை வந்து திருத்திவிட உதவியாக இருக்கும்.

என்னைப் போலவே அனைஅவ்ருக்கும் நல்லிரவாகுக. ;)

‍- இமா க்றிஸ்

இமா இது என்னங சீப்பு பிரஷ் கொண்டு இவ்வளவு பன்னலாமா? நீங்க ரொம்ப அசத்திட்டீங்க ஆனாலும் இன்னும் சில பொருட்கள் உண்டு இவைகளை கொண்டு என்ன பன்னலாம்னு சொல்ல முடியுமா பேபி பவ்டர்,ஒயில் பாட்டில் .
புட்டிப்பால் மாவிற்கு வரும் பிலாஸ்டிக் கரண்டி இது எங்கிட்ட நிரைய இருக்குங .
பழைய துணி :இதை நான் துடைப்பதற்கு பயன்படுத்துகிரன்.
புதிய சிரு சிரு துணி: இது நிரய இருக்கு.
பழைய கடிகாரம்
டின்
வோட்டர் கேன்
பிலாஸ்டிக் நீர் பாட்டில்
இது தவிர நீங்கள் உங்க வீட்டில் மீல் பாவிக்கும் பொருளும் முறையும் சொன்னால் இன்னும் நல்லா இருக்கும்ங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

இமா இந்தாங்க... இதை தானே தேடுறீங்க... வாங்க, மேல கொண்டு வந்த விட தான் இந்த பதிவு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//புட்டிப்பால் மாவிற்கு வரும் பிலாஸ்டிக் கரண்டி// -
1. சமையலறைல இருக்கும் ஒவ்வொரு டப்பாலயும் ஒன்று போட்டு வைக்கலாம்.
2. லட்டு பிடிக்கலாம். நர்மதா குறிப்புல இருக்கும். http://www.arusuvai.com/tamil/node/14015
3. கரண்டியில் விதம் விதமா க்ராஃப்ட் பண்ணலாம். (காட்டன் பட்ஸ் இரண்டு பக்கமும் நறுக்கி கழுவி எடுத்து வைங்க. ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா சேர்த்து வைங்க.) மீதி பிறகு சொல்லுறேன்.

//பழைய துணி :இதை நான் துடைப்பதற்கு பயன்படுத்துகிரன்.// ம்.
இங்கு பின்னல் மிதியடி குறிப்பு, குஷன் கவர் குறிப்பு எல்லாம் இருக்கே!
http://www.arusuvai.com/tamil/node/13072

//புதிய சிரு சிரு துணி// !! பாப்பாவோட சின்னதாகிப் போன துணியா!

//பழைய கடிகாரம்// ஓடுதா? ஓடலயா?? அழகா இருக்கா? செய்ன் இருக்குமா? இது எல்லாம் சொன்னால்தான் மீதி. ;)

//பிலாஸ்டிக் நீர் பாட்டில்// இங்கே நிறைய க்ராஃப்ட் இருக்கு ஜனதுல். தேடுகவில் வாட்டர் பாட்டில் என்று தட்டி தேடுங்க.

கொஞ்ச நாளைக்கு லிஸ்ட்ல வேற எதுவும் சேர்க்காதீங்க. ;)) நேரம் பத்தலை. இந்த லிஸ்ட்டுக்கு பதில் போட்டு முடிஞ்சதும் அடுத்த லிஸ்ட் கொடுக்கலாம். :-)

தாங்ஸ் வனி. ;)) உங்க ஐடியாவையும் சொல்லுங்க. ஜனதுல் நீளமா லிஸ்ட் கொடுத்து இருக்காங்க. ;)
~~~~~~~~~~
லிங்க் தேடும் பொழுது கண்ணில் பட்டவை...
http://www.arusuvai.com/tamil/node/17028
http://www.arusuvai.com/tamil/node/21725
http://www.arusuvai.com/tamil/node/3079

‍- இமா க்றிஸ்

இமா நீங்க சொன்ன காட்டன் பட்ஸ் ஸ்டரா எல்லாம் ெரடி நீங்க சொல்ரதுதான் பாக்கி

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

பட்ஸ், ஸ்பூன், ஸ்ட்ரா, க்ராப்ட் ஆர்வம் இருக்கு... ஐடியா தந்தா செஞ்சுடலாம்

மேலும் சில பதிவுகள்