மாங்காய் சாதம்

தேதி: June 3, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

அரிசி - 2 கப்
மாங்காய் - 2 (சிறியது)
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 2
கேரட் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வறுத்த நிலக்கடலை - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

அரிசியைக் களைந்து குழையாமல் சாதத்தை வேக வைத்து எடுத்து 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலந்து ஆறவிடவும்.
மாங்காயைத் துருவிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டை மெல்லியதாக, நீளமாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயையும் நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் வறுத்த நிலக்கடலை சேர்த்து தாளிக்கவும். பருப்பு வகைகள் சிவந்ததும் பூண்டைச் சேர்த்து வதக்கி, பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் மாங்காய்த் துருவல், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும். அனைத்தும் வதங்கியதும் கேரட் துருவல் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
அத்துடன் ஆற வைத்த சாதம் மற்றும் சர்க்கரையை சேர்க்கவும்.
நன்கு கலந்து 5 நிமிடங்கள் குறைந்த தணலில் வைத்து இறக்கவும்.
வண்ணமயமான சுவையான மாங்காய் சாதம் தயார்.

சர்க்கரை சேர்ப்பதால் மாங்காயின் புளிப்புத் தன்மை குறைத்து, சுவையை அதிகரித்துக் கொடுக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான மாங்காய் சாதம் அக்கா. கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நானும் இதே போல தான் செய்வேன், எனக்கு மங்காய் சாதம் எலுமிச்சை சாதம் எல்லவற்றிலும் கேரட் துருவல் சேர்க்க பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலர்புல் மாங்காய் சாதம் சூப்பர், நான் எலுமிச்சை சாதமோன்னு நினைச்சுட்டேன் அப்பறம் பெயர் பார்த்ததும் தெரிஞ்சுது செல்விம்மா.

வித்தியாசமான குறிப்பு நானும் தான் பார்த்தவுடன் எலுமிச்சை சாதம் என்றுதான் நினைத்தேன், ஆனால் மாங்காய் சாதம் இது வரைக்கும் கேள்விபடாத சாதம் சூப்பர்.
அக்கா சர்க்கரை சேர்க்க வேண்டும் என்று சொல்லீருக்கீங்க அது சர்க்கரையா அல்லது வெல்லம் சேர்க்கனுமா,

அக்கா இன்று லஞ்ச் உங்க மாங்காய் சாதம்தான். வீட்டில் எல்லோருக்கும் பிடிச்சிருந்துச்சு. டேங்ஸ்க்கா

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு உமா,
மாங்காய் சாதம் செய்தும் பார்த்துட்டு பதிவிட்டமைக்கு மிக்க‌ நன்றி! எல்லோருக்கும் பிடித்திருந்தமைக்கு ரொம்ப‌ சந்தோஷம்.

அன்புடன்,
செல்வி.

கேரட் சேர்த்தால் ருசியும் கூடும். கலரும் கண்ணைப் பறிக்கும். நன்றி வனி!

அன்புடன்,
செல்வி.

கொஞ்சம் மஞ்சள் சேர்த்தாலே நல்லா கலராக‌ வரும். கேரட் சேர்க்கவே கூடுதல் கலராக‌ தெரியுது:) நன்றி தேவி.

அன்புடன்,
செல்வி.

சர்க்கரை தான் சேர்க்கணும். வெல்லம் சேர்த்தால் சாதத்தில் சரியாக‌ கலக்காது. செய்து பாருங்க‌ நல்லா இருக்கும்.

அன்புடன்,
செல்வி.