உதவுங்கள் தோழிகளே

நான் 6 வது மாத தொடக்கத்தில் உள்ளேன்.கடந்த ஒரு மாதமாகவே தூங்கி காலையில் எழும் பொது என் காது இரண்டும் அடைத்து கொள்கிறது.காது அடைப்பு நீங்க குறைந்தது 4 மணி நேரங்களாவது ஆகிறது.நான் வேலைக்கு செல்வதால் எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.மற்றவர்கள் பேசுவது சரியாக புரியவில்லை.இது எதாவது பிரச்சனை கு அறிகுறியா? அல்லது கற்பமாக உள்ள போது இப்படி தான் இருக்குமா?பதில் தெரிந்தவர்கள் கூறவும்.

உங்களுக்கு சளி, இருமல் அந்த மாதிரி எந்த விதமான தொந்தரவு உண்டா, அப்படி ஏதாவது தொந்தரவு இருந்தால் உங்களுக்கு காது அடைப்பு இருக்கலாம், அல்லது காதுகளில் அழுக்கு அது மாதிரி இருந்தால் காது அடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு,
ஆனால் கர்ப்பமாக இருப்பதற்கும் காது அடைப்பிற்கும் சம்மந்தம் கிடையாது, நீங்கள் ENT மருத்துவரிடம் சென்று உங்கள் பிரச்சனை தெரிந்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி தோழி. எனக்கு அது போல் எந்த ஒரு பிரச்சனையும் இல்ல ப.நான் எதுக்கும் டாக்டர் கிட்ட consult பண்றேன் ப.ரொம்ப thanks

மேலும் சில பதிவுகள்