Curd Preparation

How to prepare curd from Milk without having the leftover Curd?(Anything else can be added to ferment it)

காய்ச்சி ஆறவைத்த பாலில் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்து தயிர் தயாரிக்கலாம். முதல் முறை இப்படி தயார் செய்து கொள்ளுங்கள். அடுத்தடுத்த முறைக்கு சிறிதளவு தயிரை உரை ஊத்தவென்று ஒதுக்கி விடுங்கள்.

தமிழ்நாட்டில் வசித்தீர்கள் என்றால் கவலை இல்லை. "ஒரை ஊத்த கொஞ்சம் தயிர் வாங்கி வா" என்று வீட்டு சின்னப்பிள்ளையிடம் ஒரு கோப்பையைக் கொடுத்து பக்கத்து வீட்டுக்கு அனுப்பி விடலாம். கொஞ்சம் பெரிய கோப்பையாக கொடுத்து அனுப்பினால் அவர்கள் சாப்பிடவே தயிர் கொடுத்துவிடுவார்கள். (இது எங்கள் பக்கத்து வீட்டு அம்மாவின் டெக்னிக் :-) )

Many Thanks for your kind information.I will try it immediately.With that I have recently shifted to abroad.
Hereafter I will try to type in Tamil.Thank You once again.

தயிர் தயாரிப்புக்கு, சாதகமான தட்பவெப்பம் மிகவும் அவசியம். தமிழ்நாடு போன்ற மித வெப்ப பிரதேசங்களில் தயிர் எளிதாக உறைந்துவிடும். குளிர் பிரதேசங்களில் தயிர் உறையாது. நொதித்தல் வேதிவினை நிகழ மிதமான வெப்பம் அவசியம் தேவை.

பாலைக் காய்ச்சி, உரை ஊத்தின கையோடு குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விட்டீர்கள் என்றால், நான்கு நாட்கள் ஆனாலும் தயிராக உறையாது. பால் வீணாகிவிடும். தயிர் தயாரிக்க குளிர் பிரதேசங்களில் பலரும் பலவித யுக்திகளை பயன்படுத்துகின்றனர். குளிர் பிரதேசமாகிய கனடாவில் வசிக்கும் சகோதரி மனோகரி அவர்கள், அவர் எப்படி தயிர் தயாரிக்கின்றார் என்பதை தெரிவித்தால் பலருக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

இந்த விபரங்கள் தாங்கள் முன்பே அறிந்து இருக்கலாம். இதைப் பற்றி தெரியாத பலருக்கும் இது உதவியாக இருக்கும் என்பதால்தான் இந்த விளக்கம். குளிர் பிரதேசங்களில் வசிக்கும் பலர் அடிக்கடி இந்த கேள்வியை கேட்டு இருக்கின்றார்கள். மாவை புளிக்கச் செய்வது எப்படி? தயிர் தயாரிப்பது எப்படி..?

எனவே, குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்கள் தாங்கள் என்ன முறையை பின்பற்றுகின்றனர், அதன் முடிவு எப்படி கிடைக்கின்றது என்பவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

பாலை நன்கு கெட்டியாக காய்ச்சவும். பால் இளம்சூடாக இருக்கும் போதே நீங்கள் தயிரை கலக்கவும். ஒரு ஸ்பூனால் முழுவதுமாக கலக்கி விடவும். உங்கள் வீட்டில் அவன்(Oven) இருந்தால் அதற்குள் 1 நாள் வைக்கவும். தோசைமாவும் அரைத்த பின் அவனில் மாவு புளிக்கும் வரை வைக்கவும். இப்படி தான் நான் செய்வதுண்டு. அவனில் எந்த tempratureம் செட் பன்ன வேண்டாம்.

திரு. பாபு சொன்ன மாதிரி காய்ச்சி ஆறவைத்த பாலில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து தயிர் தயாரிக்கலாம். அடுத்தநாள் வேண்டுமென்றால் நான் அப்படித்தான் செய்வேன். 2 நாள் கழித்து வேண்டும் என்றால் கடைகளில் (வெளி நாடுகளில் 3.2% yogurt) தயிர் விற்கும், அதனை வாங்கி உறை ஊற்றினால் தயிர் கிடைக்கும்.

இப்படியும் try பண்ணலாம்.
இங்குள்ள stores-ல் pasteurized milk கிடைக்கும். அதனை மைக்ரோவேவில் சூடு படுத்திக்கொண்டு அதில் உரை ஊற்றி oven-ல் இரவு முழுவதும் லைட் போட்டு வைத்தால் காலையில் தயிர் ready. Oven-ல் லைட் இல்லாதவர்கள் oven-ஐ கொஞசம் சூடு படுத்திக்கொண்டு வைக்கலாம்.
நம் ஊரில் போல் அல்லாமல் கொஞசம் சூடாக இருக்கும் போதே உரை ஊற்றவேண்டும்.

நன்றி...

சில மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அறுசுவைக்கு தனது பங்களிப்பை தொடங்கியுள்ள சகோதரி வாணி ரமேஷ் அவர்களை வரவேற்கின்றேன். (இரண்டாவது என்ன குழந்தை என்று சொல்லவேயில்லையே?:))

என்னுடைய பதில்களில் உரை ஊற்றுதலுக்கு தவறுதலாக இந்த "றை" யை பயன்படுத்தியிருந்தேன். தங்களது பதிவைப் பார்த்ததும் எனது தவறு தெரிந்தது. திருத்திவிட்டேன். நன்றி.

தயிர் இல்லாமல் பாலை எப்படி தயிராக்குவது என்ற கேள்வி எனக்கும் ஒரு காலத்தில் எழுந்தது. நாங்கள் கேரளா சென்ற சமயம், அப்போழூ எனிக்கி மலையாளம் சம்சாரிக்கான் அறியில்லா. அடுத்து தாமசிக்கின்ன சேச்சின்டிடத்து இத்திரி தயறு வேணும்ணூ எங்கன ச்சோயிக்குன்னு எனிக்கு அறிஞ்சூடா வளர புத்தி முட்டாயி கேட்டோ. என்ட குருவாயூரப்பா ஞான் எந்து ச்செய்யும் என்ட பொன்னு குஞ்சிக்கு இத்ரி தயறு ச்சோறு எங்கன கிட்டும். ஒ சாரி கேரளா என்ற உடன் மலையாள பாஷையை எழுதிவிட்டேன். சாரி நான் அங்கு விடா முயற்ச்சி செய்து தயிரை உண்டாக்கி விட்டேன் இங்கும் அதே முறையைத்தான் பயன்படுத்துகின்றேன். ஆனால் ஒரு சில பண்டங்களுக்கு ரெடிமேட் தயிரை தான் உபயோகிப்பேன். காரணம் அதில் உள்ள கிரீமி பதம் சாஸ்களுக்கு நல்ல ருசியைக் கொடுக்கும்.
பாலை சிறிது தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி அதை சூடாகவே சிராமிக் குடுவை அல்லது பீங்கான் கோப்பையில் ஊற்றி சிறிது புளியை போட்டு மூடி வைக்கவும். அடுத்த நாள் பார்த்தோமானால் ஒரு விதமாக பால் புளித்திருக்கும். பிறகு தண்ணீர் கலக்காமல் மீண்டும் பாலைக் காய்ச்சி அதில் இந்த புளித்த தயிரில் ஊறிய புளியை அகற்றாமல் முழுவதையும் ஊற்றி வைத்து விடவும். மூன்றாம் நாளைக்குத் தான் நமக்கு வேண்டிய பக்குவத்தில் தயிர் கிடைக்கும்.
கனடாவில் குளிர் காலத்தில் மாவைப் புளிக்க வைப்பது கொஞ்சம் கஷ்டம். அதற்காக ஒரு இரவு முழுவதும் அரிசியையும் உளுந்தையும் ஊறவைத்து அன்று மாலையில் அரைத்து விடுவேன். அரைத்த மாவை ஊப்பு போட்டு நன்கு கரைத்து மீண்டும் இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுவேன். நன்கு புளித்து உப்பி இருக்கும்.ருசியும் நன்றாக இருக்கும். இதில் ஏதாவது தங்களுக்கு சந்தேகம் இருந்தால் கேட்கவும். ஓரளவிற்க்கு எனது இந்த குறிப்புகள் உதவும் என்று கருதி முடிக்கின்றேன்.நன்றி.

பதிலளித்த அனைவருக்கும் மிக்க நன்றி

பாபு அண்ணனுக்கு நன்றி......

இரண்டாவதாக ஆண் குழந்தை அக்டோபர் 16 அன்று பிறந்தது.....

நன்றி...

மேலும் சில பதிவுகள்