உடன் வேலை பார்ப்பவர்களை சமாளிப்பது எப்படி?

வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனை அதை எப்படி சமாளிப்பது என்று ஆலோசனை கூறுங்கள் தோழமைகளே ,

நான் ஒரு பெண், ஒரு கம்பெனியில் ஆபிசில் வேலை செய்கிறேன்,
என்னுடன் 15 ஆண்கள் வேலை செய்கிறார்கள், உடன் எனக்கு உதவிக்கு ஒரு பெண் இருக்காங்க‌, அதில் 2 பேர் எனக்கு மூத்த‌ அதிகாரிகள் மற்றவர்கள் பின்பு வந்தவர்கள்.

நான் பல‌ வருடங்களாக‌ இந்த‌ ஆபிசில் பணிபுரிவதால் எங்க‌ முதலாளிக்கு என் மேல் ரொம்ப‌ நம்பிக்கை, அதே போல் என் மூத்த‌ அதிகாரிகளும் என்னை கலந்து ஆலோசித்து பணிபுரிவார்கள், அதே போல் நானும் அப்படி தான்.

எனக்கு ஆபிஸ் வேலை தவிர‌ உடன் வேலை பார்ப்பவர்களை கண்காணிக்கும் பொறுப்பும் என்னுடையது, அவர்கள் ஏதும் தவறு செய்தால் நான் அதை முதலாளி கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்,

இந்த‌ வேலை என்றாலே வில்லங்கம் தானே,

நான் இதுவரை அவர்கள் ஏதும் செய்தால் நானே இப்படி செய்யாதீர்கள் என‌ சொல்லி விட்டு விடுவேன், இதை எங்க‌ பாஸ் கவனத்திற்க்கு கொண்டு சென்றால் அவருக்கும் டென்ஸ‌ன்,நாம் மறுபடியும் அவருடன் பழைய‌ படி வேலை செய்வதும் சிரமம் , அதனால் அனுசரித்து வேலை செய்கிறேன்.

ஆனால் சில‌ நேரம் அளவுக்கு அதிகமாக‌ தவறு செய்கிறார்கள், தட்டி கேட்டால் நான் வேண்டாதவள் ஆகிறேன், அதுவும் அவர்கள் எல்லாரும் ஆண்கள் அதனால் அவர்கள் பலர் சிலர் தப்பு செய்தாலும் கண்டுக்காமல் இருந்து விடுகிறார்கள் , நான் அப்படி இருக்க‌ முடியாது நாளைக்கு எதாவது பிராப்பளம்னா நான் தான் எங்க‌ பாஸ் க்கு பதில் சொல்ல‌ வேண்டிய‌ நிலையில‌ இருக்கேன்,

இப்படி தவறு பண்ரவங்கள‌ கேட்டா என்னை பின்னாடி திட்றாங்க‌, எனக்கு அது சங்கடமா இருக்கு, நான் அவங்கள நேரா கேட்பேனே தவிர‌ பாஸ் கிட்ட‌ மாட்டி விட‌ மாட்டேன், நான் சொன்னா அவங்க‌ வேலை போய்ரும், என்னால‌ யாருக்கும் கஸ்டம் வர‌ கூடாதுனு நினைக்கிறேன்,

ஆனா அவங்க‌ புரிஞ்சுக்காம‌ ரொம்ப‌ டார்ச்சர் பண்ராங்க‌, சொல்லாம‌ ஆபிஸ் டைம்ல‌ வெளிய‌ போறாங்க‌, வேலை செய்யாம‌ தேவை இல்லாத‌ கமெண்ட்ஸ் அடிச்சு மத்தவங்களயும் கெடுக்கிறாங்க‌,

இதையெல்லாம் நான் கேட்பதால் என்னை எல்லாரும் எதிரியா பாக்குறாங்க‌, பின்னாடி திட்றாங்க‌, நான் லீவ்னா அவங்க‌ சந்தோஷ‌ படுறாங்க‌, பாட்டு கேட்கிறது, தூங்குறது, வெளில‌ போறதுனு ஹாப்பியா இருக்காங்க‌, நானும் இது எல்லாம் லிமிட்டா இருந்தா பார்த்தும் பார்க்காத‌ மாதிரி விட்டுருவேன், அதிகமாகும் போது நான் கேட்க‌ வேண்டிருக்கு,

இப்ப‌ சொல்லுங்க‌ நான் செய்யட்டும், அவங்க‌ என்ன‌ அப்படி பேசுறது,
எனக்கு சில‌ டைம் அழுகையா வருது,
வேலையை விட்டுருலாமானு தோணுது ,
நான் என் கஸ்டத்துக்கு ஜாப் க்கு வர்றேன்,

நான் எல்லார்கூடேயும் பிரண்டா இருக்க்னும், பழகனும் நினைக்கிறேன்,

ஆனா அவங்க‌ என்னால‌ முடில‌, தயவு செய்து இவங்கள‌ எப்படி சமாளிக்கிறதுனு சொல்லுங்க‌ உடன்பிறப்புகளே .................

Dear

Where you are working india

Antony

Life is one time only enjoy with peaceful

ஆமாங்க‌, இந்தியா தான்

which kind of company & work u r working HR/Administration???

chennai???

Antony

Life is one time only enjoy with peaceful

கவலை படாதீங்க பா இதெல்லாம் சகஜம் வேலைன்னு இருந்தா இப்படி தான் அதுவும் நமக்கு கீழ இருக்காங்க அவங்களை கண்கானிப்பதுன்னா சொல்லவே வேணாம். சரி விஷயதுக்கு வரேன் என்னுடைய அனுபவம் முதலில் எதுவானாலும் நீங்க தலையிடவே கூடாது அதாவது பழிய தூக்கி முதலில் உங்க பாஸ் மேல போடுங்க வெட்டியா பேசனாங்கன்னா ஏதாவது ஒரு வேலையை குடுத்து இத பாஸ் சீக்கரமா முடிக்க சொன்னதா பொய் சொல்லுங்க அவங்க பாஸ் கிட்ட பேசரா மாதிரி இருந்தா நீங்க முந்திக்கிட்டு பாஸ் கிட்ட சொல்லுங்க sir அந்த வேலை கொஞ்சம் அவசரம் உங்க பேர் சொன்னாதான் சீக்கரம் வேலை நடக்குதுன்னு அவரும் ஓகே சொல்லிடுவார் 2 and 3 டைம்ஸ் இப்படி சொல்லிட்டு அப்புரம் பாருங்க நீங்க சொன்னத ஓடி ஓடி செய்வாங்க பாருங்க. வெளிய போராங்களா பாஸ்க்கு போன் பன்னுங்க குறிப்பிட்ட பேரை சொல்லி அவங்களுக்கு ஏதாவது வெளியே வேலை இருக்கான்னு உங்க பாஸ்கிட்ட கேலுங்க அவரே புரிஞ்சுக்குவார் அப்ரம் அவர் பேசிக்குவார் ஆனா இதுல எதுலயும் உங்க பேர் இருக்காது.ஆனா கண்டிப்பாக நீங்க இதையெல்லாம் எப்படியாவது தடுக்கனும் பா.

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீமதி கதிர் சென்னதத டிரை பன்னுங்க,,,,

உங்க மேல தப்பு இல்லாதப்போ ஏன் வீனா கவலை படுறீங்க,,,,

யாரோ எதுவோ பேசட்டும் பயம் வேண்டாம் தோழி,,,

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

ithellam sakagam than

தோழிகளே நன்றி,
தாமதமான‌ பதிலுக்கு சாரி, சாரி......கொஞ்சம் வேலை பளு,

ஸ்ரீமதி கதிர் அவர்கள் உங்கள் கருத்திற்கு நன்றி, எங்க‌ பாஸ் நான் அடிக்கடி பார்க்கமுடியாது,
\\ஒரு வேலையை குடுத்து இத பாஸ் சீக்கரமா முடிக்க சொன்னதா பொய் சொல்லுங்க // சில‌ டைம் அப்படி தான் செய்றேன் அதனால் தான் இன்னும் என் மேல‌ கோபம் அதிகம் ஆகுது,

//வெளிய போராங்களா பாஸ்க்கு போன் பன்னுங்க குறிப்பிட்ட பேரை சொல்லி அவங்களுக்கு ஏதாவது வெளியே வேலை இருக்கான்னு உங்க பாஸ்கிட்ட கேலுங்க அவரே புரிஞ்சுக்குவார் அப்ரம் அவர் பேசிக்குவார்//

நான் அப்படி சொன்னா அவர் பேச‌ மாட்டார் உடனே வீட்டுக்கு அனுப்பிடுவாரு, எல்லாரும் பாமிலி மேன் , என்னால‌ அவங்க‌ பேமிலிக்கு கஸ்டமேனு செய்றதுஇல்ல,

என்னால‌ முடிஞ்ச‌ அளவு நான் பாத்துக்கிறேன், அவங்களுக்கும் என்னை பத்தி தெரியும் , எதாவது கஸ்டம்னா எங்கிட்ட‌ தான் பண‌ உதவி வாங்குவாங்க‌, ஆனா திரும்பவும் தப்பு பண்றாங்க‌.

திவ்யா ஈஸ்வரன் உங்க‌ கருத்திற்கு நன்றி.

ஜெயா கணபதி,
ஆமாங்க‌ நீங்க‌ சொல்றது தான் சரிதான், அப்பப்ப‌ மனசு படுற‌ கஸ்டம் தான் தாங்கமுடியரது இல்ல‌,

மேலும் சில பதிவுகள்