தேதி: June 4, 2014
சணல்
ஃபேப்ரிக் ஃபெர்ல் கலர்
ப்ரஷ்
ஃபெவிக்கால்
ஐஸ்க்ரீம் குச்சி
கத்தரிக்கோல்
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

படத்தில் உள்ளது போல் சணலை வட்டமாக சுருட்டிக் கொள்ளவும்.

பிரிந்து வராமலிருக்க ஃபெவிக்கால் தடவி ஒட்டிவிடவும்.

பூவின் இதழ்கள் செய்ய ஒன்றரை இன்ச் அளவில் 6 சணல் துண்டுகள் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

வெட்டிய சணல் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து இரண்டாக மடித்து வட்டமாக சுருட்டி வைத்துள்ள சணலின் ஓரங்களில் இதழ்களை போல் ஒட்டவும்.

பூவின் காம்பு பகுதிக்கு ஐஸ்க்ரீம் குச்சியிலில் மெல்லியதாக ஒரு குச்சியை நறுக்கி எடுக்கவும்.

அதில் பெவிக்கால் தடவி அதன் மீது சணலை நெருக்கமாக சுற்றவும். குச்சியின் இறுதி வரை சுற்றாமல் கால் இன்ச் இடைவெளி விடவும்.

இப்பொழுது பூவும் அதன் காம்பும் தயார்.

குச்சியில் சணல் சுற்றாமலுள்ள முனையில் சிறிது பெவிக்கால் தடவி அதை பூவின் பின்புறம் வைத்து சொருகவும்.

பிறகு பூவின் காம்பு பகுதிக்கு பச்சை நிறமும், இதழ்களுக்கு பின்க் நிறமும் நடுப்பகுதிக்கு ப்ரவுன் நிறமும் அடித்து காயவிடவும்.

எளிதில் செய்துவிடக் கூடிய கைவினை இது. ஃப்ளவர் வேஸில் வைக்கலாம். தயார் செய்த அனைத்துப் பூக்களையும் ஒன்றாகச் சேர்த்து கட்டி பூங்கொத்து தயாரிக்கலாம்.

Comments
ஜூட் ஃப்ளவர்
சூப்பர் ஈசியாகவும் இருக்கு.வாழ்த்துக்குள் டீம்.
ஐ டீமு!!!
மக்களே... எம்புட்டு நாளாச்சு உங்க குறிப்பை பார்த்து!!! சூப்பர். சூப்பரோ சூப்பர். எப்படி தான் உங்களுக்கு இப்படிலாம் யோசனை வருதோ!!! அஃபீஸில் ரூம் போட்டு யோசிப்பீங்களோ??!! கலக்கல். அந்த மெல்லிய அழகான கை எந்த மாடலுடையது? ;) அழகா இருக்கே.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சணல் பூக்கள்
வெகு அழகு டீம். புதுமையாக இருக்கிறது இந்தக் கைவேலை.
பிடித்திருக்கிறது.
- இமா க்றிஸ்
ஜீட் ஃப்ளவர்
சூப்பர், பூக்கள் அழகாக உள்ளது.
சூப்பர் டீம்
ஐடியா சூப்பர் டீம். ரொம்ப அழகாவும் செய்திருக்கீங்க. ஈஸி க்ராஃப்ட்
பூக்கள்
அழகாகச் செய்து காட்டியிருக்கிறீர்கள் டீம். அருமை. மூன்று பூக்கள் இருக்கும் படமும் அழகாக இருக்கிறது.
டீம்
சணல் கயிறில் கூட பூ... கலக்கலா இருக்கு டீம்.........