டயட் லட்டு

தேதி: June 5, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

டேட்ஸ் - அரை கப்
புரூன்ஸ் - கால் கப்
உலர்ந்த ஆப்ரிகாட் - கால் கப்
டூட்டி ஃப்ரூட்டி - கால் கப்
விரும்பிய நட்ஸ் - முக்கால் கப்


 

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். அனைத்து பழங்களையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
மைக்ரோவேவில் நட்ஸ் வகைகளை மட்டும் 30 நொடிகள் வைத்து டோஸ்ட் செய்யவும். (அல்லது) வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
பிறகு டோஸ்ட் செய்த நட்ஸ் வகைகளை மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய டேட்ஸையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பிறகு நாண் ஸ்டிக் தவாவில் அரைத்த டேட்ஸ் மற்றும் மீதமுள்ள ட்ரை ஃப்ரூட்ஸ் வகைகளைப் போட்டு கரண்டியால் கலந்து விடவும்.
அதனுடன் பொடித்த நட்ஸ் வகைகளைச் சேர்த்து இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்தது போல் வந்ததும் வேறோரு பாத்திரத்தில் மாற்றி லட்டுகளாகப் பிடிக்கவும். கையில் ஒட்டுவது போன்றிருந்தால் சிறிது தேங்காய் எண்ணெயை கைகளில் தடவிக் கொள்ளலாம்.
சத்தான நெய் சேர்க்காத டிரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் லட்டு தயார்.

டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த இனிப்பு.

இதில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா மற்றும் அக்ரூட் பருப்புகள் என விரும்பிய நட்ஸ் வகைகள் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என்னோட ஃபேவரட்... எப்பவோ இங்கே கேட்ட யாருக்கோ மன்றத்தில் கொடுத்தேன். அழகா ப்ரெசண்ட் பண்ணிருக்கீங்க... வாணி ஸ்டைலில் படமும் குறிப்பும்... ரொம்ப ஜோரா இருக்கு வாணி. :) கலக்கல்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரோ சூப்பர் வித்தியசாமான லட்டு, படங்களும் அருமை, குறிப்பும் எளிமையாக உள்ளது.

வாணி லட்டு அருமை, ஹெல்தி டயட் ஸ்வீட். படங்கள் தெளிவு. அழகா அந்த பேப்பரில் உட்கார்ந்து இருக்கறது நல்லா இருக்கு.

லட்டு சூப்பரா இருக்கு வாணி. வழக்கம் போல படங்கள் அழகு. பாப்பா எப்படி இருக்காங்க?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பர் சத்தான‌ லட்டு!!!அழகா இருக்கு.

அன்புடன்,
செல்வி.

இந்த லட்டு சரவண பவன் ல சாப்பிட்டிருக்கேன். வீட்டிலேயே செய்ய முடியும்னு நின்ய்கவே இல்ல.. ரொம்ப நல்லா இருக்கு :)
Subadra Baskar

அசத்தல் குறிப்பு .சீக்கிரம் டிரை பண்ணிட்டு சொல்லறேன்.ஆசையா இருக்கு எடுத்துருக்கேன் சாப்பிட.

Be simple be sample

வனி, பாலபாரதி, தேவி, உமா,செல்வி மேடம்,சுபத்ரா, ரேவதி அனைவரின் பின்னூட்டத்திற்க்கும் ஊக்கத்திற்க்கும் நன்றி தோழிகளே.

உமா பாப்பா நலமுடன் இருக்கிறாள், மம்முலு என்று கூப்பிடுகிறோம்,கனிவுடன் விசாரித்தமைக்கு மிக்க நன்றி

லட்டு சூப்பர்.ஹெல்தியும்கூட வாழ்த்துக்கள்