சப்பாத்தி

சப்பாத்தி சுட்டவுடன் கடினமாகிவிடுகின்றது.மிருதுவாக இருக்க என்ன செய்வது?

<a href="http://www.arusuvai.com/tamil/forum/no/1752" target="_blank"> http://www.arusuvai.com/tamil/forum/no/1752</a>

நன்றி...

ஹலோ டியர் சப்பாத்தி சுட்டவுடன் கடினமாகி விடுகின்றது என்றால் அதற்கு தேவையான ஈரப்பதம் சரியான அளவில் அதில் இல்லை என்று பொருள். மாவில் உள்ள ஈரம் தான் நீராவியை உண்டாக்கி சப்பாதியை மிருதுவாக தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.
நீங்கள் மாவில் என்ன சேர்த்து செய்வீர்கள் என்று குறிப்பிடவில்லை. பரவாயில்லை எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிசைவதாக இருந்தால் அதை விடுத்து பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை சேர்த்து உப்பை போட்டு பிசைந்து உடனே சப்பாத்தியை சுட்டெடுக்கலாம்.
சப்பாத்தி சுடும் பொழுது ஒரு சிறிய துணி மூட்டையின் உதவியால் அதன் ஓரங்களை அழுத்தி விட்டு திருப்பி போட்டு மீண்டும் அதன் ஒரங்களை மட்டும் அழுத்தி, சப்பாத்தி இரண்டு புறமும் வெந்தவுடன் எண்ணெயை கரண்டியின் உதவியால் சிறிதை எடுத்து சப்பாத்தியின் மேல் தேய்க்கவும் ஊற்ற வேண்டாம்.
இப்படியாக சுட்ட சப்பாதிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்காமல் சுட்ட ஒவ்வொன்றின் அடியில் அடுக்கி வைக்கவும். அப்பொழுதான் ஒரே சீரான வெப்பத்துடன் எல்லா சப்பாத்தியும் இருக்கும்.
இவற்றை ஒரு துணியினால் மூடி அதன் மேல் தட்டை போட்டு மூடி வைத்து விடவும்.
இரண்டு நாள் ஆனாலும் மிருதுவாக இருக்கும். ஆறிய ரொட்டியை மீண்டும் சூடாக்க கூடாது. அதன் பக்க உணவு தான் சூடாக இருக்க வேண்டும்.நன்றி.

தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.சாதாரணமாக வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி தான் மாவு பிசைவேன்.அவ்வாறு செய்யலாமா?
பால் அல்லது தயிர் பயன்படுத்தினால் எவ்வளவு சேர்க்கலாம்?

நல்லது. நீங்கள் வெது வெதுப்பான நீரை எல்லாவற்றுக்கும் ஊற்ற வேண்டிய அவசியமில்லை.வெண்ணெய் சேர்த்து பிசைவதாக இருந்தால் மட்டும் வெது வெதுப்பான நீரை சேர்க்கலாம். இரண்டு கோப்பை கோதுமை மாவில் ஒரு கோப்பை பாலை ஊற்றி முதலில் சற்று பிசறி பிறகு சிறிது சிறிதாக நீரை ஊற்றி பிசையவும். மாவு சற்று தளர இருக்க வேண்டும். தயிரை இரண்டு கோப்பை மாவிற்கு அரைக் கோப்பை தயிரை ஊற்றி நன்கு பிசறிய பிறகு தண்ணீரை சேர்த்து பிசையவும்.ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.
எதைச் சேர்த்தாலும் மாவை பிசையும் பக்குவத்திலும் சுடும் பக்குவத்திலும் தான் அதன் சுவை இருக்கும்.
சட்டியில் தட்டிய மாவைப் போட்டு ஒரு புறம் நன்கு வெந்தவுடன் திருப்பி போட்டு அந்த பக்கமும் வெந்தவுடன் எண்ணெய் அல்லது வனஸ்பதியை தடவி எடுத்துவிடுங்கள்.மீண்டும் திருப்ப வேண்டாம். ஒரு புறம் மட்டும் எண்ணெயை தடவவும்.சப்பாத்தி முக்கால் பங்கு வெந்தால் போதும், எடுத்த பிறகும் அதன் சூட்டிலேயே மீதி வெந்து விடும். பழக பழக பாருங்கள் நீங்களே சப்பாத்தி மாஸ்டராகி விடுவீர்கள் என்று நினைக்கின்றேன்.நன்றி.

மேலும் சில பதிவுகள்