சிறுநீரகத்தில் கல் பிரச்சனை

தோழிகளே, என் கணவருக்கு சிறுநீரகத்தில் கல் உள்ளது.கடைசியாக 4 மாதத்திற்கு முன்புதான் துளையிட்டு கல்லை நீக்கினோம். முன்பே 3முறை செய்திருக்கிறோம்.இப்போது வேறுசிகிச்சைக்காக scan செய்து பார்த்தபோது 7 கற்கள் உள்ளது என வந்துள்ளது.இதில் அளவில் பெரிய 16mm கல் உள்ளது.எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை வழி சொல்லுங்கள் please, please,....கல் கரைய வழியேதும் உள்ளதா கூறுங்கள்?

கவலைப்படாதீர்கள் எல்லாம் சரியாகிடும். தைரியமாக‌ சூழ்நிலையை சமாளியுங்கள்.
முதலில் உங்களின் மருத்துவரை அனுகி என்ன‌ செய்யலாம்னு கேளுங்க‌. விஷயம் சீரியஸ் இல்லைன்னா.நீங்கள் எடுக்கும் மாத்திரைகள் ஒருபுறம் இருந்தாலும்.
வாழத்தண்டு சாறு காலை வெறும் வயிற்றில் எவ்வளவு குடிக்கமுடியுமோ குடிக்க‌ வையுங்கள். வெறும் வயிற்றில் குடிப்பதால் அதிகம் சிறுநீர் வரும். அவசரமாக‌ வரும்போது கற்கள்(சிறிய‌) அடித்துக்கொண்டு வந்துவிடும். அளவில் பெரிய‌ கற்களும் கரைய‌ ஆரம்பிக்கும்.
எலுமிச்சை சாறு நீர் கலந்து பருகுவதும் பலனளிக்கும். இதில் உள்ள‌ சிட்ரிக் ஆசிட் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.இருந்தாலும் கரைக்கும்.
வாழதண்டு பொறியல் இப்படி அதிகம் தண்டு சேர்த்து ஜூஸ் குடுங்கள்.தயவு கூர்ந்து வெண் சர்க்கரையை தவிர்க்கவும். மேலும் தெரிந்தால் பதிவிடுகிறேன். பயப்படாமல் இருங்கள்.

உங்களுக்காக‌ தேடியதில் கிடைத்த‌ செய்தி.(வேறு போஸ்ட்களை அறுசுவையில் பதிவிடக்கூடாது) இதனால் ஃபேஸ் புக்கில் என் முகவரியில் இடுகையிட்டுள்ளேன். படித்துப்பாருங்கள். உபயோகமாக‌ இருக்குமென‌ நம்புகிறேன்.

நன்றி தோழி

கவலைப்படாதீர்கள் hi sms me i will give some herbals

நான் இதை செய்து பலன் அடைந்தேன். மிகவும் நன்றி

மேலும் சில பதிவுகள்