தேதி: June 12, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கத்தரிக்காய் (சிறியது) - 5
கோழித் துண்டுகள் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சிக்கன் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
தயிர் - 4 மேசைக்கரண்டி
தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்
அரைக்க:
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 4
புதினா, கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
கத்தரிக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து வைக்கவும்.

சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு தூள் வகைகளைச் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு சிக்கனை சேர்த்து தயிர், தேங்காய்ப் பால் மற்றும் உப்பு சேர்த்து 8 நிமிடங்கள் வேகவிடவும்.

வெந்ததும் கத்தரிக்காயைச் சேர்த்து கிரேவி பதம் வரும் வரை சுருள வேகவிட்டு இறக்கவும். விரும்பினால் கடைசியாக சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

சுவையான கத்தரிக்காய் சிக்கன் கிரேவி ரெடி.

Comments
MUSI mam.........................
கத்தரிக்காய் சேர்த்து சிக்கன். வித்தியாசமாக இருக்கு. கத்தரிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும். நிச்சயமாக முயற்சி பண்றேன். வாழ்த்துக்கள்... : )
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
முசி
கத்தரிக்காய் சிக்கன் கிரேவி சூப்பர், கத்தரிக்காய், சிக்கன் காமினேசன் அருமை, படங்களும் தெளிவாக உள்ளது.
நன்றி.
குறிப்பினை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிர்க்கு மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
டெட்டி
முதல் பதிவிர்க்கும் வாழ்த்திர்க்கும் மிக்க நன்றி.அவசியம் செய்து பாருங்க.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
பாலபாரதி
வ்ருகைக்கும்,வாழ்த்திர்க்கும் ரொம்ப நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
முசி
ரொம்பவே வித்தியாசமான காம்பினேஷன் தான் முசி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
நன்றி வனி,தேங்காய்ப்பாலில் கத்திரிக்காய் ரொம்பவே சூப்பர் காம்பினேஷன் தான்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
கத்தரிக்காய் சிக்கன் கிரேவி
நேற்று உங்கள் கிரேவி செய்தேன் முசி. தேங்காய் பால் சேர்க்காமல் செய்தேன்.
ஆனாலும் சுவையாக இருந்தது.
பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பீவி
செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.