பல்லி தொல்லை - உதவி தேவை

மக்களே... குட்டிக்கரப்பான் வீட்டில் குறைந்து போனது, அது நான் அடிச்சா இல்ல பல்லி முழுங்கியா எனக்கு தெரியல. இப்போலாம் கிச்சனுக்கு போனா கரப்பானை விட பல்லி தான் அதிகமா தெரியுது ;( ஒரு ஜீவன் மாற்றி ஒரு ஜீவன் குடிவருது போல. பல்லியை அடிக்க எனக்கு பயம்... என்னவோ கெட்ட பலனெல்லாம் சொல்றாங்க.

ஒரே சைஸா 4, 5 சுத்துது. கிச்சன், பூஜை அறை, வாஷிங் மிஷின் ரூம், ஹால்... ஒன்னு பாக்கி இல்லை. ஒரு நாள் ஹேண்ட் வாஷ் பண்ண பைப் திறந்தா வாஷ் பேசின் உள்ள இருந்து அது ஷவர் எடுத்துட்டு இருக்கு. அது பயந்து நகரவே இல்லை என்னைக்கண்டு... நான் தான் பைப்பை ஆஃப் கூட பண்ணாம 2 அடி தள்ளிப்போனேன். எப்ப எங்கிருந்து மேல விழும்னே தெரியல. கிச்சனில் ஒரு பொருள் திறந்து வைக்க பயமா இருக்கு. முட்டை ஓடு வெச்சா வராதுன்னாங்க... ஆனா முறையா வைக்க தெரியல. எனக்கு அதை கொல்ல விருப்பமில்லை... நான் இப்போ படும் கஷ்டமே போதும்... அவர்களை வீட்டை விட்டு வெளிய அனுப்ப மட்டும் வழி சொல்லுங்க.

குறிப்பு: பிடிச்சு கொண்டு போய் வெளிய விடுன்னு தைரியசாளி வேலை எல்லாம் நம்மகிட்ட வேணாம்... அழுதுருவேன்.

வனி அக்கா... எங்க வீட்லேயும் நிறைய பல்லி இருக்கு...

//பிடிச்சு கொண்டு போய் வெளிய விடுன்னு தைரியசாளி வேலை எல்லாம் நம்மகிட்ட வேணாம்... அழுதுருவேன்// நானும் தான்.. செத்து போன பல்லியா இருந்தாகூட பயம் மட்டும் குறையல எனக்கு....

Insects spray அடிச்சு பார்த்தீங்களா? நான் அதான் யூஸ் பண்ணினேன்... ஆனாலும் இன்னும் ஒன்னு ரெண்டு பல்லி உயிரோட தான் திரியுது...

-> ரம்யா

பழைய சாக்ஸில் 2 அந்துருண்டையை போட்டு கட்டி, பல்லி நடமாடும் இடத்தில் வைத்தால் வராதுனு எங்கயோ படிச்ச நியாபகம்.

நீங்கள் சொன்னதை மறந்து விட்டீர்களா? இந்த‌ இழையை பாருங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/17614

எனக்கு தெரிந்தது முட்டை ஓட்டை (நாம் சமையலுக்கு பயன்படுத்தி விட்டு அந்த‌ ஒடு)அது எங்கெல்லாம் நடமாடுகிறதோ அங்கெல்லாம் போட்டு வைத்தால் (அவ்வப்போது புதிதானதை வைக்கவும்) கொஞ்சம் தாமதமாக‌ ஆனாலும் அது ஓடிவிடும்.

அன்புடன்
ஜெயா

உங்க வீட்ல மட்டும் எல்லா வீட்லேயும் தான், என்ன செய்யுறது ஜெயா சொன்ன மாதிரி அந்துருண்டையை போட்டு வையுங்க.

ஜெயா வின்சண்ட்... நான் மறக்கவே இல்லைங்க... :( ஆனா அப்படி ஒரு சாக்பீஸ் இல்லன்னு சொல்லிட்டாங்க இங்க கடைகளில் கேட்டப்போ. அம்மா நான் பள்ளி படிக்கும் காலத்தில் டியூப் லைட் கிட்ட எல்லாம் போட்டு வெச்சு நான் பார்த்திருக்கேன். இப்போ கிடைக்கலயே எனக்கு.

ஜெயா & பாதி... அந்துரண்டை என்றால் என்ன? நாப்தலின் பால்ஸா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சொன்னேன்ல... கொல்ல விருப்பம் இல்லைன்னு 3:) கொம்பு பொம்மை உங்களுக்கு. முன்பெல்லாம் பல்லியை கண்டா தங்கை பாத்ரூம் உள்ள கூட போகாம கத்துவா... ஆஃபீஸ் போகும் அவசரத்தில் அது மேல டாய்லட் வாஷ் பண்ணும் ஆசிட் ஊத்திட்டு போயிருக்கேன்... இப்போ அப்படி பண்ண பயம் வந்துடுச்சு. :( பாவமாமே பல்லியை கொல்றது?

யாரும் ஆடு கோழி பாவமில்லையா கொல்லலாமா? அப்படின்னுலாம் கெட்டுடாதீங்க. கொன்னா பாவம் தின்னா போச்சுன்னு நான் முழுங்கிடுவேன்... பல்லியை முழுங்கினா நானே போயிடுவேனே. ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு தெரிந்தது ‍‍- முட்டை ஓட்டை (நாம் சமையலுக்கு பயன்படுத்தி விட்டு தூர‌ எறிவோமே அந்த‌ ஒடு) அது எங்கெல்லாம் நடமாடுகிறதோ அங்கெல்லாம் போட்டு வைத்தால் (அவ்வப்போது புதிதானதை வைக்கவும்) கொஞ்சம் தாமதமாக‌ ஆனாலும் அது ஓடிவிடும்.

ஜெயா & பாதி... அந்துரண்டை என்றால் என்ன? நாப்தலின் பால்ஸா? நாப்தலின் பால்ஸ்தான்

அன்புடன்
ஜெயா

பாச்சை உருண்டை வெள்ளை கலரில் இருக்கும்.

வனி sis , சாம்பிராணி புகை போடுங்க , அதுங்க ஓடிரும். பேசாம பல்லிய வச்சி ஒரு கத எழுதுங்களேன்

உன்னை போல் பிறரை நேசி.

ஓ.. அப்போ நான் வைத்தது சரி தான். எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றனும் அந்த முட்டை ஓட்டை? நாத்தம் வராதா அப்படி வீட்டில் இருந்தா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்