டிஷ்யூ பேப்பர் ஃப்ளவர்

தேதி: June 14, 2014

5
Average: 5 (5 votes)

 

டிஷ்யூ பேப்பர் - 2
மெல்லிய கம்பி - ஒன்று
கத்தரிக்கோல்
வாட்டர் கலர் - விரும்பிய நிறத்தில்
ப்ரஷ்

 

இரண்டு டிஷ்யூ பேப்பரையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து செவ்வக வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய பேப்பரை முன்னும் பின்னுமாக (விசிறி போல) மடித்துக் கொள்ளவும்.
மடித்த பேப்பரின் நடுவில் கம்பியைப் போட்டு இறுக்கமாக கட்டவும். (பேப்பர் கிழிந்துவிடாதபடி பார்த்துக் கட்டவும்).
கம்பியின் இருபுறமும் உள்ள பேப்பரை இவ்வாறு வட்டமாக விரித்துவிடவும்.
பிறகு பேப்பரை ஒவ்வொரு இழையாக இதே போல் மெதுவாகப் பிரித்து எடுக்கவும்.
முழுவதும் பிரித்ததும் பூப்போல வரும்.
பிறகு அதன் மீது பொறுமையாக மேலோட்டமாக வாட்டர் கலர் அடிக்கவும். அழகான டிஷ்யூ பேப்பர் ஃப்ளவர் ரெடி. (கலர் அடிக்கும் போது பேப்பர் ஊறிவிடாமல் பார்த்து அடிக்கவும்).

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாழ்த்துகள் நித்யா சூப்பர், முதல் கைவினை பகுதியே மிகவும் அருமையாக செய்துருக்கீங்க, பார்ப்பதற்கு உண்மையான சேஞ்சீங் ரோஸ் மாதிரி உள்ளது.

முதல் கைவினைக்கு வாழ்த்துக்கள் நித்யா... எளிமையான செய்முறையில் அழகான பூ...
இன்னும் நிறைய கைவினை குறிப்புகள் கொடுப்பதற்கு வாழ்த்துக்கள்...

கலை

நித்யா முதல் க்ராப்ட்டிற்கு வாழ்த்துக்கள், பூ ரொம்ப அழகா இருக்கு, இன்னும் பல க்ராப்ட் செய்ய வாழ்த்துக்கள்

வெகு அழகு நித்யா. டேபிள் டெக்கரேஷனுக்கும் அழகா இருக்கும் இல்ல!

‍- இமா க்றிஸ்