எக்லெஸ் கீ குக்கீஸ்

தேதி: June 14, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

மைதா மாவு - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
சீனி - கால் கப்
நெய் - அரை கப்
வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை


 

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து சலித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் நெய்யுடன் சீனி, வெனிலா எசன்ஸ் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
அதனுடன் மைதா மாவைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை எடுத்து சம அளவு உருண்டைகளாக உருட்டி பேக்கிங் டிரேயில் அடுக்கி முற்சூடு செய்த அவனில் வைத்து 160 டிகிரியில் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். வெளியே எடுத்ததும் சாஃப்டாக இருக்கும். வேறு தட்டில் மாற்றி ஆற விட்டால் க்ரிஸ்பியாகிவிடும்.
எளிதாகச் செய்யக்கூடிய சுவையான எக்லெஸ் கீ குக்கீஸ் ரெடி. மாலை நேர குயிக் ஸ்நாக்காக பரிமாறலாம். வாயில் போட்டதும் கரைந்துவிடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பிஸ்கட்டை பார்த்தும் ஒரே டெம்ட்டிங்கா இருக்கு... என் ஃப்ரெண்ட் வீட்ல அவன் இருக்கு... நாளைக்கு செய்யச் சொல்லிடுறேன்... சீனியை பவுடர் பண்ணி சேர்க்கணுமா?

கலை

வாணி குக்கீஸ் பார்க்கவே உடனே செய்யனும் போல இருக்கு ப்ளேட்டோட தரீங்களா, ஈஸியான செய்முறை

வேனி கால் கப் அரை கப் ஒரு கப்னா எந்த கப் டீகப் அளவாஇல்ைனா ( 1கப் 120G)அளவாங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

எக்லெஸ் பிஸ்கட் மிகவும் சாஃப்டாக இருக்கும் பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு சூப்பர்.

டீ கப் அளவு இல்லீங்க, measuring கப் (120க்) அளவுதான்

குறிப்பு பிடிச்சிருக்கு,நெய்க்கு பதில் பட்டர் சேர்த்து செய்யலாமா?

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நல்லா இருக்கு... உடனே செய்ய ஆசை ;( ஆனா ஏற்கனவே நான் கேட்டேன்னு குறிப்பு கொடுத்த ரேணு குக்கீஸ் பெண்டிங். அதை முடிச்சுட்டு இதையும் செய்துடுறேன். இப்ப தான் பசங்க ஸ்கூல் போக துவங்கி இருக்காங்க, இனி 3 மணி நேரம் வனிக்கு லீவ்.

டவுட்டு - மாவை உருண்டையாவே வெச்சிருக்கீங்களா? தட்ட தேவையில்லையா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஈசி குக்கீஸ் வாணி. பாப்பா நலமா?:-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாணி அக்கா,
ஈஸி கீ குக்கீஸ், சூப்பர்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கலை
பவுடர் பண்ணியும் சேர்க்கலாம்,அப்பட்யேயும் சேர்க்கலாம்.

உமாகுணா
தட்டோட எடுத்துக்கோங்க,உங்களுக்குத்தான்

நன்றி பாலபாரதி

பட்டரை உருக்கி சேர்க்கலாம் முசி

வனி மாவை உருட்டி டிராஇல் வைக்கும் போது லைட்ட அழுத்தி விட்டால் போதும்.

உமா, பாப்பா நல்ல சுகம் , நன்றி

நன்றி சுபி

செய்து சுவைத்து வீட்டில் எல்லோர் பாராட்டையும் வாங்கியாச்சு :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குக்கீஸ் அருமையாக‌ இருந்தது;
என் மகள் மிகவும் விரும்பி சாப்பிட்டாள்.
மிக்க‌ நன்றி.