கிட்ஸ் க்ராஃப்ட் - ஃபோட்டோ ஃப்ரேம்

தேதி: June 16, 2014

5
Average: 4.6 (5 votes)

 

கார்ட் போர்ட் அட்டை
ஸ்பாஞ்ச் ஷீட் (அ) ஃபெல்ட் துணி
க்லிட்டர்ஸ் - விருப்பமான நிறங்களில்
சம்கி
ஃபெவிக்கால்
ஃபோட்டோ
கத்தரிக்கோல்

 

கார்ட் போர்ட் அட்டையை சதுர வடிவவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஸ்பாஞ்ச் ஷீட்டை படத்தில் உள்ளது போல நான்கு துண்டுகள் நறுக்கி வைக்கவும்.
அட்டையின் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் ஃபெவிக்கால் தடவி நறுக்கிய ஸ்பாஞ்ச் ஷீட்டை இவ்வாறு ஒட்டி வைக்கவும்.
பிறகு அட்டையின் வலது, இடது புறங்களில் ஃபெவிக்கால் தடவி மீதமுள்ள ஸ்பாஞ்ச் ஷீட்டையும் ஒட்டி காயவிடவும்.
நன்கு காய்ந்ததும் ஒட்டிய ஸ்பாஞ்ச் ஷீட்டின் மீது இதே போல் க்லிட்டர்ஸால் விருப்பமான டிசைனை வரைந்து சம்கி ஒட்டவும்.
குழந்தைகள் செய்யக் கூடிய எளிமையான ஃபோட்டோ ஃப்ரேம் ரெடி. நடுவில் ஃபோட்டோவை ஒட்டிவிடவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பிடிச்சு இருக்கு. நான் ஸ்பாஞ் சேர்க்கப் போறேன். ஸ்கூல் பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம். அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
ஃபோட்டோல இருக்கிற பாப்பா க்யூட். :-)

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகான க்ராஃப்ட், மிகவும் எளிமையாக செய்யகூடியதாக உள்ளது, சூப்பர் கண்டிப்பாக செய்கிறேன்.

சிம்பிளா அழகா இருக்கு... என் ட்யூஷன்ல இருக்கும் குட்டிப் பசங்கல இந்த ஃபோட்டோ ஃப்ரேமைச் செய்யச் சொல்லப் போறேன்.

கலை