டைம் மேனெஜ்மென்ட்

காலை நேர வேலைகளை எந்த வரிசையில் செய்வீங்க.எனக்கு அரசு போட்டி தேர்விற்காக 9-10 am முதல் 1-2pm வரை படிக்க வேண்டியுள்ளது..எனக்கு ஸ்கூல் போகும் பெண் இருக்கா.குழந்தையை காலையில் ரெடி பண்ண வேண்டியிருக்கிறது...ஸ்கூல் விட/அழைக்க நான் செல்கிறேன். குழந்தை ஸ்கூல் டைம் 8.30 am - 2.30 pm.ஸ்கூல் முடிந்து வீடு வரதுக்கு 3pm மணி ஆகிவிடும்..அவள் வந்துட்டால்னா அவ கூடே நா இருக்கணும்.கார்டூன் 2 hrs per day மொத்தமாக அனுமதிப்பேன்.4/5 pm முதல் 6‍/7 வரை இரண்டு மணி நேரம் அவள் எழுத படிக்க போய்டும்...

படிப்பது,சமையலை தவிர மற்றவற்றை மெதுவாக செய்வேன்.(இது வேறயா சோம்பேறின்னு திட்டறது கேக்குது! பொறுத்துகோங்க..வாஷிங் மெசின் இருந்தாலும் நாமதானே காய போடனும்.:-( )

பொதுவாகவே வீட்டு வேலை செய்ய பிடிக்காது..ஆனால் நாந்தானே செய்யணும்னு செய்வேன்..கணவர் திட்டாமல் A-Z எல்லா வேலைகளிலும் உதவுவார்..என்க்குதான் என் படிப்பிற்காக அவரை வேலை வாங்க பிடிக்கலை.கணவர் பணி குறிப்பிட்ட டைம் இல்லாதது..

20 நிமிட‌ யோகா தினசரி செய்கிறேன்..நடைப்பயிற்சிக்கு 40 நிமிடம் ஒதுக்க‌ 2 வருடம் முயற்சி மட்டும் செய்கிறேன்.யோகா வீட்டில் செய்யலாம் என்பதால் முடிகிற‌து..

படிக்கும்போது காலை நேர‌ அமைதியை படிப்பிற்காக‌ ஒதுக்க‌ முடிய்யவில்லைனு தோணுது..வீட்டு வேலை பார்க்கும்போது கணவர்,குழந்தயை சரிவர‌ கவனிகலைனு வருத்தமாக‌ இருக்கு..

எனக்குன்னு இல்லை பொதுவாகவே எல்லா கத்துகுட்டிங்களுக்கும் சொல்லி தாங்க‌..

காலையில் எத்தனை மணிக்கு எழனும்? என்னென்ன வேலைகளை பார்க்கலாம்?அதாவது எந்த‌ வேலையை முதலில் செய்வது? எந்த‌ வேலைகள் எல்லாம் ஒரே நேரத்தில் சேர்த்து செய்வது? முடிந்தால் டைம் குறிப்பிட்டு சொல்லுங்க‌..

நீங்க சொல்லும் ஷெடியூல் தான் எனக்கும் ;) நான் ஃபாலோ பண்றதை உங்களுக்கு சொல்றேன், நான் அறுசுவை படிக்கும் நேரம் நீங்க பாடம் படிங்க. வாரத்துக்கு தேவையான காய் வாங்கி ஒரே நாளில் சுத்தம் பண்ணி கட் பண்ணி ஏர்டைட் கண்டெய்னரில் ஸ்டோர் பண்ணிக்குவேன். காலை 5.30 - 6 குள்ள எழுந்துடுங்க. முதல்ல குக்கர்ல போடுறதை போடுங்க. பால் காய்ச்சுவது போன்ற வேலைகளை முதலில் துவங்குங்க. குழந்தைக்கு கொடுக்கும் உணவு, காலி டிஃபன், மதிய உணவு கொடுக்க எல்லாம் வருசையா பண்ணலாம். காய் முதல்லயே கட் பண்ணி வைக்கிறதால அதிக நேரம் எடுக்காது. என்ன செய்வது என முன் நாள் இரவே முடிவு பண்ணிடுங்க. காலை சீக்கிரம் வேலை ஆகும். முடிஞ்சா இரவு டிஃபனுக்கு செய்யும் சட்னி, குருமா, சாம்பார் போன்றவை காலை டிஃபனுக்கு பயன்படுத்தும்படி செய்யுங்க (உங்களுக்கு அவ்வளவு நேரம் எடுக்காது, எனக்கு இருவரை காலை ரெடி பண்ணனுமே, அதனால் இப்படி ஒரு சுலப வழி முடியும் அன்று வெச்சுடுவேன்). இப்போ எல்லோரும் கிளம்பும் நேரம் உங்க வேலை எல்லாஏ முடிஞ்சிருக்கு. குளியல், சமையல் (மதியத்துக்கும் சேர்த்து). சோ... வீட்டுக்கு வந்ததும் படிக்கலாம். மதிய உணவுக்கு பின் 3 மணி வரை டைம் இருக்கு... அந்த நேரம் துணி காய போட, வீட்டு வேல மிச்சம் என ஆரம்பிக்கலாம். பிள்ளை வந்த பின் நேரம் அவளோடவே போயிடும். டிவி பார்க்கும் நேரம் காய் ஏதும் நறுக்கும் வேலை இருந்தா செய்துடுங்க. நான் மதியம் பிள்ளைகள் மதியம் தூக்கும் போது இரவு உணவை தயார் பண்ணிடுவேன். மாலை அவங்க எழுந்ததும் ஹோம் ஒர்க். அப்பறம் சாப்பிட வைக்க, தூங்க வைக்க... நேரம் போயிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//வாரத்துக்கு தேவையான காய் வாங்கி ஒரே நாளில் சுத்தம் பண்ணி கட் பண்ணி ஏர்டைட் கண்டெய்னரில் ஸ்டோர் பண்ணிக்குவேன்
மின்வெட்டினால் கெட்டு போகாதா?..நான் கோயம்பேடில் மொத்தமாக‌ 10 நாளுக்கு வாங்கிடுவேன்..3 நாளைக்கு ஒருமுறை காயை வெளியே எடுத்து உலர‌ வைத்து மறுபடியும் ஃப்ரிட்ஜில் வைப்பேன்.காயை கட் செய்து வைத்தால் நீர் விடாதா?

ஒகே .முதல்நாளே காய் நறுக்கிவிடுகிறென்.டிவி அவ்வளவாக‌ பார்ப்பதில்லை.பொண்ணோட‌ நிக் டிவியை(கார்ட்டூன்) மாற்ற‌ முடியவில்லை.//டிவி பார்க்கும் நேரம் காய் ஏதும் நறுக்கும் வேலை

தனியாக‌ சிரித்தேன்..அறுசுவையும் ஒரு பாடமே!( பாபு அண்ணாக்கு ஒரு கூடை ஐஸ்)//அறுசுவை படிக்கும் நேரம் நீங்க பாடம் படிங்க

ஓடி வந்து எனக்கு பதில் தந்ததுக்கு நன்றி..

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

காயை நீர் இல்லாமல் காய விட்டு தான் நான் நறுக்குவேன். அப்பவும் வெண்டைக்காய் போன்றவை பிசு பிசுக்குமோ என்று ஸ்டோர் பண்ணும் கண்டெய்னரில் அடியில் டிஷூ போட்டு நறுக்கி வைப்பேன். அப்படியே இருக்கும். கரண்ட் போறதுனால ஒன்னும் ஆகாது...ரொம்ப நேரம் போகுதா என்ன? 1/2 நாள், 1 நாள் இல்லன்னா பிரெச்சனை தான்... மற்றபடி 2 மணி நேரம் வரை எல்லாம் ஓக்கே தான். அந்த நேரம் அதிகமா ஃப்ரிட்ஜ் திறக்காம இருந்தா கூலா இருக்கும். அதிகம் நறுக்கி வைக்க பயமா இருந்தா 3 நாளைக்கு ஒரு முறையா நறுக்கி வைங்க. எனக்கு அவ்வளவுக்கு கூட நேரம் இருக்குறதில்லை ஜெயா.

காலையே ஒரு சாம்பார், கூட்டு, பொரியல், ரைஸ்ன்னு செய்து தான் இவருக்கு கொடுக்க வேணும். பிள்ளைகளுக்கு பழங்கள், குக்கீஸ், பிஸ்கட்ஸ் கொடுப்பேன். டிஃபன் செய்து ஊட்டும் வேலை தான். இதுக்கே 9 மணி ஸ்கூலுக்கு 8 மணிக்குள்ள சமையல் எல்லாம் முடிச்சு வந்துடனும். அப்ப தான் இருவரையும் ரெடி பண்ணி சாப்பிட வெச்சு ஸ்கூலில் விட முடியும்.

பிள்ளைகள் ஸ்கூல் பேக், மறு நாள் போடும் ட்ரெஸ் எல்லாம் இரவே எடுத்து வெச்சுடுவேன். காலை நேரம் அதை தேடுவது கூட எனக்கு தலை வலியான வேலை. :( முதல் 10 நாள் ரொம்ப தினறினேன்... இப்ப தான் செட் ஆகிட்டு வருது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இனி காய் கட் பண்ணி வைக்கிறேன்.

பாத்திரம் எப்போ,எத்தனை தடவையாக‌ தேய்க்கணும்?

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

எனக்கு அதுக்கு மெய்ட் இருக்காங்க... அதனால் அந்த வேலை பக்கம் போறதில்லை. நீங்க சுலபமா செய்ய அப்பப்ப பயன்படுத்தினதை அப்பப்ப முடிச்சுட்டே வாங்க. அம்மா அப்படி தான் வேலை ஆள் இல்லாம பண்ணுவாங்க. பத்து அதிகமில்லாம தேய்க்கு சுலபமா இருக்குறதை உடனுக்குடனே கழுவி வெச்சுடுங்க. எல்லா வேலையும் முடிஞ்ச பிறகு இரவு படுக்க போகும் முன் பாத்திரத்தை தேய்த்து வெச்சாலும் சரி தான் (தங்கை அப்படி தான் ;) இல்லன்னா காலை சமைலுக்கு நமக்கு வேலை இல்லாம எல்லாம் அடுப்பில் இருக்கும் பாருங்க... அப்ப நடு நடுவே முடிச்சுடுவா)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரி அக்கா

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

வனிக்கா சூப்பரா குடும்பம் நடத்துரீங்க.நேரே வந்து கத்துக்கனும்போல இருக்கு.

ஜெயா நீங்க தான் உங்களுக்கு டைம் போடனும்,வீட்டுக்கு ஆட்களுக்கு ஏற்ற படி!முதல் நாள் நைட்டே,மறுநாள் சமையல முடிவு பண்ணிட்டாலே பாதிக்கு பாதி டென்ஷன் முடியும்,முடிந்த வரை காலைல எல்லோரும் இருக்கும் போதே எல்லா வேலையவும் முடிக்க பாருங்க, எங்க வீட்ல மூனு பேரும் 3 டைம்க்கு கிளம்புவாங்க, பெரியவனுக்கு ஒரு பிரெக் பாஸ்ட், லன்ச், சின்னவனுக்கு ஒரு பிரெக் பாஸ்ட், அவருக்கு ஒரு லன்ச் எப்படியும் நாலு அஞ்சு ரெசிப்பிஸ் செய்யனும்,
5 லிருந்து 6.30 வரை சமையல் தான், மதிய சாப்பாடு எனக்கும் சின்னவனுக்கும் மட்டும் தான், பெரியவனுக்கு சமைக்கறதுலயே எடுத்து வச்சுருவேன்,பெரியவன் 6.30 கிளம்பிடுவான், அடுத்து சின்னவன் 7.30க்கு கிளம்புவான்,

6.30 டூ 7.30 இவனுக்கு மட்டும் தான், வேற எந்த வேலையும் இல்லை,அவன பஸ் ஏத்திவிட்டு வந்து பாத்திரம் கழுவிட்டு,பெட் எடுத்து வைக்க, துணி துவைக்க எடுத்து போட இப்படி போகும், இவர் 8.30க்கு கிளம்பும் போது வீட்டு வேலை எல்லாம் முடிஞ்சிடும்.

எல்லாரும் கிளம்பினபிறகு எனக்கு வீட்டு வேலை இருக்க கூடாது, கிராப்ட் செய்ய, பிரென்ட்ஸ்க்கு போன் அடிக்க, பேஸ்புக், அறுசுவைன்னு, மதியம் 1 வரை ஓடும்,
1.30க்கு சின்னவன் வந்தா, சாப்பாடு ஊட்ட சாப்பிட 2.30, 4 மணி வரை பிரி தான்..

பெரியவன் வந்ததும் திரும்ப மதிய பாத்திரம், டிபன் இதெல்லாம் கழுவிட்டு, நைட் டின்னர்க்கு சமைத்துவிடுவேன், 5 மணிக்கு மேல பசங்க படிப்பு, விளையாட்டுன்னு ஓடும் 7 க்கு சாப்பாடு கொடுத்து படுக்க வச்சுடுவேன்,

எனக்கு வீட்டுகுள்ளயே தான் துணி காய போடனும், சோ ஈவினிங் தான் துவப்பேன், நைட் கிச்சன் வேலை முடிந்ததும் வீடு முழுக்க ஒரு முறை கூட்டி விட்டு, மறுநாளுக்கு தேவையான எல்லாத்தையும் தயார வைச்சு, அயர்ன் பன்னிட்டு, திரும்பவும் எனக்காக கொஞ்ச நேரம் உட்காந்து கிராப்ட் வேலை, 12க்கு மேல தான் படுக்க போவேன்,

முக்கியமா பாலோ பன்றது யாரும் வீட்ல இல்லைன்னா எனக்கு மட்டும் தான், மத்த டைம் வீட்டுவேலை சமையல் வேலைன்னு பிரிச்சுகிட்டு ஓட்ட வேண்டியது தான்,

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

Both of your time management tips are super. I'm also going to follow your ideas.But I'm a spinster.

No pains,No gains

ANANTHAGOWRI.G

இதத்தான் எதிர்பார்த்தேன்..1000 நன்றி..

இப்டி சொல்லலாமான்னு தெரியலை..திருமணத்திற்கு முன்புவரை எல்லாம் ஒரு சிஸ்டமா இருந்தது..குழந்தைக்கு அப்புறமாதான் குழப்பம்..அதுவும் ஸ்கூல் டயத்தை படிக்க‌ தீர்மானித்தபிறகுதான்..பொண்ணு ப்ளெஸ்கூல் போகும்போது முழு இரவு (11‍pm-5am) படித்திருக்கிறேன்.பகலில் வீட்டு வேலை,என் தூக்கம் நேரம் காலமே கிடையாது.
இப்போதான் ரெகுலராகனும்னு தோணுது..

உங்க‌ பதிவு படிக்கும்போதே மனசில‌ நா பண்ணபோற‌ வேலைகளுக்கான‌ வரிசை கிடைக்குது..சந்தோசம் அக்கா

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்