யூ.கே.ஜி

என் மகள் யூ.கே.ஜி படிக்கிறாள். ரைம்ஸ் சீடிக்களை உபயோகிக்கலாமா? ஏதேனும் கம்பெனி பிராண்ட் உள்ளதா?

தினமும் இரவில் ஒரே ஒரு கதை சொல்லும் போது என்ன‌ கதை சொல்லலாம்..புராண‌ கதைகளில் உள்ள‌ சம்பவங்களை குறிப்பாகவாது கொடுங்க‌..எம்மத‌மும் ஓகே...

இடதுகை பழக்கம்..எழுத்துக்கள் தெளிவாக‌ தெரியும்படி உள்ளது.ஆனால் அழகாகாக‌ இல்லை..இவ‌ நன்றாக‌ டிராயிங் பண்ரா..எந்த‌ பொருளையும் அடுக்கி பார்க்கும் பழக்கமுண்டு..இடதுகை பழக்கம் உள்ளதிற்கு நிறைய‌ எழுத்து பயிற்சி கொடுக்கணுமா? கை வலிக்க‌ அல்ல‌.. :‍‍‍‍)
லீவில் பழைய‌ எல்.கெ.ஜி போர்சனை எழுத‌ சொன்னால் நா ஸ்கூல் போகும்போது எழுதறேன்னு தெளிவா சொல்றா..அதே மாதிரி எழுதி காட்டிடா.

ஃப்ரிட்ஜில் காய் அடுக்கும்போது,பழக்கடையிலோ சரியாக‌ காய்/பழம் பெயர் சொல்ரா..என்னிடம் ச்கூல் புக்கில் சொல்ல‌ சொன்னால் வாயை திறக்கலை.பள்ளியில் சொல்கிறாளென‌ ஆசிரியை சொன்னாங்க‌..

யூ.கே.ஜி போர்சனை அட்வான்சாக‌ சில‌ பெற்றோர்கள் விடுமுறையில் சொல்லி கொடுத்திருக்காங்க‌..இது சரியா தவறான்னு தெரிய‌ வேணாம்..என் மகளை எப்டி படிப்பிக்க‌?

என் மகள் அவளாகவே என்னிடம் தன் சந்தேகங்களை தீர்த்து கொள்கிறாள்.உ‍ம். பென்சில் கல்லில் பண்ணியதா? ரயில்வே ஸ்டேசன் போனால் எழுத‌ படிக்க‌ தெரியாவிட்டாலும் டிக்கெட் டீடெயில்ஸ்,ட்ரயின் எப்டி தண்டவாளத்தில‌ எப்டி கரக்டா ஓடுது?

என் கணவர் மாவட்ட‌ அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்.நான் 10 மதிப்பெண்ணில் மாநில‌ அளவையும் 2 மதிப்பெண்ணில் மாவட்ட‌ அளவையும் தவற‌ விட்டேன்.நான் அமைதியான‌ படிக்கும் பெண் என்றால் என் கணவர் சேட்டை பண்ணி வாங்கிய‌ அடிகள் ஆயிரம்.இன்றைய‌ கால‌ சூழல் வேறயே..என் பெண்ணும் நன்றாக‌ படிக்கணும்..ஆனால் எந்த காரணத்தை முன்னிட்டும் குழந்தைதன்மை கெடுக்கவோ குறைக்கவோ விரும்பவில்லை..
அவளது விருப்பத்திற்கே முன்னுரிமை..ஒரு பெரிய‌ பொண்ணாகவே நடத்துகிறோம்.உ‍ம்.கடைக்கு போலாமா அல்லது பீச்சுக்கு போலாமா?

ஒரு மருத்துவர்(என் அத்தை) சொன்னது .பள்ளியில் ஆசிரியர் முதல்முறை சொல்லிதரும்போது புதிய‌ விசயம் என்பதால் குழந்தை கவனிக்கும்." கவன‌ குவிப்பு திறன்" வளரும்..பழகிய‌ விசயங்களை பள்ளியில் ஆசிரியர் சொல்லும்போது நமக்கு தெரிந்ததுதானேனு இருக்கும்னு சொன்னார்.
நர்சரி பள்ளி நடத்தும் என் சித்தப்பா சொன்னது " எல்.கே.ஜி பசங்க‌ யு.கே.ஜி போர்சனை படிக்கும் காலம்..அவங்க‌ மூளை ரொம்ப‌ ஷார்ப்..எதயும் படிக்கலாம் அவங்க‌ படிக்க‌ பிடிக்கறது எல்லாத்தயும்..ஓவர்லோட் செய்ய‌ வேணாம்.,.முடியும் மட்டும் கத்து கொடுங்கன்னு"...
என் அம்மா பள்ளி தலைமையாசியை..அவங்க‌ சொன்னது "அவளே படிப்பா." .இந்த‌ காலத்தில‌ இது ஒத்து வருமா? இப்போ சொல்வ‌துதானே பசுமரத்தாணி போல‌ பதியும்..

**என்னவெல்லாம் சொல்லி தரலாம்?
**ஒரு நாளைக்கு ஸ்கூல் ஹோமொர்க் முடிக்க‌ என்று எவ்ளோ நேரம் ஒதுக்க‌?
**ஸ்கூல் ஹோமொர்க் எழுதும்போது தாயோ தந்தையோ பக்கத்தில் கூடவே இருக்கனுமா?பின் நாளில் தனியாக‌ படிக்காமல் நம்மை எதிர்பார்க்குமா?
**சத்தமாகவா அல்லது மனசுக்குள் படிப்பது நல்லதா?
**ஸ்கூல் போர்சனை நீங்க‌ எப்டி எந்த‌ முறைகளில் சொல்லி கொடுக்கறீங்க‌..
(நானும் உன் சட்டையில‌ எத்தன‌ பட்டன்,எத்தனை பஸ் போகுதுனு தான் கணக்கே சொல்லி தரேன்பா)
**கிட்ஸ் செய்யக்கூடிய‌ கைவினைகள் சொல்லுங்க‌..
**பாட‌ புத்தகம் தவிர‌ ஓவர்லோட் கொடுக்காமல் என்ன‌வெல்லாம் சொல்லி தரலாம்..கொஞ்சம் டீடெயிலா சொல்லுங்க‌..

அம்மாடி.....அம்புட்டு கேள்வி,சந்தேகங்கள்.....?
குட்டீஸ் இதனையெல்லாம் எடுத்து சாப்பிடுவாங்க‌. அவங்களுக்கு எந்த‌ நேரத்தில் எது தேவைன்னு அவங்களுக்கே புரியும்.இருந்தாலும் நீங்க‌ கேட்பதுபோல‌ அவர்கள் வழியிலேயே அவர்கலுக்கு பிடித்ததுபோல‌ கொண்டுசெல்ல‌ நாமும்சிலது ஒத்துப்போக‌ வேன்டியுள்ளது.
சிடி‍-apex நல்லாயிருக்கு.
இடதுகை பழக்கம்,சூப்பருங்க‌.என் தங்கை இரு கையிலும் எழுதுவாள் நீங்க‌ சொன்னதுபோல‌ இடதில் கொஞ்சம் கோணலா வரும். பட் ஆர்ட் பண்ணும்போது இடதுகையிலும் அழகா வரும்.என் சின்ன‌ பையன் அடிக்கடி இடதுதான் யூஸ் பண்றான்.எழுதும்போதுதான் கவனிக்கனும்.

நீங்க‌ அப்படியே விடுங்க‌. ஸ்பெஷல் தெரியுமா அது.அதிக‌ பலம் இருக்கும்.மேலும் மாற்ற‌ முயற்சி எடுக்கும்போது வலது கையில் செய்யும்போது மெதுவாகத்தான் வரும். பளு தூக்க‌ சிரமப்படுவார்கள். எழுத்து நாளடைவில் அழகாகிடும்.

ஹோம்வொர்க் ‍ _ இதில் மாலை அரைமணின்னா அதற்குள் அவங்களுக்கு இருமுறை பிரேக் குடுங்க‌. அதாவது ஒரு நோட் முடித்ததும் 5 நிமிடம்னு.அவங்களுக்கும் ஈசியா இருக்கும்.

மேலும் நம்ம‌ தோழீஸ் நல்ல‌ நல்ல‌ ஐடியாஸ் குடுப்பாங்க‌.

கோயில்,கிஃப்ட் & பிச்சை கொடுக்குபோது வலது கை. மற்றபடி இடதுகை பழக்கத்தை மாற்ற‌ முயற்சி எடுக்கும் எண்ணமே இல்லை...சாப்பாடு சர்வ் பண்ணும்போது சட்னி/பொடி,தண்ணீர்,ஸ்கூல் லன்ச் பாக்ஸில் ஸ்பூன் முதல் எல்லாமே அவளுக்கு வசதியாகவே வைப்பேன்.என்னவொன்னு கார் டிரைவிங்,கம்ப்யூட்டை மவுஸ் உபயோகிக்கும்போதும் பின் நாளில் ப்ரச்சனை வரலாம்.

இது புதிது பா.கேட்டதே இல்லை.//பளு தூக்க‌ சிரமப்படுவார்கள்.
ஒரு எழுத்துக்கே ப்ரேக் எடுத்துப்பாங்க‌//ஒரு நோட் முடித்ததும் 5 நிமிடம்னு

//அவர்கள் வழியிலேயே அவர்கலுக்கு பிடித்ததுபோல‌ கொண்டுசெல்ல‌ நாமும்சிலது ஒத்துப்போக‌ வேன்டியுள்ளது
இப்டி சுருக்கமா ந்றுக்குன்னு சொல்ல‌ தெரியாமதானே நீ..ண்..ட‌ பதிவு...

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

அப்பப்பா... யு கே ஜிக்கு இம்புட்டு டவுட்டா உங்களூக்கு ;) நான் உங்க அம்மா சொன்னதை தான் சொல்வேன்... விடுங்க அவளா படிப்பா. அவ தான் எல்லாமே உங்களை கேட்கறான்னு சொல்றீங்க, உங்ககிட்ட சொல்றா, டீச்சர்ஸ்டையும் சொல்றா... அப்பறம் ஏன் கவலை? கையெழுத்து இடது கை பழகம் இருப்பதால் சரி இல்லை என சொல்ல முடியாது. யூ கே ஜி தானே... இப்ப தான் எழுத பழகுவாங்க. அதனால் அழகா இருக்கனும்னு எதிர் பார்க்க கூடாது. 4 / 5 படிக்கும் போதுன்னா ஓரளவு ஒத்துக்குவேன். ;) எனக்கு இரு கை பழக்கமும் உண்டு. நிறைய வேலைகள் இடது தான் எனக்கு தோது. அடுப்படி வேலைகள் கூட. வெயிட் ஏதும் தூக்கவும் இடது தான் வரும், வலது தாங்காது. ஆனா எழுத்து மட்டும் இடது ஸ்லோ, வலது தான் வேகம் வரும். அதனால் அதை எல்லாம் யோசிக்காதீங்க... மாற்றவும் முயற்சிக்காதீங்க. இயற்கையா எது வருதோ அது தான் அவங்களுக்கு வசதியா இருக்கும். இந்த வயதில் எல்லாமே சொல்லிக்கொடுக்கலாம்... ஆனா அதை கத்துக்கும் ஆர்வம் இல்லாதப்போ தினிக்க கூடாது. மருத்துவர் சொன்னது தான் ;) அவளா ஆர்வமா கேட்டா கற்றுக்கொடுங்க. புதுசு புடுசா பார்க்குறதை சொல்லுங்க... ஆர்வம் காட்டினா என்கரேஜ் பண்ணுங்க... சொல்லிக்கொடுங்க. கேள்வி கேட்க என்கரேஜ் பண்ணாலே கற்றுக்கொள்ள ஆர்வம் வந்துடும்... அதிகமா கத்துப்பாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யு.கே.ஜி‍ அப்டின்னு இல்லை அக்கா..நானும் ,அவரும் கவர்மென்ட் ஸ்கூலில் தமிழ் மீடியம் படித்தவர்களே..எஞ்சினியரிங் படிக்கும்போது முதல் 3 வாரம் சிரமம்.அப்றமாக‌ சரியாகியது..காலேஜிலும்,எம்.என்.சியில் வேலை பார்த்த‌போதும் நான் புரிந்துசெய்த‌ அளவிற்கு மற்ற‌ சிலர் செய்ய‌ இயலவில்லை.இங்கு நான் சொல்ல‌ வருவது மீடியம் பற்றி இல்லை.கவனித்தல்,புரிந்து கொள்வது,தான் நினைப்பதை மற்றவர் மனம் நோகாமல் சொல்லுவது பற்றி.நான் வளர்த்த‌ அதாவது டைரக்சன் ‍பண்ணிய‌ உறவினர் பிள்ளைகள் இப்போது நல்ல‌ மார்க் எடுத்து இருக்காங்க‌.படிப்பே உலகமாக‌ இல்லாமல் ஆனால் தினமும் குறிப்பிட்ட‌ நேரம் படிப்பது.ஆனா சென்னையில் சில‌ பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கறதா பார்த்தா எனக்கே குழப்பமாக‌ இருக்கு..5 வருசமா நா யோசிச்சது எல்லாம் கலந்து கொட்டிட்டேன்பா..(விவேக்‍‍= ஆதித்யா டிவி ஸ்டைலில் 'என் மனசில‌ உள்ள‌ பாரமே கொறஞ்சிடுச்சு' )

பொண்ணு ப்ளே ஸ்கூல் போகும்போது ஒரு பையன் 36 நாட்டு கொடியை படம் பார்த்து சொன்னான்..பிரமிப்பாக‌ இருந்தது..நானும் பொண்ணுக்கு சொல்லி கொடுத்தால் அவ‌ 4 கொடியோட‌ நிறுத்திக்கிட்டா..இன்னொரு பையன் ரொம்ப‌ அழகாக‌ சோலார் சிஸ்டம் எல்லாம் என்கிட்ட‌ சொன்னான்..பையனோட‌ அம்மா என் நெருங்கிய‌ தோழியே..சரின்னு நானும் பையன்ட‌ அதெல்லாம் எங்க‌ இருக்குன்னு ஜெயாத்தைட்ட‌ சொல்லுன்னு கேட்டேன்."என் புக்ல‌ இருக்கு" நா நொந்துட்டேன்.பையனோட‌ அம்மா 1 மாசமா சொல்லி கொடுத்ததாம்..
என்னவெல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கலாம்,எப்டின்னு சில‌ நேரங்களில் புரிவதில்லை.சில‌ அம்மாக்கள் நீங்க‌ இத‌ சொல்லி தரலியான்னு கேட்கும்போது கொஞ்சம் வலிக்குது..நாம‌ பிள்ளைகளை சரியான‌ பாதையில் கொண்டு போறோமான்னு ஒரு டவுட்டு அப்பப்போ வருது.

குழந்தையாக‌ இருக்கும்போது கார்டூன் பார்க்காம‌ எப்போ பார்ப்பாங்கன்னு நானும் என் பொண்ணோட‌ சேர்ந்து 2 மணி நேரம் ஒரு நாளைக்கு பார்ப்பேன்.ஆனா இத‌ பார்த்த‌ மத்தவங்க‌ "நீங்களும் கார்ட்டூனா பார்க்கீங்க‌ ?விளங்கிடும்.எதாவது ரைம்ஸ் சிடி போடுங்கன்னு" சொல்றாங்க‌..என்னக்கா செய்ய‌?

நிச்சயம் அறுசுவை தோழிகள் இதை கடந்துதான் வந்திருப்பாங்க‌.கேட்டுட்டேன்..அவ்ளோதான்..

100% உண்மை அக்கா//கேள்வி கேட்க என்கரேஜ் பண்ணாலே கற்றுக்கொள்ள ஆர்வம் வந்துடும்

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

ஹஹஹா... நான் என் மகனை 4 வயசில் பள்ளியில் சேர்த்தேன். அவனுக்கு அப்போ கலர்ஸ் கூட நான் சொல்லிக்கொடுத்ததில்லை. என்னையும் கேட்டாங்க இப்படி... இந்த பேசிக் கூட தெரியலயே... LKGயான்னு ;) முன்பு ஒன்னாவது தான் முதல்ல பள்ளி போகும் வயசு... அப்பறம் LKGயை கம்பல்சரி ஆக்குனீங்க... இப்போ ப்ளே ஸ்கூல் கூட கம்பல்சரியான்னு கேட்டேன். அட்மிஷன் கொடுங்க.. சொல்லிக்கொடுங்க... எல்லாம் நானே சொல்லிக்கொடுத்துட்டா பள்ளிக்கு ஏன் அனுப்ப?

எனக்கு என் கருத்து சரியே. பிள்ளைகளை சும்மா போட்டு 2 வயசுல இதை சொல்லு அதை சொல்லுன்னு தினிக்க கூடாது. நீங்க சொன்ன கொடி, சோலார் சிஸ்டம் பிள்ளைகள் உங்க பிள்ளை சொல்லும் வேறு விஷயங்களை சொல்லாமல் போகலாம். அந்த பிள்ளைகளின் தனித்தன்மை அது. உங்க பிள்ளைக்கு என்ன தனித்தன்மை இருக்குன்னு பாருங்க... அதுல அவளை என்கரேஜ் பண்ணி கொண்டு வாங்க. அவளை பார்த்தும் நாளை ஆச்சர்யப்படுபவர்கள் இருப்பாங்க. அவளுக்கு காட்ரூம் பிடிச்சா பார்க்கட்டுமே.. அதை விடுத்து வேறு போட்டா அவளுக்கு பிடிக்கலன்னா? வெருப்பா இருக்காதா குழந்தைக்கு?

நீங்களே சொன்னீங்க... உங்க படிப்பும், திறமையும். அதே நம்பிக்கையை பிள்ளை மேல வைங்க :) அவளும் சாதிப்பா. என் மகளுக்கு 6 வயது. வீட்டு அட்ரஸ் சொல்ல சொன்னாங்க. அவ பென்களூர்ன்னு மட்டும் சொன்னா. எனக்கு அது சரியா தான் தோனுச்சு, அவ வயசுக்கு அது தான். ஆனா முழு அட்ரஸ் சொல்லனும்னு கேட்டவங்க எதிர் பார்க்கறாங்க. இன்னும் எங்க அப்பா அம்மாக்கே என் முழு அட்ரஸ் தெரியாது ;) வந்து 5 மாசம் நானே இந்த ஏரியா பேரை அப்பப்ப மறந்துட்டு முழிப்பேன். இதெல்லாம் நாம சொல்லாமலே தெரிஞ்சுக்குமாம் பிள்ளைகள்... நாம பேசிக்குறதை வெச்சு. அப்படி உங்க மகளுக்கு புது புது விஷயங்களை அறிமுகபடுத்துங்க. அவ எதை ஆர்வமா கேட்கறான்னு பாருங்க. அடுத்தவங்க அட்வைஸை தூக்கி தூர வைங்க... உங்க மகளோட இண்ட்ரஸ்டை மட்டுமே பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தனித்தன்மை வரையரதுதான்..அதுவும் கண்ணுலபட்ட‌ எல்லத்தையும் உடனே அவுட்லைன் போடரது, அதெல்லாம் ஓக்கெ..
படிக்கர‌ முறைதான் கேட்டேன்..
இந்த‌ அட்ரஸ் சொல்ரது,போன் நம்பர் சொல்லரது எனக்கும் உங்க‌ கருத்துதான்.பொண்ணே நம்ம‌ ஏரியா என்ன‌? லேண்ட்மார்க் என்னனு என்கிட்ட‌ கேட்டு அவளே சொல்லிட்டாள்..அதோட‌ சரி..
இனி வைக்க‌ வழிய‌ பார்க்கிறேன்//அடுத்தவங்க அட்வைஸை தூக்கி தூர வைங்க..

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

//இனி வைக்க‌ வழிய‌ பார்க்கிறேன்// - சீக்கிரம் வெச்சுடுங்க ;) இல்லன்னா நம்ம புள்ளையை மட்டமா நம்மையே நினைக்க வெச்சுபுடுவாங்க. பொல்லாத உலகம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரைம்ஸ் சிடி - உச்சரிப்பு தெளிவாகும். ஒன்றிரண்டு புதுச் சொற்கள் பிடித்துக்கொள்வார்கள்.
ஒன்றிரண்டு தவை போடலாம். பிறகு அவங்களுக்கும் போர், உங்களுக்குப் போர். :)

எழுத்து பற்றி - தெளிவாக இருந்தால் போதும் இந்த வயதிற்கு. கொஞ்சம் பயிற்சி கொடுக்கலாம். ஆனால் சிரமப்படுத்த வேண்டாம். மௌஸ், ட்ரைவிங்க்லாம்.. பிரச்சினையே இருக்காது. எல்லாமே ஆரம்பத்திலிருந்து பழகிருவாங்க.

‍- இமா க்றிஸ்

//முழு அட்ரஸ் சொல்லனும்னு கேட்டவங்க எதிர் பார்க்கறாங்க.// கர்ர்... அவங்களை விடுங்க.
ஆனா... ஒரு எமர்ஜன்சிக்கு முழு அட்ரஸ், போன் நம்பர், அம்மா அப்பா பெயர், சொல்ல கட்டாயம் தெரிஞ்சிருக்கணும். அதை சிரமம் பார்க்காம, வயசு பார்க்காம சொல்லிக் கொடுக்கிறது நல்லது. வீடு மாறும் போது நினைவா திரும்ப சொல்லிக் கொடுக்கணும்.

‍- இமா க்றிஸ்

நீங்கலள்ளாம் நல்லா (இங்க‌) வருவீங்கன்னு தெரியும்..ஹ‌ ஹா

இமா பொண்ணு சென்னை ஏரியா லேண்ட்மார்க் சொல்றா..அது வந்தாலே வீடு தெரியும்..ஸ்கூல் நேம் ஏரியா தெளிவு...எங்க‌ மொபைல் ந‌ம்பர் 8 வருடமாக‌ மாற்றியதில்லை..மொபைல் ந‌ம்பரை 2 மாச‌ லீவில் மறந்தாச்சு..மொபைல் ந‌ம்பரை மெட்டு போட்டு ரைம்ஸ் மாதிரி சொல்லி கொடுத்துருக்கணும்போல‌..

எழுத்து..நேற்று நான் இங்க‌ உருகி பதிவு போட்டுருக்கேன்..பயபுள்ள அவ‌ அங்க‌ ஸ்கூலில் ஸ்டார் வாங்கிட்டு காட்டுதா..புது மிஸ் சொல்றாங்க‌..அவ‌ லெஃப்ட் ஹேண்ட்தானே..ஸ்லோவாயிருந்தாலும் அழகா எழுதறா..எனக்கு அழவா சிரிக்கவானு தெரியல‌..உண்மையா கோபம் வந்தது இமா..அவ‌ என்கிட்ட‌ லீவில் சொன்னது "ஸ்கூலில் எழுதுவேன்"..அவ்ளோதான்..

ரைம்ஸ் சிடி ப்ஃராண்ட் சொல்லுங்க‌..UTல் நிறைய‌ வருகிறது..

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்