அட்மின் அண்ணா அவர்களுக்கு

அட்மின் அண்ணா அவர்களுக்கு வந்தனம் அறுசுவையில் நீங்கள் ஏன் முகநூல் மாதிரி நோட்டிஃபிகேஷன் ஆப்சன் வைக்க கூடாது ஏனென்றால் 2 நாள் சேர்ந்தாற்போல் அறுசுவை வரவில்லை என்றால் சமீபத்திய கருத்துகளை விட்டு வெகு தூரம் நமக்கு வந்த கருத்துகளோ சந்தேகங்களோ அல்லது நம் கருத்துக்களுக்கு சந்தேகங்களுக்கு வந்த பதில்களோ கடந்து போய் விடுகிறது பிறகு ஒவ்வொரு குறிப்பிற்கும் போய் தேடி தேடி செக் பண்ண வேண்டியதாக இருக்கிறது நாம் பழைய குறிப்பில் சந்தேகம் ஏதும் கேட்டால் நிறைய பேருக்கு தெரியாமலே போய்விடுகிறது நோட்டிஃபிகேஷன் இருந்தால் அவரவர் பக்கதிலேயே நமக்கு ஏதும் தகவல் வந்திருக்கிறதா என்று அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் அல்லவா? நமக்கு ஏதும் கருத்துக்களோ நம் கருத்திற்கு பதில்களோ இல்லாத பட்சத்தில் நாம் கருத்து தெரிவித்த குறிப்புகளை தேடி பார்த்து செக் செய்யும் தேவை இருக்காது அல்லவா? அதேசமயம் பழைய குறிப்புகளில் வந்த சந்தேகங்களுக்கோ கருத்துகளுக்கோ பதிலளிக்கவும் வசதியாக இருக்கும் அல்லவா? தவறாக கூறியிருந்தால் அதிகபிரசங்கி தணமாக பேசியிருந்தால் மன்னிக்கவும். தோழிகளின் யோசனைகள் என்ன?

ஆனால் இதைப் பற்றி ஏற்கெனவே ADMIN ANNA சொல்லி இருந்ததாக நியாபகம்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

anna same problem any solution///

நீங்கள் கேட்டதில் தவறு எதுவும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சனை பலருக்கும் இருக்கின்றது என்பதை நான் அறிவேன். இது குறித்து ஏற்கனவே சிலமுறை பேசி இருக்கின்றோம்.

பதிவுகளுக்கு பின்னூட்டங்கள்/கருத்துக்கள் வந்துள்ளதை அறிய ஆரம்ப காலத்தில் 'சமீபத்திய பதிவுகள்' என்று ஒரு வசதி கொடுத்து இருந்தோம். அதன் மூலம் நீங்கள் கொடுத்த பதிவுகளுக்கு ஏதேனும் பின்னூட்டங்கள் வந்திருந்தால் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆனால் அந்த வசதியைக் கொடுக்க பயன்படுத்தும் tracking module சர்வர் லோடினை மிகவும் அதிகரிக்கக்கூடியது. சமையல் குறிப்பு, கைவினை, மன்றம், கதை கவிதை என்று எல்லா பகுதிகளுக்கான பின்னூட்டங்களையும் ஆராய்ந்து, உங்கள் பதிவுகள் மட்டும் எடுத்து, அதில் கடைசியாய் பின்னூட்டம் வந்துள்ளவற்றை பட்டியலிட வேண்டுமெனில், ஒவ்வொரு முறையும் நீண்ட நேரம் எடுக்கக்கூடிய database queries இயங்க வேண்டும். இதனால் தளத்தினை அதிகம் பேர் பார்வையிடும் peak hours ல்லெல்லாம் அறுசுவைப் பக்கங்களை திறக்கவே முடியாமல் போகும். பழைய உறுப்பினர்கள் அந்த சிரமங்களை எல்லாம் நன்றாக அறிவார்கள்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்விதமாக, எவையெல்லாம் சர்வர் லோடினை அதிகரிக்கின்றதோ அவற்றை எல்லாம் அறுசுவையில் இருந்து எடுத்துவிட்டோம். அதில் முக்கியமானது இந்த வசதி. இப்போதும்கூட வலதுபக்கம் உள்ள சமீபத்திய கருத்துக்கள் பெட்டிக்கான query மிகவும் நேரம் எடுக்கக்கூடியது. ஆனால் வேறு வழியில்லாமல்தான் அதைத் தொடர்ந்து வைத்து இருக்கின்றோம். அதையும் நீக்கினால் பின்னூட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ள முடியாமலே போய்விடும். எனவே ட்ராக்கிங் ஸிஸ்டம் மீண்டும் கொண்டு வருவது என்பது இயலாது என்று எண்ணுகின்றேன். ஆனால் இதற்கான மாற்று ஏற்பாடுகளைப் பற்றி ஆராய்ந்தபோது நீங்கள் குறிப்பிட்டு இருந்ததைப் போல், email notification ஓரளவிற்கு மாற்று வசதியாக இருக்கும் என்று பட்டது. அதைக் கொண்டு வருவது ஓரளவிற்கு எளிதானது என்றாலும், நடைமுறையில் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை கொஞ்சம் ஆராய வேண்டியுள்ளது.

என்னை யோசிக்க வைக்கும் முக்கியமான பிரச்சனை, உங்களின் மெயில் பாக்ஸ் விரைவில் நிரம்பும் பிரச்சனைதான். மன்றத்தில் நீங்கள் ஒரு இழை ஆரம்பித்து அதற்கு ஒரு 50 பின்னூட்டங்கள் வந்தால் உங்களுக்கு 50 மின்னஞ்சல்கள் வந்திருக்கும். சில பரிசோதனைகளைச் செய்துவிட்டு இந்த வசதியைக் கொண்டு வர முயற்சி செய்கின்றேன். இதை மெயில் சர்வர் வைத்து பரிசோதிக்க வேண்டும் என்பதால் என்னுடைய லோக்கல் சிஸ்டமில் இதைச் செய்ய முடியாது. சர்வரில் வைத்துதான் பரிசோதனை செய்யவேண்டும். கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். முயற்சித்துப் பார்த்துவிட்டு இங்கே அறிவிக்கின்றேன்.

மேலும் சில பதிவுகள்