வீட்டு குறிப்புகள் என்ற ஒரு தலைப்பு

வீட்டு குறிப்புகள் என்ற ஒரு தலைப்பு இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும்.(உதாரணமாக வீட்டு அலங்காரம், easy way to clean kitchen, kitchen tips,kitchen things organization, kitchen decaration etc.,)

நீங்கள் குறிப்பிட்டு உள்ள தலைப்பினை மன்றத்தில்தான் சேர்க்க சொல்கின்றீர்கள் என்று எண்ணுகின்றோம். மன்றத்தில் புதிய தலைப்புகள் சேர்ப்பது எளிது. சமையலறை சந்தேகங்கள் என்று ஒரு தலைப்பு ஏற்கனவே உள்ளது. பொதுவான விசயங்களுக்கு புதிதாக ஒரு தலைப்பு சேர்க்கலாம்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் சமையல், உணவு, உடல் ஆரோக்கியம் இவற்றைத் தவிர வேறு விசயங்களை இங்கு அனுமதிக்க வேண்டாம் என்று நினைத்தோம். பெண்கள் அதிகம் பார்வையிடும் தளம் என்பதால், அந்தக் கட்டுப்பாட்டினை கடைபிடிக்க முடியவில்லை. பல்வேறு விசயங்களில் அவர்களுக்கு ஆலோசனை தேவைப்படுவதை உணர முடிந்தது. அதுமட்டுமல்ல, அவர்களுடைய பல கேள்விகளுக்கு பெண்கள்தான் பதில் அளிக்க முடியும் என்பதும் தெரிந்தது. எனவே, தற்போது எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், அனைத்து சந்தேகங்களையும் பதிவதிற்கு அனுமதிக்கின்றோம்.

ஆனால், அவற்றிற்கெல்லாம் முறையான தலைப்புகள் இல்லை என்பது உண்மை. இரண்டொரு நாளில் சேர்த்துவிடுகின்றோம்.

தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

நன்றி திரு. பாபு.

மேலும் சில பதிவுகள்