எனக்கு மிகவும் வெறுப்பாக உள்ளது

வணக்கம் தோழிகளே
எனக்கு திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. ஒரு வருடம் முன்பு கரு தரித்தேன். குரோத் நன்றாக இருந்தது. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஹார்ட் பீட் இல்லை என்று ஸ்கேன் செய்த டாக்டர் சொன்னார். அதனால் டி & சி செய்ய சொல்லி விட்டார்கள். செய்து ஒரு வருடம் ஆகிவிட்டது ஆனால் மறுபடியும் கன்சீவ் ஆகவில்லை.

இப்போது மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறேன். Siphene 100mg tablet என்ற டாப்லட் கொடுத்து பீரியட்ஸ் ஆன இரண்டாவது நாளிலிருந்து சாப்பிடஆரம்பித்தேன். Folicular study செய்து நான்கு கரு முட்டைகள் முதிர்ந்து doctor expect செய்த size இருக்கிறது என்று சொன்னார். நாங்கள் மிகவும் எதிர் பார்த்தோம். ஆனால் periods வந்து விட்டது. என்டொமெட்ரியம் thickness குறைவாக இருந்ததும் (5mm) ஒரு காரணம் என்று சொல்லி போன மாதம் ovstore and diane 35 என்ற கருத்தடை மாத்திரையை கொடுத்தார். எனக்கு நார்மல் பீரியட்ஸ் தான். எப்போதுமே 26- 28 நாட்களில் எனக்கு periods வந்து விடும். ஆனால் இந்த மாதம் spotting மட்டுமெ இருந்தது. ஏன் என்று புரியவே இல்லை.
<!--break-->
நான்கு கரு முட்டைகளில் ஒரு கரு முட்டை வெடித்து வெளியேறாத நிலையில் அது நீர் கட்டியாக மாறி விட்டது என்று சொன்னார். அதனால் மீண்டும் femilon என்ற கருத்தடை மாத்திரையை கொடுத்து உள்ளார் . ஒரு பிரச்சனைக்கு மருந்து சாப்பிட இன்னொரு பிரச்சனை ஆரம்பித்து விட்டது. மிகவும் மன உளைச்சலாகவும், வேதனையாகவும், குழப்பமாகவும் உள்ளது. இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் தோழிகளே .

Frnd feel panathinga ungaluku normal period thana pa aparam yen kavalai paduringa normala try pani parunga pa Periods aagura dateku munnadi one week mattum nalla weight ethum thukkathinga travel panathinga over ah stain panikathinga. Ungaluku 1st baby abot panirukurathunala may be nenga last 10 days complete bed rest eduthal kuda nallathu bcos weak ah irunthal rest eduthal nallathu athan pa. Kadavulai nambunga pa ethavathu amman kovila kulanthai varam vendi thottil kattunga pa nalla palan kidaikum na apadi thsn kattinen pa. Suppose thottil kattinal poovum palamum vaithu kattungal pa ipothaiku manjal thunila kattunga baby piranthathum thottil vangi kattunga pa. . Unga husbandku ellam normal ah pa. Kavalai padathinga be relax happy ah irunga. Tension aagathinga body ah cool ah vachikonga pa seekiram nenga thaaimai adaiya en vaazhthukkal pa

neenga evalavo feel panna vandam etha clear pannita next month conceive agalam illaya naan sona palikum solluvanga naan sollurean naanga 2 months conceive avinga saeriya ma

நான் முதல் பேபிக்கு எந்த ட்ரீட்மென்டும் எடுக்கவில்லை. நார்மல் ஆக தான் கன்சீவ் ஆனேன். But my fate is wrongly written by the god.

எல்லோருமே அதை பற்றியே கேட்கிறார்கள். எங்கள் வீட்டு விஷேசங்களில் தடை தலை காட்டவே பயமாக இருக்கிறது. நானும் கணவரும் அவரின் வேலை காரணமாக தனியாக இருக்கிறோம். சிலர் வேண்டுமென்றே கேலியாகவும் கேட்கிறார்கள். அவர்களின் வீட்டுப் பெண்கள் pregnant ஆக இருப்பதாகத் பெருமை பேசுகிறார்கள். காதில் வாங்காமல் இருக்க முயற்ச்சி செய்கிறேன். தாங்க முடியாத வேதனைதான் மிஞ்சுகிறது. என் கணவரும் நானும் புரிதலோடு மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். கடவுளின் கருணைக்காக காத்திருக்கிறோம்.

நீங்க சொன்ன அந்த நேரம் எல்லா தேவர்களும் "ததாஸ்து" நு சொல்லி வாழ்த்தட்டும். குழந்தை இல்லையேன்னு வருத்தப்படுறவங்களுக்கு குழந்தை உண்டாகட்டும்.

aduthavanga solradha ellamm kathula vangathapa namma nalla erundha porama padra world ithu kavala padatha god kanndipa kodupar

கவலைப்படாதீங்க தோழி.கடவுள் அருள் சீக்கிரம் கிடைக்கும்.உங்க‌ கணவரும் நீங்களும் நல்ல‌ புரிதல்லோட‌ இருக்கீங்கா அப்புறம் யாரு என்ன‌ சொன்ன‌ என்ன‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

கவலைப்படாதீங்க தோழி.கடவுள் அருள் சீக்கிரம் கிடைக்கும்.உங்க‌ கணவரும் நீங்களும் நல்ல‌ புரிதல்லோட‌ இருக்கீங்கா அப்புறம் யாரு என்ன‌ சொன்ன‌ என்ன‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

கவலை படாமல் இருக்கவே முயற்ச்சி செய்கிறேன். ஆனால் இந்த மனம் சில சமயங்களில் என்னுடன் ஒத்துழைக்க மறுக்கிறது

தோழி நான் ஒரு புத்தகத்தில் படித்ததை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்,

.//சின்னச் சின்னப் பாராட்டுகள், சுமையை இறக்கும் அரவணைப்புகள், மருந்திடும் புன்னகைகள், வருத்தங்களைக் காது கொடுத்துக் கேட்கும் பொறுமை... என எல்லாமே செத்துப்போனதில் மனசை அழுத்தும் பாறாங்கல்லின் கனம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

அந்த மன அழுத்தமே காதலையும் கருத்தரிப்பையும் தாமதிக்க வைக்கிறது. ஆண்களின் பிரத்யேக ஹார்மோன் டெஸ்டோஸ்டீரான், லேடிக் செல்களில் இருந்து ஊற வேண்டும். ஆனால், இந்த மாற்றம் மன அழுத்தத்தால் மந்தப்பட்டு விந்தணு உற்பத்தி குறைவதும், உடலுறுவுக்கான நாட்டத்தைக் குறைப்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. பெண்களுக்கு சினைமுட்டை சரியான நாளில் பிதுங்கி, கருப்பையை நோக்கி வருவதைத் தாமதப்படுத்தி, கருத்தரிப்பில்கூட சிக்கலை உண்டாக்குகின்றன மன அழுத்தங்கள்!

இப்படி, பெண்களுக்கு மன அழுத்தத்தில் ஏற்படும் கருத்தரிப்புக் கோளாறு மற்றும் சினைமுட்டைப் பிரச்னைகள் இரண்டுக்கும், 'எள்’ ஒரு நல்ல மருந்து. எள்(நல்லெ)ளெண்ணெய் தடவிய உளுத்தங்களியும், தொலிஉளுந்தும் புழுங்கல் அரிசியும் சேர்த்துச் சமைத்த உளுந்தஞ்சோறும், அதில் பிசைந்து சாப்பிட எள்ளுத் துவையலும் பெண்களுக்கான ஆரோக்கிய உணவு. எள்ளில்தான் இன்று ஆண்மையைப் பெருக்கும் ஆங்கில மருந்துகளில் பரவலாகச் சேர்க்கப்படும் L-ARGININE எனும் அமினோ அமிலமும் புரதமும் மிக அதிக அளவில் உள்ளன. ஆதலால்,ஆண்களும் எள்ளை எள்ளி நகையாடாமல் உணவில் அடிக்கடி சாப்பிடலாம். ஆனால், எள்ளும் உளுந்தும் மட்டும் இதற்குப் போதாது. மன அழுத்தத்தை நீக்கும் புரிதலையும் பொறுமையையும் வளர்க்க வேண்டும். இன்ஸ்டன்ட் உலகில் இந்த இரண்டுக்குமான மெனக்கெடலுக்குப் பலருக்கு நேரம் இல்லை!//.

நான் இந்த அருசுவையை பார்வையிட ஆரம்பித்ததிலிருந்து இது போன்ற நிறைய தோழிகளின் மனவருத்தத்தை அறிய நேரிட்டதனால், இதை உங்கள் இழையில் பதிவிடுகிரேன்.

மனவருத்தம் கருத்தரிப்பை தாமதப்படுத்துவதாக நிறைய கெள்விப்பட்டுள்ளேன்,மனதை எப்போதும் சன்தோசமாக வைத்திருக்க முயற்சியுங்கள். அதுவே உங்கள் மனவருத்தத்தை மிக விரைவில் போக்கும்.

பொதுவா பிள்ளைக்காக ஏங்குபவர்கள் மனம் ரொம்ப சென்சிடிவா இருக்கும். அதனால் தான் நான் அவர்களுக்கு பதில் சொல்ல ரொம்ப யோசிப்பேன். எதை சொன்னா எப்படி எடுத்துகுவாங்களோன்னு பயம். அதனால் எப்போதும் இது போல பதிவுகளை கண்டால் பிராத்தனையை மனசோடு பண்ணிட்டு போயிடுவேன். ஏன்னா நானுமே எந்த பிரெச்சனையும் இல்லாம ஏன் குழந்தை நிக்கலன்னு கொஞ்ச நாள் ஏங்கினவ தான். சுற்றி இருப்பவர் பார்வையும் கேள்வியும் எப்படி இருக்கும் என்பதை அனுபவித்தவள் தான். உங்க மன நிலை நன்றாகவே புரியும். ஆனாலும் இன்னைக்கு பதில் சொல்லாம போக எனக்கு மனசு வரல.

எல்லோருக்கும் வாழ்வில் ஏதோ ஒரு கவலை இருக்க தான் செய்யுது. கவலை இல்லாத மனிதன் யாருமில்லை. எனக்கும் இருக்கு... ஆனா அதையே நினைச்சிருந்தா சாதிக்க முடியாதே? வாழத் தேவை நம்பிக்கையும் தைரியமும். அதற்கு முதல் எதிரி வேதனையும், தன் இறக்கமும். எந்த ஒரு விஷயமும் நம்ம மனதை சில நிமிஷங்கள் தான் பாதிக்குமாம்... அதை மனம் திரும்ப திரும்ப எண்ணியே அதை பெரிய துக்கமாக மாற்றிக்கொள்ளுமாம். சமீபத்தில் படித்தேன். உண்மை தானே? மீண்டும் மீண்டும் நம்மை காயப்படுத்தும் விஷயத்தை எண்ணியே ஏன் நம்மை நாமே வேதனைப்படுத்திக்கனும்? அதை விட்டு வெளியே வந்து யோசிச்சா எப்பவுமே நல்லதே நடக்கும்.

எனக்கு சமீபத்தில் ஒரு மருத்துவரின் ஆலோசனை... ”அடுத்தவர் பற்றிய எண்ணம் உனக்கு ஏன்? உன்னை சுற்றி இருப்பவர்களை பற்றியும், அவர்கள் நம்மை என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றியுமே சிந்திக்க ஆரம்பித்தால் வாழவே முடியாது. உலகம் அப்படித்தான்... வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். நீ வெள்ளையா இருந்தாலும் உன்னை மட்டம் தட்டும், கருப்பா இருந்தாலும் மட்டம் தட்டும், ஒல்லியா இருந்தாலும் குறை சொல்லும், குண்டா இருந்தாலும் குறை சொல்லும், பணம் இருந்தால் எப்படி எப்படி சமபாதிச்சியோ என்று சொல்லும், பணம் இல்லைன்னா சம்பாதிக்க துப்பில்லாதவன்னு துப்பும். அடுத்தவரை உயர்த்தியாக எண்ண மனம் வருவதில்லை.. நீ என்னை விட மட்டம், குறைவு என சொல்லிக்காட்டி மகிழ்ச்சி அடையும். இது மனிதர்கள் பலருக்கு உள்ள சுபாவம். இப்படி மனிதத்தன்மையே இல்லாதவர்கள் பேச்சுக்கா நீ அஞ்சுவது? இவர்கள் பேச்சை பெரிதாக எண்ணி வருந்தி அவர்களை பெரியவர்கள் ஆக்குவதா? அவர்கள் எண்ணத்தை நிறைவேற்றி வெற்றி பெறச் செய்வது நீ தானே?”

இந்த கேள்வி உங்களுக்கு நீங்களே கேட்டுப்பாருங்க. அடுத்தவர்கள் கேள்வி, பார்வை, கேளி கிண்டல்... எதுவுமே இனி உங்களை பாதிக்காது. வெறும் 4 வருடம் தானே ஆயிருக்கு? எனக்கு தெரிஞ்சு 10 வருஷம் கடந்து பிள்ளை பெற்றவர்களை பார்த்திருக்கிறேன். நிச்சயம் அந்த அதிர்ஷ்டத்தை உங்களுக்கும் இறைவன் கொடுப்பான். நம்பிக்கை தான் வாழ்க்கை.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது, எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். நல்லதே நடக்கும்னு நம்புங்க... எங்கள் பிராத்தனைகளும் துணை இருக்கும். இனி இபடி வெறுப்பா இருக்கு என்றெல்லாம் போஸ்ட் போடக்கூடாது... சரியா? சிரிங்க. சிரிப்பு தான் மனிதனின் பல துன்பங்களுக்கு மருந்து. :) உங்க முகத்தில் இருக்கும் சிரிப்பு, வேதனைகளை பயந்து ஓட வைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்