நாட்டுச் சர்க்கரை பணியாரம்

தேதி: June 21, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

பச்சரிசி - 2 கப்
நாட்டுச் சர்க்கரை - 2 கப்
தேங்காய் - 2 வில்லைகள் (நடுவிரல் அளவு)
ஏலக்காய் - 5
எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். அரிசியைக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
மிக்ஸியில் தேங்காயுடன் ஏலக்காயைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஊறிய அரிசியை லேசாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். (தண்ணீரை ஊற்றி அரைக்க வேண்டாம்). அரிசி பாதி அரைபட்டதும் தேங்காய், ஏலக்காய் விழுதைச் சேர்த்து அரைக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு பணியாரக் கல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி இரண்டு, மூன்று நிமிடங்கள் மட்டுமே வேகவிட்டு திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான, ஆரோக்கியமான நாட்டுச் சர்க்கரை பணியாரம் தயார்.

நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைப்பதால் மாவு நீர்க்கும் (இளகும்). அதனால் அரிசி அரைக்கும் போது தண்ணீர் அதிகம் தேவையில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முதல் விளக்கப்பட குறிப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :) ரொம்ப சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேணு,ஆரோக்யமான குறிப்பு தந்திருக்கீங்க,கட்டாயம் செய்துபாக்கிரேன்.ஆனா நாட்டுசர்க்கரைன்னா பணங்கல்கன்டுதானே,தெளிவுபடுத்துங்கள்.

முதல் ரெசிப்பிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் இது போல ரெசிப்பிகள் செய்ய வாழ்த்துக்கள், பணியாரம் அருமை.

முதல் விளக்கப்படக்குறிப்பை இனிப்போட‌ தொடங்கியிருக்கீங்க‌.. எனக்கு இங்க‌ நாட்டு சர்க்கரை கிடைக்காது..:(, அதுக்கு நம்ப‌ நாட்டுக்கு தான் வரணும்..;), அதனால‌ அம்மா வீட்டுக்கு வரும் போது செய்து பார்த்துடறேன்.வாழ்த்துக்கள் ரேணு...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

படக்குறிப்பில் எனது குறிப்பு ரொம்ப‌ சந்தோஷமா இருக்கு. வெளியிட்ட‌ டீம்,அண்ணாவிற்கு மிக்க‌ நன்றி...

முதல் ஆளா வந்து வாழ்த்திருக்கீங்க‌....ரொம்ப‌ சந்தோசம் , ரொம்ப‌ நன்றியும்கூட‌....

முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள் ரேணு. பணியாரம் அருமையா இருக்கு. நாட்டுச்சர்க்கரைன்னா ப்ரவுன் சீனியா? பனங்கல்கண்டா? இல்லன்னா வேற ஏதுமா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நாட்டு சர்க்கரைன்னா " கரும்புச்சர்க்கரை" வெள்லைக்கரும்பை ஆலைகளில் ஆட்டி வெல்லமாக‌ காய்ச்சும்போது எடுப்பாங்களே அது. வெண் சர்க்கரையை விட‌ இது தான் ரொம்ப‌ நல்லது. நம்ம‌ உடம்புல‌ இருக்க‌ ஹார்மோன்ஸ் அனைத்தின் செயல்பாடுகளையும் இது சீராக‌ வைத்திருக்கும்.என்ன‌ வெண் சர்க்கரை 2 ஸ்பூன் போட்டா இது இன்னும் அரை ஸ்பூன் போடனும்...

பனங்கற்கண்டு‍ ,பனங்கருப்பட்டி இவை பனையிலிருந்து எடுப்பவை.இது உடல் வலுவில்லாத‌ குழந்தைகளுக்கு ரொம்ப‌ நல்லதுப்பா.

மிக்க‌ நன்றிகள்பா வருகைக்கும் வாழ்த்துக்கும்.....கண்டிப்பா பலது செய்து உங்களை செய்ய‌ சொல்லப்போறேன்..:‍)

நன்றி சுமி, விமானத்தில் எடுத்து செல்ல‌ அனுமதி உண்டுன்னா நீங்க‌ எடுத்துட்டுபோங்க‌, குட்டீஸ்கு மட்டுமில்லாம‌ நமக்கும் ரொம்ப‌ நல்லது....கன்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க‌.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க‌ நன்றிப்பா..... நாட்டுசர்க்கரை = "கரும்புசர்க்கரை" பிரவுன் கலர்லதான் இருக்கும் பவுடரா கொஞ்சம் உருன்டைகளும் கலந்து...

நாட்டுச்ர்க்கரை ஆலையில்கிடைக்குமா அல்லது வேரு எங்ககிடைக்கும்னு சொல்லுங்கலேன் தோழி

எல்லா மளிகை கடைகளிலும் கிடைக்கும்பா. டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரிலும் கிடைக்கும்...கரும்புசர்க்கரைன்னு கேளுங்க‌.பிரவுன் கலர்ல‌ உதிரியா இருக்கும்.

ரேணு நன்றி, ஊருக்கு வரும்போது வாங்கிக்கிரேன்.இங்கு கிடைக்காது

ரேணு வாழ்த்துக்கள், உங்கள் முதல் படக்குறிப்பு அழகா வந்திருக்கு, இதே போல‌ நிறைய‌ அனுப்புங்க‌, வெயிட்டிங்:))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இனிப்பான முதல் விளக்கப்பட‌ குறிப்புக்கு வாழ்த்துக்கள் ரேணுகா மேடம்... இன்னும் நிறைய‌ குறிப்புகள் கொடுப்பதற்கும் வாழ்த்துக்கள்...

கலை

ரேணு உங்கள் ஊக்கமும், அறிவுரைகளும் ரொம்ப‌ உதவியா இருக்குப்பா. வாழ்த்துக்கு மிக்க‌ நன்றி.(தனியா சொன்னா முறைப்பீங்களே)

கலை ரொம்ப‌ நன்றிப்பா வாழ்த்துக்கு:)