தயிர் உறைய வைப்பது எப்படி

வணக்கம் தோழிகளே ,

நான் வீட்டில் தயிர் உறைய வைக்க பல முறை முயற்சி செய்து விட்டேன். ஆனால் கடையில் வாங்கும் தயிர் போல் கெட்டியாக வர மட்டேன் என்கிறது . வீட்டில் தயிருக்கு உறை ஊற்றினால் உறையவே மட்டேன்கிறது. கடையில் வாங்கும் தயிர் போல் கெட்டியாக வர என்ன செய்ய வேண்டும்?

பால் கெட்டியான பாலாக இருக்க வேண்டும். நன்றாக காய்ச்சி முழுவதும் ஆறிவிடாமல், கை தாங்கும் சூடு இருக்கும் போது (வெது வெதுப்பாக) தயிரை விட்டு கலந்து மூடி வைக்கவும். நிச்சயம் கெட்டியான தயிர் கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா இப்படி செய்தால் தண்ணிவிடாதா செய்துபாத்துட்டு சொல்கிரேன்.

பாலில் உள்ள தண்ணீர் கொஞ்சம் மேலோடு இருக்க தான் செய்யும். அது கடையில் வாங்கும் செட் கர்ட்லயும் இருக்குமே. பாலை நல்லா காய்ச்சினால் திக்காகவே தயிர் கிடைக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரி செய்துபாத்துட்டு சொல்கிரேன்.எப்படி எல்லாத்துலயும் அனுபவம் கத்துகிட்டீங்களோ தெரியல,இப்படி ஒருத்தர் எங்களமாதிரி கத்துகுட்டிக்கு அவசியம் தேவைதான்.மிக்க நன்றி வனிக்கா

எல்லாம் அம்மா சொல்லிக்கொடுத்தது தான்... :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாக்கெட் பாலில் தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி தயிர் ஊற்றவும். கெட்டியாக கிடைக்கும்

ஓ... பாலை காய்ச்சும் போது தண்ணீர் சேர்ப்பாங்களோ? நான் சேர்த்ததே இல்லை. என்னடா தண்ணி விடாம காய்ச்சுங்கன்னு சொல்றாங்க, தண்ணி ஏன் சேர்க்க போறாங்கன்னு யோசிக்கறேன். எப்போதும் டீ போட மட்டும் தான் நீர் சேர்ப்பேன், அதுவும் பாலை பொங்க காய்ச்சிய பின்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

neenga arokiya vangi nalla thani vidama kachi arra vidunga plate potu mudathinga thani audum meetha mana sudula thayir adthu nalla keti illadha adichi pala vuthunga 2 times kalaki vidunga idha night senchi morning pathinga na keti thayir kidaikum

நன்றி வனி அக்கா, நான் full cream milk use பண்ணுறேன். ஓரு கப் பாலுக்கு எவ்வளவு தயிர் சேர்க்க வேண்டும். என்னிடம் பால் பவுடர் உள்ளது அதை கொண்டு தயிர் செய்ய முடியுமா? முடியும் என்றால் எப்படி செய்வது ?

seetha 1/2litre palu ku 1 cup thayir podum paul powder potum seiya mudium neenga hot water mix panni kachi andha process thama

மேலும் சில பதிவுகள்