பலாக்கொட்டை சாம்பார்

தேதி: June 26, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

பலாக்கொட்டை - கால் கிலோ
முருங்கைக்காய் - 2
துவரம் பருப்பு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பலாக்கொட்டையை சுத்தம் செய்து சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். துவரம் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைக்கவும். புளியை கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் வதங்கியதும் நறுக்கிய முருங்கைக்காய், தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி குழையும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வதங்கியதும் மிளகாய் தூள், புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முருங்கைக்காயை வேகவிடவும்.
பிறகு வேக வைத்த பலாக்கொட்டை மற்றும் துவரம் பருப்பை சேர்த்து வேகவிட்டு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான பலாக்கொட்டை சாம்பார் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

பலாக்கொட்டை சாம்பார் சூப்பர், எங்க வீட்டிலேயும் பலாக்கொட்டை சாம்பார் செய்வோம் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

viththiyasamna eappadi irukkum tholzi

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி பாரதி. நீங்க எப்டி செய்வீங்க? கார்த்திகேயனுக்கும் பதில் சொல்லிடுங்க. :-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சாம்பார் சூப்பர்.. பலாக்கொட்டை சேர்த்து செய்தது கிடையாது.. செய்து பார்க்கிறேன்.

-> ரம்யா

நன்றி ரம்யா. செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பலாக்கொட்டைசாம்பார் பாக்கவே அழகாகயிருக்கே,டேஸ்ட் தூக்கும்போல

ஆமாம் இனியா. சாதத்தோட சாப்பிட சூப்பரா இருக்கும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நல்லா இருக்கு. பலாக்கொட்டைக்கு நான் எங்கே போவேன்? கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.
வாணி

பலாக்கொட்டை சாம்பார் சூப்பர். செய்து பார்க்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வருகைக்கு நன்றி. செய்தா! எப்டி இருந்ததுன்னு சொல்லுங்க வாணி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி வனி. செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முதலில் துவரம் பருப்பை வேக வைத்து அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வேக வைத்து பின் முருங்கைக்காய், பலாக்கொட்டை சேர்த்து வேகவைத்து கடைசியாக தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து இறக்கி வைப்போம், வெங்காயம், தக்காளி எதையும் வதக்க மாட்டோம்.