நல்லி ரோஸ்ட்

தேதி: June 27, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

நல்லி எலும்பு - அரை கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
சோம்பு தூள் - அரை மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - அரை மேசைக்கரண்டி
கெட்டித் தேங்காய்ப் பால் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, எண்ணெய்
மிளகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - கால் கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 2


 

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
நல்லி எலும்பைச் சுத்தம் செய்து குக்கரில் போட்டு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அத்துடன் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.
பிறகு வேக வைத்த நல்லி எலும்பை அதிலுள்ள தண்ணீருடன் சேர்க்கவும். தீயை அதிகரித்து வைத்து தண்ணீர் வற்றும் வரை அடிபிடிக்காமல் கிளறிவிடவும்.
முக்கால் வாசித் தண்ணீர் வற்றியதும் கெட்டித் தேங்காய்ப் பால் சேர்த்து மூடி போடாமல் சிறு தீயில் வைத்துக் கிளறவும்.
தேங்காய்ப் பால் நன்கு வற்றி வறுவல் பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்க்கவும்.
சுவையான நல்லி ரோஸ்ட் ரெடி. ரசம் சாதம், இட்லி, தோசை மற்றும் ஆப்பத்திற்குத் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

காரச்சாரமான நல்லி ரோஸ்ட். பார்த்ததும் நாவூறுது. பண்டிகை நாட்களில் எங்க வீட்ல நல்லி வறுவல் செய்வோம்.. தேங்காய் பால் சேர்த்து செய்ததில்லை.. நெக்ஸ்ட் டைம் உங்க மெத்தட்ல செஞ்சு பார்க்கணும்..

-> ரம்யா

புதுசா இருக்குங்க... இப்படி நல்லி எல்லாம் வாங்கி சமைச்சதே இல்லை. அவசியம் ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லி ரோஸ்ட் சூப்பர், நல்லா காரமா டேஸ்டியா இருக்கும் போல, படங்களும் தெளிவாக உள்ளன அருமை கண்டிப்பாக செய்கிறேன்.

வாயூற வைக்குது வாணி உங்க நல்லி ரோஸ்ட். வெரி யம்மி. :-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாவ் வாவ் சூப்பர் பார்த்ததுமே சாப்பிடனும் போல இருக்கு.

நல்லி-நு கேள்விப்பட்டு இருக்கேன். இப்ப தான் பார்க்கிறேன். செய்யனும்-நு ரொம்ப ஆசையா இருக்கு. ட்ரை பண்ணிட்டு சொல்ரேன்

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

தோழிகளே அனைவரின் வருகைக்கும், ஊக்கமளிக்கும் பதிவிற்க்கும் அன்பான நன்றிகள்.
வாய்ப்பு கிடைக்கும் போது அவசியம் முயற்ச்சித்துப் பாருங்கள் ,

வாய்ப்புகிடைக்கும்போது செய்துபாக்கிரேன்.வித்தியாசமா நல்லாருக்குங்க வாணி.