கிட்ஸ் க்ராஃப்ட் - பட்டர்ஃப்ளை

தேதி: June 30, 2014

4
Average: 4 (3 votes)

 

40 மில்லி அளவுள்ள ப்ளாஸ்டிக் பாட்டில் - ஒன்று
பட்டர்ஃப்ளை வடிவம்
சார்ட் பேப்பர்
ஸ்பாஞ்ச் ஷீட் (அ) ஃபோம் ஷீட்
மார்க்கர்
கத்தரிக்கோல்
ஃபேப்பரிக் பெயிண்ட் - சிவப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில்
ஃபெவிக்கால்
15 செ.மீ அளவில் கோல்டன் நிற கம்பி - 2
கருப்பு நிற உல்லன் நூல்
ப்ரெஷ்

 

உருண்டையான மூடி உள்ள பாட்டிலாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். ஸ்பாஞ்ச் ஷீட்டை 23 செ.மீ x 25 செ.மீ அளவில் நறுக்கி எடுத்து, அதனை நான்காக மடித்து வைக்கவும். சார்ட் பேப்பரில் பட்டர்ஃப்ளை வடிவத்தை வரைந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
நான்காக மடித்து வைத்திருக்கும் ஸ்பாஞ்ச் ஷீட்டின் மேல் பட்டர்ஃப்ளை வடிவத்தை வைத்து மார்க்கரால் அவுட்லைன் வரைந்து கொள்ளவும். வரைந்த பகுதியை கத்தரிக்கோலால் நறுக்கி எடுக்கவும். (இப்போது ஸ்பாஞ்ச் ஷீட்டில் தனித்தனியாக நான்கு துண்டுகள் பட்டர்ஃப்ளை வடிவம் இருக்கும்).
நறுக்கி எடுத்த நான்கு பட்டர்ஃப்ளை வடிவத்தின் நடுவிலும் ஃபெவிக்கால் தடவி ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ஒட்டி காயவிடவும்.
நன்கு காய்ந்ததும் நான்கு அடுக்குகளாக இருக்கும். பாட்டிலின் மீது சிவப்பு நிற பெயிண்டும், மூடியின் மீது மஞ்சள் நிற பெயிண்டும் அடித்துக் காயவிடவும். பெயிண்ட் காய்ந்ததும் படத்தில் காட்டியுள்ளபடி பாட்டிலின் ஒரு புறம் மட்டும் ஃபெவிக்கால் தடவி வைக்கவும். (மூடியில் ஃபெவிக்கால் தடவ வேண்டாம்).
ஃபெவிக்கால் தடவிய பாட்டிலை, ஸ்பாஞ்ச் ஷீட் பட்டர்ஃப்ளை வடிவத்தின் நடுவில் வைத்து ஒட்டிவிடவும். இறகுகளின் ஒரத்தில் கருப்பு நிற பெயிண்டால் மெல்லியதாக அவுட் லைன் வரையவும். பாட்டிலின் மீது மஞ்சள் நிற பெயிண்டால் இடைவெளிவிட்டு மூன்று வளைவுகள் வரையவும்.
பாட்டிலின் மூடியில் கண்களுக்கு கருப்பு நிற பெயிண்டால் 2 புள்ளிகள் வைக்கவும். இறகுகளில் மீது வெவ்வேறு நிறங்களில் வட்டங்கள் வரைந்து கொள்ளவும்.
கோல்டன் நிற கம்பிகள் இரண்டிலும் கருப்பு நிற உல்லன் நூலைச் சுற்றவும். முடிச்சுப் போடுவதற்கு பதிலாக இருமுனைகளிலும் உள்ள நூலை ஃபெவிக்கால் வைத்து ஒட்டிவிடவும்.
பிறகு இந்தக் கம்பிகளை பாட்டிலின் பின்புறத்தில் இவ்வாறு ஒட்டிவிடவும்.
ப்ளாஸ்டிக் பாட்டிலில் செய்த அழகான பட்டர்ஃப்ளை ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகாவும் சுலபமாவும் இருக்கு. இன்று என் பையன்கிட்ட‌ காட்டனும். அடுத்தவாரம் கார்டுமேக்கிங் இருக்கு அதற்கு உதவும். தேங்க் யூ......

சூப்பர் குழந்தைகள் மிகவும் எளிமையாக செய்யக்கூடுய வகையில் உள்ளது.

சூப்பர் ஐடியா டீம்.

டீம்ல யாரு இதுன்னு தெரிஞ்சு போச்சு. ;)))
நானும் சேர்த்து வைச்சிருக்கேன், சேம் பாட்டில். ;D அதன் ஷேப் க்ராஃப்ட்டுக்கு பொருத்தமா இருக்கும் என்று நினைச்சு சேர்த்தேன். வேற ப்ளான் மனசுல இருந்துது. ஆனா, இங்க அனுப்பினா பார்வையாளர்கள் யாராச்சும் திட்டுவாங்கன்னு ஒரு தயக்கமா இருந்துதா, செய்யல ஏதும். இனி பிரச்சினை இல்ல. முன்னோடிகள் அறுசுவை டீம்தான் என்று சொல்லி தப்பிருவேன். :-)

கலக்கலா இருக்கிற இந்த ஐடியாவையும் சுட்டுருறேன். நன்றி டீம்.

‍- இமா க்றிஸ்