அறுசுவை தோழர் தோழிகளே மற்றும் பட்டியின் தீவிர ரசிகர்களே,
அடுத்த பட்டி ஆரம்பிக்கப்போகிறது.
தலைப்பு: "சமூக விழிப்புணர்வும் அக்கறையும் யாருக்கு அதிகம்? இளைஞர்களுக்கா? முதியவர்களுக்கா?"
தலைப்பு உபையம்: soulinpeace மிக்க நன்றி தோழி.
தலைப்பு பற்றி அதிகம் விளக்கம் வேண்டியிருக்காதுன்னு நினைக்கிறேன்.தானுன்டு தன்வேலையுண்டுன்னு இருக்கிற மக்கள் இப்ப அதிகமாயிட்டாங்க.இந்த காலகட்டத்தில் சமூகவிழிப்புணர்வும்,சமூகத்தில் நல்லது அதிகம் நடக்கனும்னு நினைக்கிற அக்கறையும் யாருக்கு அதிகமிருக்கு? துடிப்பான எதையும் செய்திட உடல் உள்ல வலிமைகொண்ட இளைஞர்களுக்கா?அல்லது வாழ்க்கை கொடுத்த அனுபவத்தில் எதனை மாற்றனும்னு நுணுக்கங்கள் தெரிந்து மதியில் வைத்திருக்கும் முதியவர்களுக்கா? அப்படிங்கறதுதான் தலைப்பு.
வாங்க வாங்க அணிபிரித்து சொல்தனை தொடுத்து வில்லாக்கி என்மேல் வீச தயாரா வாங்க பார்க்கலாம்.அதுக்குள்ள அடுத்த பட்டியான்னு எண்ணிடாம அனைவரும் கலந்துக்கனும். புது முகங்களுக்கு முழுஆதரவு கிடைக்கும்.
பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விதிமுறைகள் இங்கே:
~~~~~~~~~~~~~~~~~~~~~
1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் பேசக்கூடாது.
3. அரட்டை கூடாது.
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.
அனைவரும் ஆரம்பிங்க உங்கள் வாதங்களை,நடுவரை யோசிக்க வையுங்க.வாங்க வாங்க :-) பட்டியின் ரசிகர்கள்,புதுமுகங்கள்,பார்வையாளர்கள் அனைவரும் இம்முறை கலந்துக்கனும்.
நடுவரே
இளைஞர்களுக்கே என்பது எனது கட்சி.இப்போது முதல் ஆளா இடம் பிடிக்கிறேன்.வாதங்களை அப்புறமா வந்து சொல்றேன்
வணக்கம் நடுவரே
நல்லதொரு தலைப்போடு பட்டியை துவங்கி வைத்தமைக்கு நன்றி நடுவரே... வாழ்த்துக்கள் உங்களுக்கும், என்னை போல வாதாட வரப்போகிற தோழமைகளுக்கும்.
சமூக அக்கறையும் விழிப்புணர்வும் அதிகம் உள்ளவர்கள் முதியவர்களேன்னு என் அணியை முடிவு பண்ணி சொல்லிப்புட்டேன். இனி வாதங்களோடு வருகிறேன்.... ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நடுவர் அவர்களே
வணக்கம,வந்தனம்,நமச்தே சீக்கிரமே அணிய தேர்வு செஞ்சிட்டு வந்திடுறேன்.
உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி
இளைஞர்களே அணி நிகிலா,
வாங்க வாங்க வாழ்த்துக்கள் . முதல் ஆளா வந்து இளைஞர்களுக்கு தலைமை தாங்கி பலம் சேர்த்திருக்கீங்க.உங்களுக்காக இந்தாங்க மவுண்டன் டியூ தாகத்தை தணிச்சுட்டு வாதத்தில் தணலைக்காட்டுங்க.
முதியவர்களே அணி வனிதா,
வாஙக வனி, வாழ்த்துக்கள் முதியவர்களே இந்த சமூகத்தின் தூண் என்று சொல்லி உங்க அணிக்கு தலைமை தாங்கறீங்க. இந்தாங்க உங்களுக்காக ரிச் மேங்கோ ஸ்லைஸ் தாகம்தணிச்சுட்டு சீக்கிரம் வாதங்களோட வாங்க.
ஹ ஹா ஹாசனி,
வாங்க வணக்கங்க... வணக்கம்லாம் பலமா இருக்கே..(ஏதும் உள்கொத்து இருக்குமோ!) அணித்தேர்வை முடிச்சுட்டு சீக்கிரம் வந்துடுங்க.
நடுவர்அவர்களே வணக்கம்ங்க..!
இதோ அணியை தேர்வு செய்துட்டேன்ங்க,என்னுடைய ஓட்டு இளைஞர்களுக்குதாங்க நடவர் அவர்களே. உள்கொத்து வௌிகொத்து எல்லாம் இல்லைங்கோ.சீக்கிரமா வாதத்தோட வர்றேன் நடுவர் அவர்களே.
உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி
ஹாசனி,
வாங்க அணித்தேர்வு முடிச்சிடுச்சா....? இளைஞர் பக்கமா நீங்களும்,ஓகே இந்தாங்க உங்களுக்கான மவுண்ட்டன் டியூ, தாகம்தணிச்சுட்டு வாதத்தோட வாங்க.
எல்லாருக்கும் வணக்கமுங்க,
பட்டி எண் :97 தொடங்கியாச்சி..!!! நடுவரே வணக்கம்.
\\பட்டியின் தீவிர ரசிகர்களே// வந்திட்டோம். நடுவரே நான் வாதிட போவது, சமூக விழிப்புணர்வும், அக்கறையும் முதியோர்க்கே அதிகம், என்று. இதுக்கு எல்லாருக்குமாய் தெரிந்த எடுத்துக்காட்டு, நம்ம நாடாளுமன்றம். நன்றி நடுவரே மீண்டும் வாதத்துடன் வருகிறேன்.
உன்னை போல் பிறரை நேசி.
முதியவர்களே அணி கிரிஸ்,
வாங்க வாங்க நீங்க முதியவர் அணியில் சேர்ந்து அணியினை பலமாக்கிட்டீங்க. இந்தாங்க உங்களுக்கான ரிச் மேங்கோ ஸ்லைஸ்,குடிச்சிட்டு தெம்பா வாதங்களோட வாங்க.