மக்ரோனி சீஸ் பால்

தேதி: July 1, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

வேக வைத்த மக்ரோனி - ஒரு கப்
சீஸ் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
மைதா மாவு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பால் - அரை கப் (அல்லது) முட்டை - ஒன்று
எண்ணெய் - பொரிப்பதற்கு
ப்ரெட் க்ரம்ஸ் - அரை கப்


 

மக்ரோனியுடன் சீஸ், வெங்காயம், மிளகு தூள், கார்ன் ஃப்ளார், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பாத்திரத்தில் மைதா மாவுடன் மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்புச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
சிறிது மக்ரோனி கலவையை எடுத்து உருண்டையாக உருட்டி, மைதா மாவில் பிரட்டி எடுக்கவும்.
பிறகு அதை பாலில் தோய்த்தெடுக்கவும்.
கடைசியாக ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும்.
மீதமுள்ள் மக்ரோனி கலவையையும் உருண்டைகளாக உருட்டி, மைதா மாவில் பிரட்டி எடுத்து, பாலில் தோய்த்தெடுத்து ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து மக்ரோனி உருண்டைகளைப் போட்டு, சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
டேஸ்டி மக்ரோனி சீஸ் பால் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

யம்மி பால்ஸ் நித்யா. சூப்பர். குட்டீஸ் ரொம்ப விரும்புவாங்கன்னு நினைக்கிறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாவ்... இப்படிலாம் வித்தியாசமான குறிப்புன்னாலே நித்யான்னு தெரிஞ்சுக்கலாம் இப்பலாம். சூப்பரா செய்து அசத்துறீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் அண்டு சிம்பிள் , நான் இதுவரை மேக்கரோனி செய்ததுமில்லை சாபிட்டதுமில்லை. சப்புன்னு இருக்கும் நு ஒரு பீலிங்,பட் இனி வாங்கி செய்து பார்க்கிறேன்.தேங்க் யூ..:_)

ரூம் போட்டு யோசிப்பிங்களோ? பார்க்கும்போது சாப்பிட தோனுது. கொஞ்ச நாள் சமையல் பக்கம் போகாமல் இருக்கலாம் நு plan பண்ணேன். இப்படி வித விதமாக செய்து கிச்சனை விட்டு வெளியே வர முடியாத மாதிரி செய்றீங்க.நிச்சயமா செய்து விடுவேன். எனக்கு மாக்ரோனி ரொம்ப பிடிக்கும். சூப்பர் குறிப்பு.
அன்புடன்
தயு

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

மக்ரோனி சீஸ் பால்ஸ் சூப்பர், செய்முறை எளிமையாக உள்ளது, கடைசி படத்தில் இருக்கும் மக்ரோனி பார்ப்பதற்கு குலோஜாமூன் மாதிரி உள்ளது,

குறிப்பு வெளியிட்ட டீமிற்க்கு நன்றி.

உமா குழந்தைகள்ளுக்கு பிடிக்கும். கருத்துக்கு நன்றி.

நன்றி வனி.உங்களை விட வித்தியாசமா. பொய்லாம் சொல்லப்பிடாது.

ரேனு கன்டிப்பா செஞ்ஜி பாருங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் டொமேடோ சாஸ் ஊற்றி பிசைந்து கொல்லுங்கல் சப்புனு இருக்காது இன்னும் டேஸ்ட் நல்லாருக்கும்.

டெடி கன்டிப்பா செஞ்ஜி பாருங்கள். கருத்துக்கு நன்றி.

பாரதி நன்றி.

எல்லா பொருளும் இருந்ததால் உடனே செய்துவிட்டேன் நல்லா இருந்தது உருட்டுவது கொஞ்சம் கஷ்டமா இருந்தது வித்தியாசமான குறிப்பு வாழ்த்துககள்

செய்தாச்சே.... அருமையா இருந்தது டேஸ்ட் சாப்பிட்டுட்டே பதிவடிக்கிறேன். ஃபோட்டோஸ் நாளை போடறேன்.