பட்டாணி மசாலா

தேதி: July 2, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பட்டாணி - ஒரு கப்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
காய்ந்த மிளகாய் - ஒன்று (அ) 2
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

தேவையான பொருட்களைத் தயாராக வைக்கவும். பட்டாணியில் தண்ணீர் ஊற்றி, உப்புப் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயத்துடன், நறுக்கிய தக்காளி, காய்ந்த மிளகாய், சோம்பு மற்றும் சிறிது உப்புச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து ஈரத்தன்மை குறைந்து சற்று கெட்டியான பதத்திற்கு வந்ததும் வேக வைத்த பட்டாணியைச் சேர்த்து பிரட்டவும்.
மசாலாவுடன் பட்டாணி ஒன்றாகச் சேர்ந்து வரும் வரை நன்கு பிரட்டி இறக்கவும்.
சுவையான பட்டாணி மசாலா தயார்.

இதே முறையில் கொண்டைக்கடலைச் சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பட்டாணி மசாலா அருமை சூப்பர், நல்ல கலர்புல்லா இருக்கு.

பட்டாணி மசாலா சூப்பர் நித்யா. கடலை வச்சு நாளைக்கே ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நித்யா அக்கா,
பட்டாணி மசாலா சூப்பரா இருக்கு, கலர் புல்லாவும் இருக்கு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கேரட் சேர்த்திருக்கீங்கன்னு நினைச்சுட்டேன் முகப்பில் படம் பார்த்து... சூப்பரா செய்திருக்கீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னைக்கு லஞ்சுக்கு என் பொண்ணுக்கு செய்து அனுப்பிருக்கேன். லேசான புளிப்போட டேஸ்ட் ரொம்ப நல்லாருந்தது நித்யா. நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

veg soup eruntha sollunga for baby..

na 8 month ha tritment edukuren but entha palanum illa. na malai vembu paththi net la padichen na malaivembu eppo sappitalam intha month tritment eduthu kittu iruken next month malai vembu sapitalama illa one month gab eduthu kittu sappitanuma. pls tell me

தர்ஷிகா மலை வேம்பு என்று கொடுத்து சர்ச் செய்யுங்கள். அதை பற்றி மிக அதிக இலைகள் உள்ளது. http://www.arusuvai.com/tamil/node/19398 அல்லது http://www.arusuvai.com/tamil/node/27508 இந்த லிங்கில் தேடுங்கள் உங்களுக்கான பதிலை. தேவை இல்லாத இடத்தில் உங்கள் கேள்வி இருப்பது உங்களுக்கு பதிலை வரவழைக்காது.

உன்னை போல் பிறரை நேசி.