மட்டன் கோலா உருண்டை கிரேவி

தேதி: July 3, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

கோலா உருண்டைக்கு:
கொத்திய ஆட்டிறைச்சி - கால் கிலோ
பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 6
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
கிரேவிக்கு:
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
கசகசா - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
குழம்பு மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
சோம்புத் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

பொட்டுக்கடலையை நைசாகப் பொடித்து வைக்கவும்.
கொத்திய கறியை நன்கு அலசிவிட்டு, அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கறியுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, தேங்காய் துருவல் மற்றும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசையவும். (உருட்டும் பதம் வரும் வரை பொட்டுக்கடலை மாவு சேர்த்தால் போதும்).
கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டு பிசைந்த கறிக் கலவையை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், உருட்டிய உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
கிரேவி செய்வதற்கு தேங்காயுடன் கசகசா மற்றும் முந்திரி சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து, இறக்குவதற்கு முன் கோலா உருண்டைகளைச் சேர்க்கவும். (கிரேவி ரொம்ப கெட்டியாக இருக்க வேண்டாம். உருண்டைகள் ஊறும் போது தடிமன் சரியாக இருக்கும்).
சுவையான மட்டன் கோலா உருண்டை கிரேவி தயார். பிரியாணி, புலாவ், ப்ரிஞ்சி சாதம் அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும். பார்ட்டிகளுக்கு செய்வதற்கு நல்ல ரிச்சாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் அக்கா. வறுத்து வச்சிருக்க உருண்டையே சூப்பரா இருக்கும் போல இருக்கே

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கோலா உருண்டை கிரேவி சூப்பர், ரொம்ப அருமையாகவும் எளிமையாகவும் இருக்கிறது, படங்களும் தெளிவாக உள்ளது, இந்த சண்டே இது தான் செய்ய போகிறேன்.

கறிக்கு பதிலாக‌ கோழியில் பண்ணாலாமா?

கோலா உருண்டை சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கோலா உருண்டை சூப்பர்! இது என்னோட‌ சின்ன‌ வயசு ஃபேவரட்! எக்ஸ்ட்டா இதேப்போலத்தான் அம்மாவும் செய்வாங்க‌, உருண்டைகளை வறுத்து எடுக்க‌ எடுக்க‌ நான் சாப்பிட்டிடுவேன். :‍) அதை வைத்து க்ரேவி,புதுசா இருக்கு.

அன்புடன்
சுஸ்ரீ

விஜுகார்த்திக்,

உங்க‌ சந்தேகத்துக்கு நான் பதில் சொல்லலாம்னு வந்தேன். இங்கே நான் சிக்கன் வைத்து இதேப்போல‌ உருண்டை செய்திருக்கேன். நல்லா வரும், செய்துப்பாருங்க‌.

அன்புடன்
சுஸ்ரீ

Susri,

என் சந்தேகத்திற்க்கு பதில் சொன்னதுக்கு நன்றி!
இந்த‌ செய்முறை அப்படியே கோழி வைத்து செய்து பார்த்துவிட்டு சொல்றேன்.

Nandri