டீச்சர்.. ஒரு ஹிந்தி பார்சல் - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்

ஏ கா... வு.. மே - ஏ காவுமே - ஒரு ஊர்ல, ஏ கி.. ஷா.. ன் - ஏ கிஷான் - ஒரு ராஜா ர. க.. தா. தா - ரகதாதா - இருந்திருந்தார். ரொம்ப மெதுவாய் ஒவ்வொரு எழுத்தாய் கூட்டிப் படித்தேன். படித்தபடியே கொட்டாவி வந்தது எனக்கு. (ஆஸ்தான நண்பி வர்றார் போல).

இல்லமா.. இன்னைக்கு இதோட, முடிச்சிகுவோம். மிச்சத்த நாளைக்கு பாத்துக்கலாம். கொஞ்சம் சலிப்போட அந்த கதை புத்தகத்தை மூடினேன்.

கோபமாய் கத்தினாள் குட்டி வாண்டு, “தினம் தினம் உன்னோட இம்சைதாம்மா. ஒரு நாளைக்கு ஒரு லைன் தான் படிக்கிற. அதையும் அடுத்த நாளைக்கு மறந்திருற. நீயெல்லாம் எப்படி தான் படிச்சியோ? இதுல பெரிசா டீச்சர் வேற. நான் என் விளையாட்டு நேரத்த வேற உனக்காக ஒதுக்குறேன். போம்மா” என்றபடியே முறைத்துவிட்டு விளையாட கிளம்பினாள்.

என்னங்க அப்படி பார்க்குறீங்க? பொதுவா பொண்ணு படிக்கலைன்னு தான் அம்மா திட்டுவாங்க. ஏன்? இங்க அம்மா படிக்கலைன்னு பொண்ணு திட்டுதுன்னா.

அத ஏங்க கேட்குறீங்க இந்த வயசுலயா, நமக்கு ஹிந்தி படிக்க ஆச வரணும் (ஆசை இல்ல அவஸ்தை).

வந்திடுச்சே... நமக்கு இருக்கிற மெமரி பவருக்கு (எக்சேம்பில் : பருப்பு இல்லாது பருப்பு சாம்பார் வைக்கிறது. வெங்காய ரசம் வைக்கிறது. இன்னும் கைவசம் நெறைய இருக்கு. ம்.. ம்... நம்ம வனி சிஸ்டருக்கு யூஸ் ஆகும்). வேற யார்கிட்டயும் கோச்சிங் போனா அவ்வளவு தான். அசிங்கப்படுத்திட மாட்டாங்க. (இப்பவும் அசிங்கப்படத்தான் செய்றோம். இருந்தாலும் நம்ம பொண்ணு தான).

எனக்கு ஏன் ஹிந்தி படிக்கணும்னு ஆசை வந்திச்சின்னு சொல்லுறேன் கேளுங்க. (கண்டிப்பா இதுல ஒரு டார்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள் போட்டே ஆகணும். ஆக்காங்க்.. சொல்லிபுட்டேன்).

ஸ்கூல்ல புதுசா ஒரு தலைமை ஆசிரியை வந்திருந்தாங்க. அவங்க நார்த் இந்தியா.

ஒரு இரண்டு, மூணு நாள் கழிச்சி, நான் சக ஆசிரியை ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது வந்தவர், “ஹைய்சா ஹே கிரிஷ் “ (எப்படி இருக்கீங்க கிரிஷ்) என்றார்.

நான் திடுக்கிட்டேன். (நமக்கு தான் ஹிந்தில அ, ஆ, தெரியாதே).

அதற்குள் என் பகுத்தறிவு மூளை, உங்க பேர் என்னன்னு கேக்கிறதுக்கு, ஏன் நம்ம பேரே சேர்த்து சொல்லணும் என்றது. உடனே சுதாரித்து நீங்க கிரிஷ் தானே என்று கேட்கிறார்கள் என்றது. உடனே ‘எஸ், ஐ அம் கிரிஷ்’ என்றேன்.

'கொழுக்' கென சிரித்தார் பக்கத்திலிருந்த ஆசிரியை, கூடவே தலைமை ஆசிரியையும்.

காரணம் அறிந்து நானும் ஹி... ஹி.. ஹித்து வைத்தேன். என்ன செய்வதென்டு புரியாமல். (விடுறா.. விடுறா.. சுனா பானா மீசைல மண் ஒட்டல (நமக்கு தான் மீசையே இல்லையே. இதுல எங்க மண் ஓட்டுறது)). இருந்தாலும் எனக்கு மன வருத்தம் தான்.

மாலை வீட்டுக்கு வந்த பின் என்னவரிடம் சொன்னேன். அவருக்கு அது ஒன்றும் பிரச்சனையாகவே தெரியவில்லை. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பது போல் பேச, (அப்படியெல்லாம் இல்லையெண்டால் தினமும் நம்மிடம் பாட்டு கேட்க முடியுமா? அய்யயோ உண்மையிலே நான் பாட்டு நல்லா பாடுவேங்க. இதுல உள்குத்து ஒன்னும் இல்ல) நான் விடாமல் அடம் பிடித்து, தமிழ் வழி ஹிந்தி படிக்க புத்தகம் வாங்கினேன்.

விடுவோமா என்ன. டிகே (ஓகே), சலோ (போ), துமாரா நாம் ஹியாகே (உங்களுடைய பெயர் என்ன), தோடா தோடா (கொஞ்சம் கொஞ்சம்), ஹிந்தி ஒன்று முதல் ஒன்பது வரை (நம்பர் தாங்க) படித்துவிட்டேன்.

ம்.. ம்.. கிரிஷ்க்கு இப்போது தமிழோடு, இன்னொரு மொழியும் தெரிந்தாயிற்று.

எல்லாம் சுமூகமாய் தான் போய் கொண்டு இருந்தது. அடுத்த பூகம்பம் வரும் வரை...

வந்தேவிட்டது…

குட்டி வாண்டுவை விளையாடுவதற்காக பார்க் கூட்டி சென்றிருந்தேன். கூடவே நானும்.

ஒரு சேட்டுகார வயசான அம்மா, நாம போடுற டிகே (ஓகே) வை பார்த்து. 'பஜன்லால் சேட் போன் நம்பர் பார்த்து சொல்லும்மா' என்றார் பாக்கெட் டைரி கொடுத்து.

'டிகே பாட்டி' வாங்கி பார்த்த எனக்கு விழி பிதுங்கியது. அனைத்தும் முத்து முத்தாய் ஹிந்தி எழுத்துக்கள். எண்ணை கண்டுபிடித்துவிடலாம், அதில் பஜன்லால் சேட்டுவை எப்படி கண்டுபிடிப்பது.

''பாட்டி மேரா (என்னோட) ஐ தோடா ப்ராப்ளம் ஹை, டிகே".(அ..ப்..பாடா, கப்பல் ஏறப்போன மானத்தோட டிக்கெட்ட புடுங்கிகிட்டேன்). அப்படியே குட்டி வாண்டுவை அழைத்து விவரம் கூறினேன்.

இமாம்மா ஸ்டைலில் கர்ர்ர்... என்றவள் (விளையாட்ட டிஸ்டர்ப் பண்ணின கோபம்), பின் கண்டுபிடித்து கூறினாள்.

இதோ, இப்போது,

ஆரம்பித்துவிட்டேன். கோச்சிங்... கோச்சிங்...

வேற யாரு? நம்ம குட்டி வாண்டுதான். இதோ பார்த்திங்கல்ல. ஒரு மாசமா முயற்சி பண்ணிகிட்டு தான் இருக்கிறேன். எல்லாம் ஓகே தான். ஆனா நாம படிக்க ஆரம்பிக்கும் போது தான் ஹிந்தில உள்ள மொத்த எழுத்துகளும் (ம்.. ம்... மொத்தம் எத்தன?) ஒரே மாதிரி தெரியுது.

நம்ம குட்டி அம்மணிக்கும் என்னவோ தான் உண்மையாளுமே டீச்சர் ஆயிட்டோம்ன்னே நெனைப்பு. நம்மள ஒரே மொறைப்பு தான். (நல்ல வேளை கவர்ன்மெண்ட் மாணவ, மாணவியரை அடிக்கக்கூடாதுன்னு ரூல்ஸ் போட்டு இருக்கு). இங்க பாருங்க இந்த ஒரு லைன் படிக்கிறக்குள்ள நாலு தடவ மொறச்சாச்சி.

அப்பாடா, ஏதோ ஒரு வழியா ஹிந்தி பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணியாச்சி. (அதாங்க அ, ஆ, இ, ஒண்ணாம் வகுப்பு).

ஸ்கூல் போக (ஹிந்தி படிக்க இல்லைங்க. டீச்சர். அய்யயோ.. ஹிந்தி டீச்சர் இல்லைங்க. சயின்ஸ்). பஸ்சுக்காக பஸ் ஸ்டாண்டுல நின்னுகிட்டு இருந்தேன். வேக வேகமாய் ஓர் அம்மா செல்போன காதுல வெச்சிகிட்டே ஓடி வந்தாங்க.

"என்னம்மா என்ன", என்றேன்.

“**நீவு நீ கலமு இவ்வகலவா “ என்றார்.

அதிர்ச்சியுடன் அவரை கண் விரியப் பார்த்தேன்.

என்னங்க இது? என்ன மொழி? விடாம தொரத்துராங்களே... முடியுமா நமக்கு?

சத்தியசோதனை...

ம்.. ம்... எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?

ஐயா... அம்மா... அக்கா... தங்கச்சி... நம்ம அறுசுவைல கோச்சர் யாரும் இருக்கீங்களா?

(குறிப்பு: **நீவு நீ கலமு இவ்வகலவா ? (நீங்க எனக்கு பேனா கொடுக்க முடியுமா?) - சுந்தர தெலுங்கு).

Comments

இப்பதான் உங்கள் கதையைப்படித்தேன்,நல்ல நகைச்சுவை,இப்ப நடந்துகொண்டிருக்கும் பட்டிமன்றத்திற்கு நீங்கதான் சரியான நடுவர்னு,உங்கள் கதையிலிருந்து புரியுது,அசத்துங்க.........

நன்றி..நன்றி. படித்து, சிரித்ததுக்கு.
பட்டிமன்ற நடுவர், தலைப்புக்கு பொருத்தமா?!? அது தீர்ப்புக்கு அப்புறம்தான் தெரியும்ன்னு நெனைக்கிறேன்.

உன்னை போல் பிறரை நேசி.

hindi padici mudichacha
nallathu padikirathu.bcoz as a indian citizen hindi therianumla.athu namma national languagela.nalla teacher neenga.aarvam athigama iruku.congrats.
naanum ipethan b.ed mudichen.enakum hindi pesa theriathu.elutha padika therium.but en husbandku elutha padika theriathu.nalla pesuvanga hindi.avanga kita than naanum kathutu iruken konja konjama.seeekirama naanum hindi padiciruven.

நல்லா இருக்கு, கொஞம் பாப்பாவ‌ எங்க‌ வீட்டுகும் கூட்டு வாங்க‌

ஹிந்தி மற்றும் எந்த‌ லாங்குவெஜ் கத்துக்கவும் இந்த‌ ஐடியா ...

படிக்க‌, எழுத‌ ‍: (ஹிந்தி டு தமிழ் /இங்லிஷ் ) புத்தகம் வாங்கி எழுதி படிச்சி பயிற்சி எடுங்க‌..இன்டெர்னெட் ல‌ பாத்தும் படிக்கலாம்..

புரிந்து கொள்ள‌ : அந்த‌ லாங்குவெஜ் ஃபிலிம்ஸ் இங்லிஷ் / தமிழ் sub title கூட‌ பாருங்க‌.. நிறைய‌ படம் பாத்து இந்த‌ மாதிரி கத்துக்கலாம்..

பேச‌ : பேசினா தான் முடியும்... முதலில் தயக்கம் இருந்தாலும், கண்டிப்பாக‌ டிரை பன்னுங்க‌..போக‌ போக‌ சகஜம் ஆகிடும்..

உங்க‌ கூட‌ யாராவதும் படிச்சா ஃபன் கம் லார்னிங் தான் :)

Super Story...

Try Try Again.....
Till You Success....

SugAshu.....

நகைச்சுவை உங்களுக்கு அருமையாக வருகிறது. எழுத்தாளராக‌ வெற்றி பெற‌ வாழ்த்துக்கள்.