தேதி: July 7, 2014
வெள்ளை ஃபெல்ட் - 16 செ.மீ x 16 செ.மீ
மஞ்சள் ஃபெல்ட் - 6 செ.மீ x 6 செ.மீ
நிரப்புவதற்கு பஞ்சு
நூல் - வெள்ளை & கருப்பு
தையல் ஊசி
வரைந்துகொள்ள கடதாசி
பென்சில்
மார்க்கர்
ஸ்கேல்
கத்தரிக்கோல்
ஒரு கடதாசியில் இரண்டு சென்டிமீட்டர் சதுரங்கள் வருவது போல கோடுகள் வரையவும். அதில் படத்திலுள்ள வடிவங்களை வரைந்து கொள்ளவும்.

வரைந்த வடிவத்தை வெட்டி எடுத்து வெள்ளை ஃபெல்ட்டில் ட்ரேஸ் செய்யவும். ஒவ்வொன்றிலும் இரண்டு துண்டுகள் தேவைப்படும்.

இவற்றில் எவற்றுக்கும் தையல் இடைவெளி விடத் தேவையில்லை. இழுபடாமல் வெட்டி எடுத்தால் மட்டும் போதும்.

வெள்ளை ஃபெல்ட்டில் வரைந்து வைத்துள்ள செவிகளையும் வெட்டி வைக்கவும். மஞ்சள் நிறத்தில் இரண்டு செவிகளை வெட்டிக் கொள்ளவும்.

வெள்ளை நிற நூலை இரண்டு பட்டையாகக் கோர்த்து, முயலில் உடற்பாகத்தைத் சேர்த்து குத்தித் தைக்கவும். (மடிக்கவெல்லாம் தேவையில்லை. அப்படியே பிடித்துத் தைத்தால் போதும்). தையலைப் பிடரியிலிருந்து ஆரம்பித்து சுற்றி வந்து வால் முடியும் இடத்தில் நிறுத்திவிடவும். (வரைபடத்தில் X - Y க்கு இடைப்பட்ட பகுதியைத் தைக்காமல் விட வேண்டும்).

ஒரு பென்சிலினால் மெதுவாக பஞ்சை உள்ளே தள்ளி நிரப்பவும். முதலில் முன்னங்கால்களையும் பிறகு தலையையும் நிரப்பவும். பிறகு பின்னங்கால்களையும், வாலையும் நிரப்பிவிட்டு மீதியை நிரப்பவும். அதிகம் இறுக்கமாகத் திணிக்க வேண்டாம். அமைப்பு நன்றாக வராது.

இனி முதுகுப் பகுதியைச் சேர்த்துத் தைக்கவும்.

மஞ்சள் நிறச் செவித் துண்டு ஒன்றுடன், ஒரு வெள்ளை நிறச் செவித் துண்டைச் சேர்த்துப் பிடித்து ஓரங்களைச் சேர்த்துத் தைக்கவும்.

அடிப்பக்கத்தைச் சுருக்கி இறுகக் கட்டினாற்போல் தைத்துவிடவும். இப்போது பார்க்க செவி சற்று வளைந்து இருப்பது போல தெரியும். இது போல அடுத்த செவியையும் தயார் செய்து வைக்கவும்.

செவி வரவேண்டிய இடத்தில் மஞ்சள் நிறம் முன்னால் வருவது போல வைத்து இறுகத் தைக்கவும். தையல் வெளியே தெரியாதவாறு தைக்கவும். இதே போல இரண்டாவது செவியையும் இணைக்கவும்.

கண், மூக்கு மற்றும் வாயை கருப்பு நிற நூலினால் தைத்துவிடவும். மூக்கு தைக்கும் போது சற்று இறுக்கமாகத் தைத்தால் அமைப்பாக வரும்.

கைக்கடக்கமான அளவில் மெத்தென்று அழகான குட்டி முயல் தயார்.

Comments
இமா
முயல் குட்டி அழகா இருக்கார் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமாம்மா
ரொம்ப அழகா இருக்கு
Imma
Kutty muyal azhakaakavum,arumaiyaakavum uLLathu imma. Please tell me the name of the stitch you put it on
வாணி...
கம்பளித் தையலோ நூலோட்டமோ இல்லை. சாதாரண ஸ்டாப் ஸ்டிச்தான். கைக்குட்டை, சேலைக் கரைக்கு உருட்டிப் போடும் தையல். இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பிடித்து, சிறிய இடைவெளிகளில் ஊசியைக் குற்றி துணியின் மறு பக்கம் இழுக்க வேண்டும். மீண்டும் துணியின் மேலாக எடுத்து வந்து குத்த வேண்டும். எட்டாவது படத்தைப் பார்த்தால் கொஞ்சம் புரியும் என்று நினைக்கிறேன்.
- இமா க்றிஸ்
இமா
வெள்ளை முயல் ரொம்ப அழகு.
ஈசியான முறையை சொல்லி இருக்கீங்க.
உள்ளங்கையில் தூக்கி வைத்து கொஞ்சலாம் போல இருக்கு.
சோ க்யூட்
இமா அக்கா
குட்டி முயல் சூப்பர், ரொம்ப அழகாக உள்ளது, வெள்ளை நிறத்தில் உடல் பகுதியும் மஞ்சள் நிறம் செவிகளுக்கும் கொள்ளை அழகு.
இமா மேடம்
ச்யூட்டான முயல் குட்டி... ஈஸியா இருக்கு.. தைக்க மட்டும் தான் நேரம் எடுக்கும்னு நினைக்கிறேன்...
கலை
கலை மேடம் ;)
//தைக்க மட்டும் தான் நேரம் எடுக்கும்னு நினைக்கிறேன்...// அது கூட அதிக நேரம் எடுக்காது. மடிப்பு எதுவும் இல்லை. இடைத் துண்டுகள் இல்லாததால் துணி இழுபடும் பிரச்சினை இல்லை. ஆரம்பித்தால் 100 % சரியாக வரும். ஒரு பத்து பதினைந்து நிமிஷத்துல முடிச்சுரலாம். ட்ரை பண்ணுறீங்களா?
- இமா க்றிஸ்
இமா மேடம்
கண்டிப்பா ட்ரை பண்றேன்... நீங்க டீச்சர் அதனால் இமா மேடம் :-)
ஆனால் நான் டீச்சர் இல்லையே. :-(
அப்படியே எனக்கு ஒரு குட்டி நாய் குட்டியும் செய்து காட்டுங்களேன்.. ரொம்ப நாள் ஆசை இதேபோல பொம்மைகள் செய்யனும்னு.
கலை
நாய்க்குட்டி வரும்
ஆனா வராது ;))
இமா அறுசுவைல எத்தனையோ ப்ராமிஸஸ் ப்ரேக் பண்ணி இருக்கேன். சோ.. எதிர்பார்க்காதீங்க. ;)
வராது... ஆனா வரும். ;D
இமா ராசி மேடம் இல்லை. ஜஸ்ட் இமா ப்ளீஸ். ;)
- இமா க்றிஸ்
முயல் வெள்ளை உடல் மஞ்சள்
முயல் வெள்ளை உடல் மஞ்சள் காதுடன் ரொம்ப அழகா இருக்கு. பேர்டன் செய்ய ஐடியா இல்லாம இருந்துச்சு மேடம் இப்ப தெரிஞ்சுகிட்டேன். செய்து பார்க்குறேன் மேடம்
குட்டி முயல்
கடைசி படத்தில், அழகான குட்டி முயலுக்கு உயிரே வந்த மாதிரி இருக்கு. சூப்பர்.. சூப்பர்,
உன்னை போல் பிறரை நேசி.
இமா,
குட்டி முயல் ரொம்ப ரொம்ப அழகாவும் செய்ய சுலபமாகவும் இருக்கு. கண்டிப்பா முயற்சித்து போட்டோ போஸ்ட் பண்ணுறேன். தேங்க்ஸ் சிம்பிளா புரியவச்சதுக்கு.
முயல்
நன்றி க்றிஸ் ரேணு & தேவி.
கட்டாயம் செய்து பார்க்கணும். :-)
- இமா க்றிஸ்
appreciation
கையில் தூக்கி கொஞ்ச தோன்றும் அழகான முயல் குட்டி,அருமையாக செய்து இருக்கிறீர்கள் aunty ,என் மகனுக்கு முயல் பொம்மைகள் என்றால் ரொம்ப இஷ்டம், செய்து கொடுத்து அசத்த போகிறேன்.Thank u
ஹாய் சாய் நேத்ரா
பேர் சரியா எழுதி இருக்கிறேனா! அழகான பெயர். :-)
இப்போதைக்கு இந்த இரண்டு கால் முயலை ட்ரை பண்ணுங்க. கட்டிங் சரியாக வந்ததும் நாலு கால் முயல் கொடுக்கிறேன்.
- இமா க்றிஸ்