பூண்டு பொடி

தேதி: July 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

பூண்டு - 15 பல்
காய்ந்த மிளகாய் - 10 -15
காய்ந்த மல்லி - ஒரு கப்
பெருங்காயம் - சிறிது
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், காய்ந்த மல்லி மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்து ஆறவிடவும். வாணலியின் சூட்டிலேயே புளி மற்றும் பூண்டைப் போட்டு வதக்கவும்.
ஆறியதும் காய்ந்த மிளகாய், பெருங்காயம், புளி மற்றும் உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அத்துடன் பூண்டைச் சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக காய்ந்த மல்லியைச் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும்.
பொடியில் ஈரத்தன்மை இருப்பது போலத் தெரிந்தால், வெறும் வாணலியை சூடுபடுத்தி அரைத்தப் பொடியைப் போட்டு கிளறி, ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும். (அதிக நேரம் வரை அடுப்பிலேயே வைத்திருக்க வேண்டாம். வாணலி சூடானதும் அடுப்பை அணைத்துவிட்டு, பிறகு பொடியைக் கொட்டி கிளறவும்).
இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையான பூண்டு பொடி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பூண்டு பொடி கலர் ஃபுல்லா இருக்கு... எங்க வீட்ல காய்ந்த மல்லி சேர்த்து செய்ததில்லை.. அடுத்த முறை நீங்க சொல்லிருக்கபடி செய்து பார்க்கிறேன்...

கலை

பூண்டு பொடி பார்க்கவே நல்லாருக்கு நித்யா மல்லி சேர்த்து செய்தது இல்லை இந்த செய்முறையிலும் செய்து பார்க்கனும்

சூப்பர்! புக்மார்க் பண்ணிட்டேன்.

‍- இமா க்றிஸ்

பொடி ரொம்ப நல்லாருக்கு நித்யா. உங்க எண்ணெய் முருங்கைக்காய் செய்தேன் டேஸ்ட் சூப்பர். :-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நித்யா பூண்டு பொடி சூப்பர், செய்முறையும் எளிமையாக உள்ளன, எங்க வீட்டில் இட்லிக்கோ அல்லது தோசைக்கோ என்னதான் சட்னி வைத்தாலும் முக்கியமா இட்லி பொடி வேண்டும், அதனால் ஒரே விதமாத பொடி செய்வதற்கு இன்றைக்கு சற்று வேற வித்தியாசமான பொடி செய்யலாமுனு இருந்தேன். உங்க பூண்டு பொடியை பார்த்துட்டேன். எங்க வீட்டிலேயும் காய்ந்த மல்லி சேர்த்தது இல்லை, அதனால் இந்த பொடியை தான் செய்ய போகிறேன் மிக்க நன்றி நித்யா.

நித்யா,

பூண்டு பொடி சூப்பர்! எங்க வீட்டில் இட்லிக்கு அப்பப்ப‌ ஒரு மாறுதலுக்காக‌ மிளகாய்ப்பொடியில், சிறிதளவு உப்பு, சில‌ பூண்டு பற்கள் வைத்து தட்டி பொடி செய்வேன். இது தனியாவும் சேர்த்து, பார்க்கவே அருமையா தெரியுது. கட்டாயம் செய்திட்டு சொல்றேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

குறிப்பை வெளியிட்ட அட்மின்குழுவினர்க்கும் நன்றி

அனைவரது வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

புதுசா இருக்கு தனியா சேர்த்து அரைத்தது. ட்ரை பண்றேன் நித்யா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா