என் தோழியின் வாழ்க்கையை காப்பாற்ற உதவுங்கள் please

என் தோழிக்கு 2 குழந்தைகள்.கணவர் உயர் பதவியில் உள்ளார்.ஆபிஸ் அருகில் friend வீடு இருந்ததால் அவர் friend அடிக்கடி வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.என் தோழியின் கணவர் கலகலப்பானவர். இதனால் அவர் friend மனைவிக்கு இவர் மீது காதல் வந்துவிட்டது. தோழியின் கணவர்க்கு phone செய்து தனது விருப்பத்தை கூறி தொந்தரவு செய்துள்ளாள். phone எடுக்காமல் இறுந்தால் office வந்துவிடுவாளாம். உயர் பதவியில் தோழியின் கணவர் இருந்ததால் phone number மாற்ற முடியவில்லை.

இது அவளின் கணவர் மற்றும் உறவினருக்கு தெரிந்து அடித்து உதைத்து உள்ளனர். இதனால் தற்கொலை செய்ய முயர்ச்சிது காப்பாற்றி உள்ளனர். அவளோ வாழ்ந்தால் உங்கலோடு இல்லை நாம் இருவரும் இறந்துவிடுவோம் என்று கூரியிள்ளாள்.அவளின் கணவர் எப்படியாவது போய்தொலை என்று விட்டுவிட்டார்.
அவர் friendக்கு2 குழந்தைகள் உள்ளனர். இதனால் என் தோழியின் கணவர் மனம் மாறி அவலுக்காக ஏங்க தொடங்கி உள்ளார்.

அதற்கு என் தோழி நான் உங்களை விட்டு பொய் விடுவேன் இல்லை இறந்துவிடுவேன் என்று கூரியிள்ளாள். அதற்கு என் தோழி கணவர் நீ இல்லை என்றால் நான் இறந்துவிடுவேன். எனக்கு நீயும் வேண்டும் அவளும் வேண்டும் என்கிரார்.இப்போது என்ன செய்வது என்று என் தோழிக்கு தெரியவில்லை.அவள் கணவர் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளாள்.என் தோழியின் வாழ்க்கையை காப்பாற்ற உதவுங்கள் please. .அவள் இப்போது என்ன செய்வது.

(இருவருக்கும் parents இல்லை.அதனால் அவர்களின் support கிடைக்காது)

ஒரு பொன்னோட‌ வாழ்க்கையை கெடுக்குறதே இந்த‌ பொன்னுங்கதான்.எப்படி இந்த‌ ஆம்பிள்ளைங்களும் எனக்கு ரென்டு பேரும் வேனும் சொல்றாங்களோ..நம்ம‌ அப்படி சொன்ன‌ ஏத்துப்பாங்களா...அந்த‌ பொம்பளை எப்படி போன‌ இவருக்கு என்ன‌ இவரு இவருடைய‌ பேமிலி பார்க்க‌ வேண்டிய‌ தானே...யாருமே குடும்ப‌ வாழ்க்கைலா பரிதாப்பட்டா இப்படிதான் போகும்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

உங்கள் தோழியை மிரட்ட‌ சொல்லாதீர்கள்.அது சில‌ நேரங்களில் எதிர் விளைவை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது.அன்பு ஒன்று தான் சரிபடுத்தும் வழி.கணவன் மனைவி இருவரையும் தனியாக‌ பேச‌ சொல்லுங்கள்.உங்கள் தோழியும் அவரது கணவர் போன்று 2 வருடன் வாழ்ந்தால் அவர் ஏற்றுக்கொள்வாரா என‌ கேட்க‌ சொல்லுங்கள்.குழந்தைகளின் வாழ்வை முன்னிருத்தி பேச‌ சொல்லுங்கள்.அவர்கள் 2 வரின் திருமண வாழ்வில் இது வரை நடந்த நெகிழ்ச்சியான‌ தருணங்களை அவரது கணவருக்கு நினைவுபடுத்த சொல்லுங்கள்.இன்று அவருடன் இது வரை வாழ்ந்த கணவரை ஒதுக்கி தள்ளி விட்டு வந்தவள் இவ்ரை ஏமாற்ற எவ்வளவு கால்ங்கள் ஆகி விடும் என்ற உண்மையை உணர்த்த சொல்லுங்கள்.மனைவி மீது பாசம் வைத்துள்ளார் எனக் கூறினீர்கள்.ஆதலால் கண்டிப்பாக அவர் மாறுவார் என‌ நம்புகிறேன்.இல்லையெனில் மருத்துவரிடம் ஒரு கவுன்சிலிங் கொடுக்க‌ கூட்டி செல்ல‌ சொல்லுங்கள். என்பது என் கருத்து

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

தங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி தோழிகளே. அந்த பெண்ணை வீட்டிற்க்கு அழைத்து வந்துவிட்டால் என்ன செய்வது தோழிகளே. Please replay me.

//அந்த பெண்ணை வீட்டிற்க்கு அழைத்து வந்துவிட்டால் என்ன செய்வது தோழிகளே.// ம்... முதல்ல நீங்க இதுல இருந்து கழன்றுக்கிறது நல்லதுன்னு தோணுது. :-) நீங்க எதுவும் பண்ண முடியாதுல்ல! சின்னப் பொண்ணா தெரியுறீங்க. வீண் பிரச்சினைல மாட்டிக்காதீங்க.

விடுங்க. அவங்க கலியாணம் ஆகும் அளவு மனப்பக்குவம் உள்ளவங்க. //இருவருக்கும் parents இல்லை.// ஆனாலும் வேறு பெரியவங்க யாராச்சும் இருப்பாங்க இல்ல! பார்த்துப்பாங்க.

சில விஷயங்கள்... ஆகும் முன்னால், 'இப்படி ஆனால் என்ன செய்வது!' என்கிறது யோசிக்கக் கூடாது. ஆகாமல் இருக்க குடும்பத்தார் எல்லோருமாக ஆன முயற்சி எடுப்பாங்க.

ஆனால் என்ன! சண்டை போடுவாங்க. ஒரு தீர்வு வரும்.

உங்களால எந்த உதவியும் பண்ண முடியாது கண்ணா. யோசிச்சு உங்க நிம்மதியைக் கெடுத்துக்காதீங்க. அவங்களோட இப்போ இந்தத் தலைப்பை டிஸ்கஸ் பண்ணப் போகாதீங்க. ஏற்கனவே போதுமான அளவு குழம்பி இருப்பாங்க. இன்னும் குழப்பினா யோசிச்சு காரியம் பண்ணுற தன்மை மூளைக்கு இருக்காது.

ஏதாவது சொன்னாங்கன்னா கேட்டுக்கங்க. அவங்களுக்கு ஆறுதலா இருக்கும். ஐடியா கேட்டாங்கன்னா... அவங்க உறவினர் உதவியை நாடச் சொல்லுங்க.

//இருவருக்கும் parents இல்லை.// நீங்கள் நடுவில் மாட்டிக் கொண்டு உங்களுக்கு சிக்கல் ஆனால் யார் உங்களுக்கு உதவுவார்கள்!!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்