யாராவது Nuitri slim,herbal life,weight loss tablets ஏதாவது உபயோகபடுட்த்தி weight reduce பன்னிருக்கீங்களா

யாராவது Nuitri slim,herbal life,weight loss tablets ஏதாவது உபயோகபடுட்த்தி weight reduce பன்னிருக்கீங்களா? exercise,diet ஏதும் பலன் தரல.pls help me friends,pls share ur experience.

unga weight enna

empty stomach la hot water+lemon ,black tea without sugar,morning 3 slice brown bread, noon la 2 chappathi daal fry,night la 2 wheat dosa&tomoto chutney noyt coconut chutney .... morning& evening 45 mins walking

intha method la 10 kg 4 months la korachen

தினம் குறைந்தது 6 குட்..டி மீல்ஸ். அவற்றுள் வாரம் இரண்டு bad mealsக்கு அனுமதி உண்டு. இந்த இரண்டும் பெரிதாக இருக்கலாம். சாக்லேட், கேக் எல்லாம் இந்தச் சமயம் முடிக்க வேண்டும்.
காலை உணவு கட்டாயம் எடுக்க வேண்டும். நான் எடுத்தது - ஓட்ஸ், fat free milk + nuts.
கட் பண்ண வேண்டியவை - சாதம், ப்ரெட், கிழங்கு, சீனி, இனிப்பு அதிகமான பழங்கள் & உணவுகள்
குறைத்தது - லாப்டாப் & டீவீ
நடக்க வேண்டும். (என் கால் மட்டும் சரியாக இருந்திருந்தால் விடுமுறையில் எடை போடாமல் கட்டுப்படுத்த முடிந்திருக்கும். ஒரு ஆக்சிடண்ட். நடை சிரமமாக இருந்தது.)
கட்டாயம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் எல்லாம் சமமாகக் கிடைக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஆரம்பித்தது 21 ஏப்ரல் அன்று. முதல் இரண்டரை வாரங்கள் மாற்றம் எதுவும் தெரியவில்லை. பிறகு காலும் மெதுவே சரியாக ஆரம்பிக்க கொஞ்சம் நடக்க ஆரம்பித்தேன். பிறகு எடை மெதுவே குறைய ஆரம்பித்து ஜூன் இடைப் பகுதியில் என் டார்கட் கிடைச்சுது. 2 மாத்தில் 6 கிலோ குறைந்திருந்தேன்.

சிரமமாக இருக்கவில்லை எதுவும். ஸீரியசாக பட்டினி கிடக்கவில்லை. எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டேதான் குறைத்தேன். இப்போது... அந்த உணவுப் பழக்கத்தை முழுவதாக விட்டேன் என்று சொல்ல மாட்டேன். எதைப் பார்த்தாலும் ஒரு சிறிய துண்டு என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். எடை விட்ட இடத்தில் மாறாமல் நிற்கிறது.

‍- இமா க்றிஸ்

பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த டயட் சார்ட்டை கடைபிடிக்கலாமா?

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

வேண்டாம். ஹெல்த்தைக் கெடுத்துக்காதீங்க. பால் போதாமல் போனால் பாப்பாவும் பாவம். இப்போதைக்கு எக்சர்ஸைஸ் மட்டும் போதும்.

‍- இமா க்றிஸ்

நீங்க //exercise,diet ஏதும் பலன் தரல.// என்று சொல்லி இருக்கீங்க. நான் திரும்பவும் அதே ரூட்டில் போய் பாட்டுக்கு என் கதையைச் சொல்லியிருக்கிறேன். :-) மன்னிக்க வேண்டும்.

நான் சொன்ன முறை உங்கள் நடமுறைக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை.ஒவ்வொருத்தர் உடல்வாகு ஒவ்வொரு விதம் இல்லையா! வயது, அனுதின உணவுப் பழக்கம் எல்லாமே வேறு. நீங்கள் கேட்ட எதைப் பற்றியும் எனக்குத் தெரியாது. உதவ இயலாது போனதற்கு வருந்துகிறேன்.

நான் பின்பற்றிய முறை என் சின்னவர் & சின்ன மருமகள் (25 வயதினர்) பின்பற்றிப் பலன் கண்டதால் எனக்குச் சொல்லப்பட்ட முறை. சின்னவர்கள் உட்கார்ந்து தேதி போட்டு சார்ட் எல்லாம் போட்டுக் கொடுத்தாங்க. தினமும் காலையும் மாலையும் எடை பார்த்துக் குறித்து வைப்பேன். இடையில் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று செக் பண்ணாங்க. ;)) அனீமிக் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதையும் அடிக்கடி வற்புறுத்தினாங்க.

என் பதில் பின்பு எப்போதாவது இந்த இழையைப் படிக்கும் யாருக்காவது உதவக் கூடும். என்னும் எண்ணத்தில் பதிவு செய்தேன்.

‍- இமா க்றிஸ்

very thanks imma & barakkath.Daily mrg one ஒட்ஸ் dosai.lunch கொஞ்சம் Rice.night ஒட்ஸ் dosai or சப்பாத்தி.ஆனா எனக்கு முருக்கு ரெம்ப பிடிக்கும்னு கொஞ்சம் சாப்டுவேன்.நல்லா வீட்டு வேலை பாக்குரேன்.daily off hour Rope வச்சு Exercise panren பன்ரேன்.ஆனா No use.ரெம்ப வெறுத்து போச்சு பா.weight 70 kg

//Rice// //சப்பாத்தி.// //முருக்கு//
ஆஹா! முறுக்கு அரிசிமாவு + எண்ணெய் வேற.
நைட் - சப்பாத்தி வேணாம்.

இன்னும் சில விஷயங்கள் க்ளிக் ஆகலைன்னு நினைக்கிறேன். என்னவோ மிஸ் பண்றீங்க.

‍- இமா க்றிஸ்

ஓகேம்மா

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

//ஒட்ஸ் dosai.// அதுல வேற என்ன மாவு கலப்பீங்க? எண்ணெய் விட்டு வார்ப்பீங்களா? என்ன எண்ணெய்?
//சப்பாத்தி.// வேணாம். வேற ஏதாச்சும் ட்ரை பண்ணுறீங்களா?
//முருக்கு // விட்டுருங்க. உங்க டார்கட் கிடைச்ச பின்னால எப்பவாச்சும் சாப்பிடலாம். இப்ப வேணாம்.
//நல்லா வீட்டு வேலை பாக்குரேன்.// அது இப்பல்லாம் கணக்குல வராது. பாதிக்குப் பாதி மெஷின்ல எங்களுக்காக பாக்குது. பாக்குற கொஞ்சமும் டீவீ, லாப்டாப்ல இருந்ததும் காணாமப் போய்ரும்.
//Rope வச்சு Exercise// எவ்வளவு நேரம்?
//.weight 70 kg// http://www.arusuvai.com/tamil/node/14527 போய் கணித்துப் பாருங்கள், எவ்வளவு குறைய வேண்ண்டும் என்று.

ப்ரொஃபைல் பார்த்தேன். மணமானவர். மீதி விபரங்கள் தெரியல. இமா எது வேணும்னாலும் சொல்லலாம். மேலே சொன்னது கூட உங்களுக்குச் சரியாக இருக்குமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் (நான் சொன்னதையும் சேர்த்துத் தான்) உங்களுக்குத் தெரியும் உங்கள் நிலை & தேவை. யோசிச்சு நடக்கணும். ம்..

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்