ரைஸ் கட்லெட்

தேதி: July 11, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

சாதம் - ஒரு கப்
கேரட் - பாதி
பட்டாணி - அரை கப்
உருளைக்கிழங்கு - ஒன்று
வெங்காயம் - ஒன்று
குடைமிளகாய் - பாதி
ப்ரெட் க்ரம்ஸ் - தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை - சிறிது
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பட்டாணி மூன்றையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் குடைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டையும் நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.
அதனுடன் வேக வைத்துள்ள காய்கறிகளை மசித்துச் சேர்த்துப் பிரட்டவும்.
பிறகு சாதத்தைச் சேர்த்துக் கிளறவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி கிளறி எடுத்துக் கொள்ளவும்.
கிளறிய சாதத்தை எலுமிச்சை அளவு உருண்டகளாக உருட்டி, கையில் வைத்து வடை போல தட்டி ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி வைக்கவும்.
பிறகு அவற்றை சூடான தோசை கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இருபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
சூடான, சுவையான ரைஸ் கட்லெட் ரெடி. டொமேட்டோ சாஸுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்....நான் இதுபோல‌ அடிக்கடி செய்வேன்...நல்லா இருக்கும். :)

இப்போ செய்துட்டேன் நித்யா..மதியம் ஃபோட்டோ முகநூலில் அறுசுவையில் போடறேன்.

நித்யா... எங்க இருந்து தான் உங்களுக்கு இப்படி வித விதமா ஐடியா வருதோ?? என் சின்ன மூளைக்கு இதெல்லாம் எட்டவே மாட்டங்குதுங்க. கலக்கறீங்க நிஜமாவே. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கட்லெட் என்றாலே ரொம்ப கஷ்டமா இருக்கும் எப்படி செய்யுறதுனு இருந்தேன் ஆனால் மிகவும் எளிமையாக உள்ளது இந்த சண்டே இது தான், சூப்பர்.

, நானும் இதுபோல செய்வேன், குடைமிளகாய் தவிர்த்து.சாதத்தை மசித்து சேர்ப்பேன், சாத கட்லட் என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. படங்கள் அருமை.
உங்க மைக்ரோவேவ் அவன் செயல்பாடு தெரிந்து கொண்டீங்களா, இல்லைன்னா என்னெ மாடல்ன்னு சொல்லுங்க ,நெட்ல தேடிப் பார்த்து பதில் போடரேன்.

குறிப்பு வெளியிட்ட டீமிற்க்கு நன்றி.

கருத்து கூரிய தோழிகள் அனைவருக்கும் நன்றி.

ரேனு முகனூல எப்படி பார்க்க வேன்டும் சொல்லுஙள்.

ரைஸ் கட்லெட் ரொம்ப நல்லாருக்கு.:-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

very simple method for beginners of cutlet maker like me. thank you.

உங்கள் ரைஸ் கட்லேட் மிகவும் சுவையாக இருந்தது நன்றி

நீங்க‌ எஃப் பி ல‌ இருக்கீங்கலா? இன்ருந்தால் அருசுவைன்னு அடிங்க‌. அல்லது எனக்கு பிரண்டு ரெக்வொஸ்ட் கொடுங்க‌.பின் அருசுவையின் எஃப் பில‌ இருந்து நான் உங்களுக்கு கொடுக்கிறேன். பின் சேரலாம்.

நித்யா நான் ரைஸ் கட்லெட் செய்து பார்த்தேன்,சூப்பரா இருந்தது நன்றி,