பட்டிமன்றம் 98 - உங்களை வாய்விட்டு சிரிக்க வைத்த காமெடி எது?

அறுசுவையின் சகோதர, சகோதரிகளே நண்பர், நண்பிகளே மற்றும் பட்டியில் வாதிட போகும் வக்கீல்களே, வாதிடாமல் வாசிக்கும் வாசகர்களே, எல்லாருக்கும் வணக்கம்.
ஜூலை 13 / பட்டிமன்றம் 98 ஆரம்பிக்கப்படுகிறது. அறுசுவைக்கு இது 98வது பட்டி, ஆனால் இது எனக்கு நடுவராய் முதல் பட்டி. எனவே எல்லோரும் ஆதரவு கொடுக்க அன்பாய் வேண்டுகிறேன். நமது தோழிகளின் கட்டளைக்கு இணங்க, நல்ல ஜாலியான தலைப்பா எடுக்கலாம்னு இருக்கேன்.

தலைப்பு : "உங்களை வாய்விட்டு சிரிக்க வைத்த, ரசிக்க வைத்த காமெடி.
1) கவுண்டமணி, செந்தில் காமெடியா?
2) வடிவேலு, விவேக் காமெடியா?
3) சந்தானம், கஞ்சாகருப்பு, சூரி காமெடியா?"

தலைப்பு உபயம் : indiraganesan நன்றி தோழி. தலைப்பு சிறிது மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு பற்றி :
தலைப்பு பற்றி நான் ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல நீங்க தான் சொல்லணும். 4 வருஷம் முன்னாடி, நகைசுவை அந்த காலமா இந்த காலமான்னு ஒரு தலைப்பு இருக்கு. நாம அதுக்குள்ளே போக வேண்டாம். நேரடியா அவங்களா, இவங்களான்னு போய்டலாம். சரியா. கொஞ்சம் காமெடி பேசுவோமே.
வாங்க வாங்க ஆட்டத்த தொடங்கிட்டேன், அணி பிரிந்து வாதாடலாம் வாங்க. புது முகங்களுக்கு முழுஆதரவு கிடைக்கும்.
பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விதிமுறைகள் இங்கே:
~~~~~~~~~~~~~~~~~~~~~
1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் பேசக்கூடாது.
3. அரட்டை கூடாது.
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.
அனைவரும் ஆரம்பிங்க, உங்கள் வாதங்களை வையுங்க. வாங்க வாங்க :- பட்டியின் ரசிகர்கள்,புதுமுகங்கள்,பார்வையாளர்கள் அனைவரும் வந்து வருகையை பதிவு பண்ணுங்க.

மாண்புமிகு நடுவர் அவர்களே பட்டிமன்றத்தில் பங்கேற்க போகும் மூன்று அணியினருக்கும் முதற்கண் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் நான் அறுசுவைக்கு புதிது பட்டிமன்றத்திற்கும் கூட அருமையான தலைப்பு சுவாரஸ்யாமான தலைப்பும் கூட எல்லாரும் சுப்பரா சிரிங்கோ சிரிக்க வைங்கோ ஞாயிறு விடுமுறையில்லாத அலுவலகம் அலுவல்களுக்கு இடையே அப்பப்ப வந்து கருத்தை பதிய வைக்கிறேன் நன்றி

வாங்க. வாங்க பெனாசிர் அஹமது. புதுமுகங்களை ஆர்வத்தோடு வரவேற்கிறோம். பட்டி வருகைக்கு நன்றி. அப்படியே நீங்க எந்த கட்சின்னு சொல்லி வாதத்த போடுங்க. \\அலுவல்களுக்கு இடையே அப்பப்ப வந்து கருத்தை பதிய வைக்கிறேன்\\ வாங்க... வாங்க.

உன்னை போல் பிறரை நேசி.

வாழ்த்துக்கள் :) நீண்ட இடைவெளிக்கு பின் மனதுக்கு மகிழ்ச்சியா இருக்குங்க.... எல்லாம் உங்களை போல ஒரு புது முகம் நடுவராகி இருக்க சந்தோஷம் தான். பட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள் பல. நம்ம சந்தானம் காமெடிக்கே ஓட்டு போடுவோம் நடுவரே... ஏன்னா அதுக்கு முன்னாடி ஆட்கள் காமெடி எல்லாம் நான் பார்த்ததில்லை.

நடுவரே... அப்படி ஒரு சின்ன ஹெல்ப்... தலைப்பை “உங்களை வாய்விட்டு சிரிக்க வைத்த காமெடி எது?” என்பதோடு முடிங்கோ... உள்ளே வந்த பின் விளக்கமான தலைப்பு போதுமானது. தலைப்பு பெருசா இருந்தா முகப்பில் பார்க்க நல்லா இருக்காதில்ல... அதுக்காக தான் :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க. வாங்க வனி சிஸ்டர். உங்கள் ஆலோசனை உடனடியாய் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நன்றி. சந்தானத்துக்கு தான் உங்க ஓட்டா?. அணி செலேக்சன் முடிஞ்சது. அந்த அணி தலைவரும் நீங்க தான். அப்ப காமெடிய போடுங்க. சிரிக்க ஆரம்பிப்போம். வாங்க... வாங்க.

உன்னை போல் பிறரை நேசி.

அசிங்கமான இரட்டை அர்த்த வசனங்களை பேச சந்தானத்தை மிஞ்ச முடியாது... காமெடி என்ற பெயரில் பெண்களை தர குறைவாக பேசுவதற்கும் யாரும் சந்தானத்தை முந்த முடியாது

வணக்கம் நடுவர் அவர்களே
எப்போதும் என்னோட ஓட்டு வடிவேலுக்கு தான், வடிவேல் சாதாரணமா நடந்து வந்தாலே சிரிப்ப அடக்க முடியாது காமெடி பண்ணினா சொல்லவா வேணும், வடிவேல் காமெடி பற்றி தான் பேச போகிறேன், நன்றி

ரம்யா ஜெயராமன்

பெட்டர்மாஸ் லைட் காமெடி, வாழைப்பழ காமெடி ஆகியவை சிறியவர் முதல் பெரியவை வரை சிரிக்க வைத்தவை

சரியாக சொல்கிறேனா தெரியவில்லை.... தவறாக இருந்தால் கூறிவிடுங்கள்

வாவ் நான் தான் முதல் பதிவு மகிழ்ச்சி நடுவர் அவர்களே தாமததிற்கு மன்னிக்கவும் உங்களுடைய பதில் பதிவை பார்க்க சற்று நேரமாகிவிட்டது வேலை பளுவினால் போகட்டும், என்ற ஓட்டும் நம்ம அண்ணாச்சிங்க கவுண்டமணி செந்திலுக்கு தானுங்கோ ஏனா அவங்க நகைச்சுவை முழுக்க முழுக்க சிரிப்பதற்காக மட்டுமே இருக்கும் அவங்க நகைச்சுவையில ஏதும் உள்ளர்த்தம் இருக்காது

பட்டிமன்ற மக்களுக்கு வணக்கம்.

இப்படி ஒரு தலைப்பை கொடுத்து என்னை திக்கு முக்காட வைத்துவிட்டீர்கள் புது நடுவர் அவர்களே.

எனக்கு மூன்றுமே அலாதி பிரியம் தான்.
1.கலக்கலோ கலக்கல்.
2.சூப்பரோ சூப்பர்.
3.அசத்தல் சந்தானம் and சூரி.

என் மூளையை கசக்கி ஒரு வழியாக நான் வடிவேல் மற்றும் விவேக் என்று முடிவு செய்திருக்கிறேன்.

மீண்டும் என் வாதங்களுடன் வருவேன்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

மேலும் சில பதிவுகள்