நந்திபெட்டா எனும் ஆனந்தகிரி

நந்திஹில்ஸ் (நந்திமலை) இதை பற்றித்தான் இந்த பதிவு. சுமார் ஏழு வருடம் முன் நானும் இவரும் வந்து போன இடம். இப்போது மீண்டும் கண்டது ஒரு மகிழ்ச்சி. அப்போது அறுசுவை தெரியாது, இப்போது தெரிந்ததால் புகைப்படங்களுடன் வந்தேன் உங்களோடு பகிர்ந்துகொள்ள.

பெங்களூரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் ஏர்போர்ட்டுக்கு மிக அருகில் சிக்பலாபூர் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது நந்திமலை / நந்திதுர்க் / நந்திபெட்டா. இதன் பழைய பெயர் ஆனந்தகிரி / குஷ்மந்தகிரி. குஷ்மந்தா என்னும் முனிவர் இங்கே தவமிருந்ததால் அந்த பெயராம். சோழர் காலத்தில் நந்தி மலை என பெயர் மாற்றம் பெற்றது (மலையின் வடிவம் நந்தி அமர்ந்திருப்பது போல இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்). பின் நாளில் திப்பு சுல்தான் கோட்டை கட்டி ஆட்சி செய்து, அவரிடம் இருந்து Cornwallis என்னும் ஆங்கிலேயர் 1791 ல் கைபற்றியிருக்கிறார். இதெல்லாம் ஹிஸ்டரி. இப்போதைக்கு இது யாருடைய கோட்டையும் இல்லை, டூரிஸ்ட் இடம் அவ்வளவு தான்.

பெங்களூரில் இருந்து சின்ன சாலைக்கு திரும்பியதுமே பயணம் இனிமையா இருக்குதுங்க. வழி முழுக்க திராட்சை தோட்டம். அழகான கிராமங்கள். 39 வளைவுகளை கடந்து மலையின் உச்சியை அடைந்தால் பிரம்மாண்டமான நுழைவாயில். பின்ன... ஃபோர்ட் ஆச்சே. அதை தாண்டி உள்ளே போனா இன்னுமொறு நுழைவாயில். அதன் உள்ளே சின்ன சின்ன தங்குமிடங்கள், பார்க், சின்ன கோவில் என அழகான இடம். அங்கிருக்கும் ஆலயம் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாம். ஏறக்குறைய 9ஆம் நூறாண்டில் இருந்து 13ஆம் நூற்றாண்டு வரை ஒவ்வொரு மன்னரா இதன் ஒவ்வொரு வேலையை செய்திருக்காங்க. கடைசியா இந்த மலையை பிடிச்சவர் திப்பு. இந்த ஆலயத்தில் விஷேஷம் என்னன்னா தரை கிடையாது, முழுக்க மலை மேல அப்படியே கட்டப்பட்டது. பழங்கால சிற்ப வேலைகளை ரசிக்க இங்கே பல வெளிநாட்டவர் வருவாங்க. இந்த ஆலயத்தின் இன்னொரு பகுதியில் கல்யாணி என அழைக்கப்படும் அழகான குளம் உண்டு. ஆலயத்தின் பின் பக்கம் அழகழகான குடிசைகள் போல வியூ பாயிண்ட் அமைத்திருக்கிறது கர்நாடகா டூரிசம்.

அதை விட அங்கே முக்கிய இடம் “திப்பு ட்ராப்”!! திப்பு எதை ட்ராப் பண்ணார்?? ஆளுங்களை தான். தனக்கோ அரசுக்கோ துரோகம் பண்ணவங்களை இங்க இருந்து தான் தள்ளிவிட்டாராம்!! ஏன் ஏன் ஏன்? ஏன்னா மரம், செடி என்று இருக்கும் மலை என்றால் பிழைக்க வாய்ப்பிருக்காம்... திப்பு ட்ராப் கீழே முழுக்க பாரை. விழுந்தா எலும்பும் கூட தேராதுன்னு சொல்றாங்க. எம்புட்டு உறுதியா போய் சேர்ந்தாங்களா இல்லையான்னு டவுட்டே வராம கொலை பண்ணிருக்கார்!! கெட்டிக்கார மன்னராச்சே.

இதை எல்லாம் பார்த்துட்டு சாப்பிட அருமையான உணவகம் (கர்நாடகா டூரிசம் நடத்துறது தாங்க) ”மயூரா”. சைவம், அசைவம் எல்லாம் கிடைக்கும். படத்தில் அதன் பக்கத்தில் வியூ பாய்ண்ட் தெரியுதா? பல காதல் ஜோடிகள், பல வாழ்கையை வாழ பயந்தவங்க (??!!) தைரியமா இந்த திப்பு ட்ராப் பாயிண்ட்டில் இருந்து குதிச்சுடுறாங்களாம். நமக்கு அந்த இடத்தை பார்த்தாலே பயமா இருக்கு. அதுக்காக இப்போ டூரிசம் டிபார்ட்மண்ட் ஆலயத்தை சுற்றி வேலி போட்டிருக்காங்க. இங்கே நேரு நிலையா, காந்தி நிலையா எல்லாம் அவர்களே வந்து தங்கியிருந்ததால் அவர்கள் பேரிலேயே தங்குமிடமா இருக்குங்க. சுத்தமா அழகா பராமரிக்கிறாங்க. கூடவே “திப்பு லாட்ஜ்” நேரு தங்கினா நேரு நிலையா, காந்தி தங்கினா காந்தி நிலையா... அப்போ இது? ஆமாம்... திப்பு சுல்தான் விடுமுறையிலும், வேட்டையாட வரும் போதும் (மற்றவர்களை தள்ளிவிட வரும் போதும் கூட) தங்கின இடம். இரண்டடுக்கு கட்டிடம், மெயிண்டனன்ஸ் இல்லாம கிடக்கு. சாவி கொண்டு வரச்சொல்லி திறந்து காட்டினார்கள். உள்ளே பழைய கட்டிடமானாலும் காற்றுக்கும் வெளிச்சத்துக்கு பஞ்சமே இல்லைங்க. இந்த கட்டிடத்தின் பின் பக்கம் உள்ள படிகள் நேரா கீழே உள்ள சின்ன ஊருக்கு போக சுலப வழி. இந்த கட்டிடத்தின் அருகில் ”அம்ருத் சரோவரா” என்ற பிரம்மாண்டமான அழகான பெரிய குளம் இருக்குங்க. இதை இஸ்மாயில் என்ற மைசூர் திவான் 1936ல் கட்டியிருக்கார். இதை சுற்றி அழகான பூங்கா, சின்ன சின்ன மண்டபம் என பார்க்க மிக அழகான இடம்.

ஆலயத்தின் உள்ளே ஒருவர் கையால் ஒரே வேரில் செய்யப்பட்ட உருவங்கள் (பாம்பு, குரங்கு இப்படி நிறைய) வைத்திருந்தார்கள். அவர் ரொம்பவே வித்தியாசமான ரசனை உள்ளவர் போலும். நாணயங்கள் சேகரித்து வைத்திருந்தார். இவ்வளவு கலக்‌ஷன் வேறெங்கும் கண்டதில்லை. அத்தனை நாடு, அத்தனை பழமை வாய்ந்தவை!! ம்ம்... இந்த இடம் முன்பு (ஏழு வருடம் முன்) இந்த அளவுக்கு பெரிய அட்ராக்டிவ் டூரிஸ்ட் ப்ளேசா இல்லைங்க. இப்போ கர்நாடகா டூரிசம் நிறைய பண்ணிருக்காங்க. பார்க்கில் உள்ள மரங்களின் மேலே மரத்தால் கூடாரம் அமைச்சிருக்காங்க. வருபவர்கள் எல்லாம் அங்கே போய் குடும்பத்தோடு அமர்ந்து விளையாடுவதும், ஓய்வு எடுப்பதும், உணவு உண்பதும்... நிஜமாவே ஒரு லீவ் நாள் எப்படி போகுதுன்னு தெரியாம போகுதுங்க. சாலை ஓரம் அமைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் பென்ச்ல உட்கார்ந்து நாயும், குரங்கும் பண்ணும் அட்டகாசத்தை, அவர்கள் விளையாட்டை வேடிக்கை பார்த்தாலே மனசு லேசாகிடும். போதாததுக்கு இயற்கையான சுகாதாரமான சூழல், காற்று, சிறு தூரல்.. அப்படியே லேசான மனசு பறக்க ஆரம்பிச்சுடும். திரும்பி வரும் வழி எல்லாம் திராட்சை தோட்டத்தில் இருந்து நேரடி விற்பனை. கை நிறைய வாங்கி முழுங்கிகிட்டே பயணத்தை அசைபோட்டேன். மொத்தத்தில் மனசுக்கு இதமான அருமையான விடுமுறை. :) நந்திஹில்ஸ் (நந்திமலை) நிஜமாவே சென்று வருபவர்கள் மனதுக்கு ஆனந்தம் தரும் “ஆனந்தகிரி”.

5
Average: 5 (5 votes)

Comments

நந்தி ஹில்ஸ பத்தி உங்க‌ எழுத்து மூலமா தெரிஞ்சுக்க‌ முடிந்தது. உங்க‌ பதிவை படிக்கும் போது அந்த‌ இடத்துக்கு நானே போய் பார்த்த‌ பீலிங் எனக்கு. பெயர் காரணாம், போட்டோஸ் எல்லாமே சூப்பர்.இந்தியா வந்து செட்டில் ஆனதும் தான் இந்த‌ இடத்துக்கு எல்லாம் ஒரு ரவுண்ட் போயிட்டு வரணும்...:)
//திப்பு எதை ட்ராப் பண்ணார்?? ஆளுங்களை தான்..எம்புட்டு உறுதியா போய் சேர்ந்தாங்களா இல்லையான்னு டவுட்டே வராம கொலை பண்ணிருக்கார்!! கெட்டிக்கார மன்னராச்சே.// அங்கிட்டு இருந்து ஆவி எதுவும் வீட்டுக்கு நீங்க‌ கூட்டிட்டு வரலியா..;)..;)
//பல காதல் ஜோடிகள், பல வாழ்கையை வாழ பயந்தவங்க (??!!) தைரியமா இந்த திப்பு ட்ராப் பாயிண்ட்டில் இருந்து குதிச்சுடுறாங்களாம். நமக்கு அந்த இடத்தை பார்த்தாலே பயமா இருக்கு. // என் இனமாடா நீ..;) (நீங்க‌)
//சிமெண்ட் பென்ச்ல உட்கார்ந்து நாயும், குரங்கும் பண்ணும் அட்டகாசத்தை, அவர்கள் விளையாட்டை வேடிக்கை பார்த்தாலே மனசு லேசாகிடும். // நாம‌ செய்யற‌ அட்டகாசத்தை விட‌ சூப்பரா இருக்கும்னு சொல்லுங்க‌..;)
//நந்திஹில்ஸ் (நந்திமலை) நிஜமாவே சென்று வருபவர்கள் மனதுக்கு ஆனந்தம் தரும் “ஆனந்தகிரி// உண்மை தான், படிச்ச‌ உடனே எனக்கும் மனசுக்கு ஆனந்தமா தான் இருந்தது.
நல்ல‌ பதிவு.. இனியும் தொடர‌ வாழ்த்துக்கள் வனி..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நந்திமலைக்கு எங்களையும் செலவி இல்லாம கூப்பிட்டுபோய் காமிச்சுட்டிங்க. எனக்கு இதுமாதிரியான பழமையான வரலாறு நிறைந்த இடம்னாலே ரொம்ப பிடிக்கும்.போக முடியலனாலும் இப்ப வனி மூலமா பார்த்தாச்சு.

Be simple be sample

நந்திமலைக்கு எங்களையும் செலவி இல்லாம கூப்பிட்டுபோய் காமிச்சுட்டிங்க. எனக்கு இதுமாதிரியான பழமையான வரலாறு நிறைந்த இடம்னாலே ரொம்ப பிடிக்கும்.போக முடியலனாலும் இப்ப வனி மூலமா பார்த்தாச்சு.

Be simple be sample

Nenga engala niraiya place ku free a tour ku kootitu porenga, eppa than siriya ku ponen, eppo ananthagiri ku. super.

ரம்யா ஜெயராமன்

திராட்சை மட்டும் மிஸ்ஸிங்... மத்தபடி நீங்க சொன்ன எல்லா இடமும் கண் முன்னே விரிந்தது... நன்றி... அருமையான பகிர்வு

சூப்பர்ப் வனி. இதெல்லாம் நான் பார்க்கல. ;( அன்று பூனைக்குட்டிப் பாதத்தோடு உலாவினதுல பல இடங்கள் மிஸ்ட். ஆனால் திப்பு சுல்தான் தொடர்பான வேறு சில இடங்கள் பார்த்தேன். மிஸ் ஆகினதுல்லாம் உங்கள் எழுத்தில் பார்க்க ஆவல்.

‍- இமா க்றிஸ்

முதல் வருகைக்கும் பதிவுக்கும் தேன்க்ஸ்பா... ;) ஊருக்கு வந்தா சொல்லுங்க, நானே கூட்டிட்டு போறேன். நீங்க சொன்ன பிறகு தான் யோசிக்கிறேன் சுமி... இம்புட்டு பேர் அல்ப ஆயுசுல போயிருக்காங்க... ஆவிகீவி இருக்குமோ?? ஆத்தி!!! யோசிக்கவே இல்லையே!! ;(

// என் இனமாடா நீ..;) (நீங்க‌)// - ஹஹஹா... நானெல்லாம் சாக பயந்தே வாழுறவளாக்கும் :)

//நாம‌ செய்யற‌ அட்டகாசத்தை விட‌ சூப்பரா இருக்கும்னு சொல்லுங்க‌..;)// - அந்த இடம் ஒரு குட்டி அறுசுவை சுமி... ஒன்னை ஒன்னு இழுக்குறதும், சண்டை போடுறதும், அப்பறம் ஒன்னா விளையாடுறதும்... ஹஹஹா... அப்ப கூட பாருங்க, அறுசுவை தான் ஃபர்ஸ்ட், அது நெக்ஸ்ட் தான். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேன்க்ஸ்மா... ;) எனக்கும் இது போல பழமையும் சிறப்பும் மிக்க இடங்கள் தான் ஆர்வம் அதிகம். அவங்க வாழ்க்கை முறை எப்படி இருந்துதுன்னு தெரிஞ்சுக்க ரொம்பவே பிடிக்கும். பிற்காலத்தில் நம்மை பற்றியும் இப்படி யாராவது ஆராய்ச்சி பண்ணுவாங்களோ?? :P [அம்புட்டு பெரிய மஹாத்மாவா நீன்னு கேட்கப்புடாது]

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிரியா இன்னும் முடியல... இன்னும் அங்கையே இருங்க, வந்துடாதீங்க. ;) இது நடுவுல இந்தியா விசிட்னு வெச்சுக்கங்க. நன்றி ரம்யா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் எவ்வளவோ கேட்டேன், திராட்சை தோட்டம் ஒன்றை இறங்கி பார்க்கனும்னு. இவர் குட்டீஸ் கூட அதெல்லாம் சாஃப் இல்லன்னு நோ சொல்லிட்டார். அடுத்த முறை அங்க போனா நிச்சயம் எடுத்துட்டுவரேன் அந்த ஃபோட்டோஸ். :) இன்னும் அங்கே தி க்ரேட் இஞ்சினியர் விஷ்வேஸ்வரய்யாவோட ஊர் இருக்கே... பார்க்க போவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க வந்தப்போ உள் நாட்டு சதி ;) அதான் பார்க்க முடியாம போச்சு. டோண்ட் வொரி... அடுத்த முறை நேரில் பார்த்துடலாம். நீங்க எதை பார்த்தீங்க இமா? மைசூர்? பெங்களூர் சம்மர் பேலஸ்? இன்னும் நான் சம்மர் பேலஸ் பார்த்ததில்லை. இவர் சொல்லிருக்கார் டீக் வுட்ல ஆனதுன்னு. நிச்சயம் அடுத்த சனி ஞாயிறு அங்க தான். ;) கதையோடும் ஃபோட்டோவோடும் வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி,பழய ஞாபகங்களை திரும்ப கொண்டு வந்ததற்கு.நாங்களும் நந்தி ஹில்ஸ் போனோம்,ஆனால் இவ்வளவு விஷயங்கள் இப்ப என் ஞாபகத்தில் இல்லை.ஆனா நந்தி ஹில்ஸ்யை நினைத்தாலே எனக்கு அங்க இருக்கிற குரங்குங்களோட சேட்டைதான் ஞாபகத்துக்கு வரும்,கையில் எதை வச்சிருந்தாலும் பிடிங்கிட்டு ஓடிடும் அவ்வளவு சேட்டை.வழியெல்லாம் திராட்சை தோட்டம் மிக அழகு,நிறைய வாங்கி வந்ததாக நியாபகம்.

திப்பு சுல்தான் மன்னரை பற்றி 10th சமூக அறிவியில் பாடத்தில் படித்தது அதன் பிறகு இன்றைக்கு தான் படிக்கிறேன், திப்பு ட்ராப் நினைதாலே பயங்கரமாக உள்ளது, அந்த மலையில் இருந்து விழுந்தால் தப்பிக்கேவே வாய்ப்பு இல்லை போல.

திப்பு லாட்ஜ் அருமையான் சொன்னீங்க போங்க நேரு தங்கினா நேரு நிலையா, காந்தி தங்கினா காந்தி நிலையா இப்ப இது நேரு நிலையா வா அல்லது காந்தி நிலையா வா?
திப்பு சுல்தான் விடிமுறைக்கு தங்கினால் ஓ கே மற்றவர்களை தள்ளி விடவும் அங்கதான் தங்குவாரா.
மண்டபம் எல்லாம் அழகாக தான் உள்ளது.

ஹாய்,

/////குரங்கும்,நாயும் பன்ற‌ அட்டகாசத்தை/////ரசனையான‌ வார்த்தைகள்.மக்கள் செய்யும் சேட்டைகள் விட‌ விலங்குகளின் சேட்டைகளை ரசிப்பது மனதுக்கு இதமாக‌ இருக்கும்.உங்க‌ ரசனையை நானும் ரசித்தேன்.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

மிக்க நன்றி :) அங்க குரங்கு குட்டீஸ் விளையாடுறதை உட்கார்ந்து பார்த்துட்டு இருந்தேன்... எப்பவும் அது மறக்கவே முடியாது, அத்தனை அழகு அந்த குட்டீஸ். நீங்க சொன்ன மாதிரி குற்றாலம் பக்கமெல்லாம் பிடிங்கிட்டு போயிரும், நான் இம்முறை அதை எல்லாம் மறந்தே போனேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அப்போ படிச்சதை இப்போ நியாபகம் வெச்சு சொல்றீங்க!!! நமக்கு கடைசி செமஸ்டரில் MCA’ல என்ன படிச்சேன்னே நியாபகம் இல்ல ;)

மன்னர்கள் என்ன தான் கொடூரமா கொலை பண்ணதா நமக்கு இப்போ தோன்றினாலும் அந்த காலத்தில் அவர்கள் வெச்சது தானே சட்டம்? எல்ல அரசர்களும் பண்ணது தானே. எப்படியோ இவர் ஆங்கிலேயகர்ளுக்கு எதிரா ரொம்பவே போராடி இருக்காரே. அதனால் தானே “டைகர் ஆஃப் மைசூர்” என்று அவரை அழைக்கிறார்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) பல நேரம் மனிதன் கவலை மறப்பதே மனிதனை விட்டு இது போல மற்ற உயிரினங்களை ரசிக்கும் போது தானே?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இப்போ கர்நாடகா டூரிசம் நிறைய பண்ணிருக்காங்க. பார்க்கில் உள்ள மரங்களின் மேலே மரத்தால் கூடாரம் அமைச்சிருக்காங்க. வருபவர்கள் எல்லாம் அங்கே போய் குடும்பத்தோடு அமர்ந்து விளையாடுவதும், ஓய்வு எடுப்பதும், உணவு உண்பதும்... நிஜமாவே ஒரு லீவ் நாள் எப்படி போகுதுன்னு தெரியாம போகுதுங்க. சாலை ஓரம் அமைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் பென்ச்ல உட்கார்ந்து நாயும், குரங்கும் பண்ணும் அட்டகாசத்தை, அவர்கள் விளையாட்டை வேடிக்கை பார்த்தாலே மனசு லேசாகிடும்.//

மிக அருமை வனி இப்படியெல்லாம் சொல்லி எங்களுக்கு பார்க்கவேண்டும் என ஆசையை தூண்டுறீங்களே :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அப்பா... எம்புட்டு நாளைக்கப்பறம் அம்மணி இந்த பக்கம் வந்திருக்கீங்க :) அப்படியே பெங்களூர் பக்கமும் வாங்க ;) சுத்திப்பார்ப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பயணம் பற்றி படிக்க ரொம்ப அருமையா இருக்குங்க. ..
இடங்கள் ஒவ்வொன்றும் அருமைங்...
ரொம்ப நல்ல தகவல்கள்... நன்றிங் :-)

நட்புடன்
குணா

மிக்க நன்றிங்க :) உங்க ப்ளாக் ரொம்ப நாளா அப்டேட் பண்ணாம விட்டிருக்கீங்களே... வாங்க சீக்கிரம் எப்போதும் போல நல்ல தகவலோடு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா