ஈசி கார்ன் தோசை

தேதி: July 14, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

கார்ன் கெர்னெல் - 3 கப்
அரிசி மாவு - ஒரு கப்
கொத்தமல்லித் தழை - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - ஒரு பல்
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

கார்னுடன் காய்ந்த மிளகாய், சோம்பு மற்றும் பூண்டு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அத்துடன் அரிசி மாவு, சீரகம், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
தோசை கல்லைச் சூடாக்கி, கரைத்த மாவை தோசையாக ஊற்றி வேகவிடவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு, மறுபுறத்தையும் வேகவிடவும். சிவந்ததும் எடுக்கவும். ஈசி கார்ன் தோசை ரெடி. சட்னி இல்லாமலேயே சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கார்ன் தோசை சூப்பர், படத்தில் பார்ப்பதற்கு நல்ல மொறு மொறுப்பாக உள்ளது. வித்தியசமான குறிப்பு.

ungal கார்ன் dosai supper,athil yanakku oru santegam, intha கார்ன் கெர்னெல்கெர்னெல்
yenpathai oora vaikka venduma illai vega vaikkanuma , fresh கார்ன் -na illa ularnthatha

குறிப்பு வெளியிட்ட டீமிற்க்கு நன்றி.
பாரதி பதிவிற்க்கு நன்றி. Dhivyashankar நான் யூஸ் பன்னது டின்னில் உள்ள கெர்னெல் அது அப்படியே சேர்த்து அரைத்தேன்.