தேங்காய் கோழிக்கறி

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - அரை கிலோ
தேங்காய் துருவியது - அரை கப்
வேர்க்கடலை - அரை கப்
பச்சை மிளகு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
தனியா - 2 தேக்கரண்டி
பெரிஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
லவங்கம் - 4
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
உப்பு - 2 கரண்டி
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 3


 

வாணலியில் ஒரு கரண்டி நெய் விட்டு அதில் மிளகாய், தனியா, பெருஞ்சீரகம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்கவும்.
தேங்காய் துருவல் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியே சிவக்க வறுத்து எடுக்கவும்.
பச்சை மிளகை விழுதாக அரைத்துக் கொள்ளவும். சிக்கனை சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
இப்போது வாணலியை சூடாக்கி அதில் வெண்ணெய் விட்டு உருக்கவும்.
பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகளையும் மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்.
அத்துடன் பொடித்த மசால் பொடி, மிளகு விழுது, வறுத்த தேங்காய் துருவல், ஒன்றிரண்டாக உடைத்த வேர்கடலை மற்றும் உப்பு சேர்க்கவும்.
தேவையான தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவிட்டு, நெய் பிரியும் தருணத்தில் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்