சிக்கன் பேக் வித் கோஸ்

தேதி: July 14, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 5 பல்
இளசான சிறிய முட்டைக்கோஸ் - ஒன்று
இளசான வெங்காயத்தாள் - 20
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 5
கேரட் துருவல் - கால் கப்
முட்டைக்கோஸ் துருவல் - 2 மேசைக்கரண்டி
குடைமிளகாய் - பாதி
பனீர் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - ஒன்று
பாப்ரிகா பவுடர் (அல்லது) மிளகு தூள் - அரை தேக்கரண்டி
சோயா சாஸ் - 3 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
உப்புத் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

சிக்கனை நன்கு சுத்தம் செய்து, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
முட்டைக்கோஸ் இதழ்களை தனித்தனியாக எடுத்து 10 நிமிடங்கள் கொதி நீரில் போட்டு மூடி வைக்கவும்.
10 நிமிடங்களுக்கு பிறகு எடுத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும். காம்பின் அருகில் மொத்தமாக இருந்தால் லேசாக கத்தியால் சீவிவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு முட்டைக்கோஸ் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய குடைமிளகாய், பனீர் துருவல், அரைத்த சிக்கன், பாப்ரிகா (அல்லது) மிளகு தூள், உப்பு, சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்துப் பிரட்டவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கவும். (நன்கு வதக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை).
கொதி நீரில் போட்டு எடுத்த முட்டைக்கோஸ் இதழை எடுத்து, அதனுள்ளே சிக்கன் கலவையை வைத்து மூட்டை போல் மடித்து வெங்காயத் தாளைச் சுற்றி முடிச்சுப் போட்டு வைக்கவும்.
மீதமுள்ள கோஸ் இதழ்களிலும் இதே போல சிக்கன் கலவையை வைத்துத் தயார் செய்து, இட்லி பானையில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான சிக்கன் பேக் வித் கோஸ் ரெடி.

சிக்கனை அதிகமாக வதக்கினால், வறண்டுவிடும். நன்கு ஜூஸியாக இருக்க வேண்டுமென்றால், அனைத்தும் ஒன்றாக சேரும் வரை பிரட்டி எடுத்தால் போதும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிக்கன் பேக் வித் கோஸ் சூப்பர், செய்முறையும் எளிமையாக உள்ளது.