தேதி: July 15, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தினை அரிசி - அரை கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
பெருங்காயம் - தாளிக்க
தினை அரிசியை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாகக் கொதிக்கத் துவங்கியதும் தினை அரிசியைச் சேர்த்து கலந்து, மீண்டும் கொதி வந்ததும் மிதமான தீயில் வைத்து வேகவிடவும். அரிசி (தண்ணீரை ஈர்த்து) வேகத் துவங்கியதும் ஒரு முறை கிளறிவிட்டு சிறு தீயில் வைத்து மூடி வேகவிடவும்.

சுலபமாகச் செய்யக்கூடிய சுவையான தினை அரிசி உப்புமா தயார்.

ரவை போல இல்லாமல் அரிசி வேக சற்று அதிகமாக தண்ணீர் தேவைப்படும்.
Comments
வனிதா அக்கா
எனக்கு அரிசி உப்புமா பிடிக்கும்.. அடுத்த முறை தினை அரிசி உப்புமா செய்துட்டு சொல்றேன்.. அரை கப் தினை அரிசிக்கு 2 கப் தண்ணீர் சரியா இருக்குமா? இன்னும் கூட தேவைப்படுமா?
கலை
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கலை
மிக்க நன்றி :) நான் ஒரு முறை 3 வெச்சேங்க... அப்பறம் அது வத்தவிடவே நேரமாயிடுச்சு ;) 2 - 2.5 கப் தாராளமா போதும். பொடியா இருக்கிறதால சீக்கிரம் வெந்துடும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
உப்புமா என்றாலே அருமையாக தான் இருக்கும் அதிலும் தினை அரிசி உப்புமா சூப்பர், செய்முறையும் எளிமையாக தான் உள்ளது, தினை அரிசி வாங்கி செய்த பிறகு கண்டிப்பாக உங்களிடம் தெரிவிக்கிறேன்.
வனி
அவசியம் ட்ரை செய்து பார்க்கிறேன்
சூப்பர்
என்றும் அன்புடன்,
கவிதா
நன்றி
பாலபாரதி... மிக்க நன்றி :) செய்து பார்த்து சொல்லுங்க.
கவிதா... மிக்க நன்றி :) வெகு நாளுக்கு பின் வந்திருக்கீங்க. மகிழ்ச்சியா இருக்கு பார்க்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா அக்கா
உப்புமா செய்து பார்த்தேன்.. நல்லா இருந்துச்சு.. தண்ணீர் 2.5 வைச்சேன்.. சரியா இருந்துச்சு...
நான் ட்ரை பண்ணின முதல் தடவையே கரெக்டா வந்தது இந்த உப்ப்மா தான்.. ரொம்ப தேங்க்ஸ் வனி அக்கா...
கலை
கலை
செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கலை :) மகிழ்ச்சி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
மிகவும் அருமையான சத்தான உணவு
மிகவும் அருமையான சத்தான உணவு நன்றி....