MOTTO

En iniya thozhigale, enakku neengal oru udhavi seiyya vendum. Ennavendral, namadhu india thesathirkku thagunthaar pola oru motto vendum. Tamil allathu english. Idhu oru competition. So avanga englishla motto thaan prefer pandranga. Andha motto kandippa engayum use pannadhabadiyum, and thesa unarvudanum irukka vendum. Ex.SERVICE LOYALTY.. Please friends enakku udhavungal .neengalam irukkira nambikkayilthaan naan ithai win panni kaanbipen endru en kanavaridam koori irukkuiren. Udhavi seiyungal tholigale.

:-)
//kandippa engayum use pannadhabadiyum// போட்டி என்றால் அப்படித்தான்.

சரியானபடி சொல்லப் போனால்.... நீங்கள் உங்கள் சிந்தனையில் உதித்த வாசகத்தைத்தான் கொடுக்க வேண்டும். இப்படி இன்னொருவரிடம் கேட்டு... அதுவும் இணையத்தில் கேட்டு அனுப்புவது சரியாக இராது என்பது என் அபிப்பிராயம். வெற்றி பெற்றாலும் அந்த வெற்றிக்கு நீங்கள் சொந்தம் கொண்டாடுவது எப்படி!

இப்போதெல்லாம் எதுவானாலும் முதலில் இணையத்தில்தான் தேடுகிறோம். அப்படி போட்டி நடுவர்களும் தேடுகிறார்கள் என்று வைப்போம். நிச்சயம் இங்கு உங்களுக்குக் கிடைக்கும் பதில்கள் எல்லாம் கண் முன் போய் நிற்கும். இதையே எங்கோ பயன்படுத்தியது என்பதற்கான ஆதாரமாகக் கொள்ளலாம் அல்லவா!

//neengalam irukkira nambikkayilthaan naan ithai win panni kaanbipen// :-)
போட்டி என்று வந்தால்... போட்டியாக இருக்க வேண்டும். உங்கள் மேல் நம்பிக்கை வைத்து உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள். அமைதியாக ஒரு இடத்தில் பேப்பரும் பென்னுமாக அமருங்கள். காற்றோட்டமான இடம்... தோட்டத்தில் ஒரு மூலை... எங்காவது. மனதில் தோன்றுவதையெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து நல்லதாக ஏதாவது க்ளிக் ஆகும். இங்கு வரும் பதில்களைப் படியுங்கள். அவையும் உங்கள் சிந்தனையைத் தூண்டி விடும். ஆனால் கிடைக்கும் எதையும் மாற்றங்களில்லாமல் அப்படியே பயன்படுத்த வேண்டாம்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்