தேதி: July 16, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ஓட்ஸ் - ஒரு கப்
அரிசி மாவு - அரை கப்
சின்ன வெங்காயம் - 6
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
இட்லிப் பொடி - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு பொடித்து, அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, சூடான தண்ணீர் விட்டு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை கைகளில் எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

உருட்டிய உருண்டைகளை இட்லி பானையில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். (அல்லது அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் தண்ணீர் வடித்தும் வைத்துக் கொள்ளலாம்).

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு தாளித்து, சிவந்ததும் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் வேக வைத்த உருண்டைகளைச் சேர்த்துக் கிளறவும்.

இட்லிப் பொடி மற்றும் தேங்காய் துருவல் தூவி நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.

சுவையான ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை தயார்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பிபி மற்றும் இருதய நோயாளிகளுக்கு தேங்காய் துருவல் சேர்க்காமல் செய்யலாம். மாலை நேர டிபனுக்கு சிறந்ததாகும்.
ஓட்ஸ் இருப்பதால் கொலஸ்ட்ரால் சேராது. டயட்டில் இருப்பவர்களுக்கும் சிறந்த உணவு இது.
Comments
செந்தமிழ்செல்வி
ஓட்ஸ் கொழுக்கட்டை ஆரோக்கியமான குறிப்பு சூப்பர்.
selvi akka
நீங்க நிறைய ஆரோக்யமான சூப்பர் குறிப்பு குடுக்கறீங்க. ஈஸியா இருக்கு. நான் கண்டிப்பா செய்றேன். சூப்பர் அக்கா. வாழ்துக்கள்.
எல்லாம் சில காலம்.....
வாழ்த்துக்கள்
ஆரோக்கிய குறிப்பு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா